செர்பியா நாட்டின் பைரோட் நகரில் இருந்து அம்மோனியா வாயுவை ஏற்றிக் கொண்டு சென்றிருந்த சரக்கு ரயில் எதிர்பாராத விதமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த அம்மோனியா வாயு கசிந்து காற்றில் கலந்தது. இந்நிலையில் விஷவாயு கலந்த காற்றை சுவாசித்த 51 பேருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: விஷவாயு
விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]
சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர். சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு […]
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியை தூய்மை செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகில் திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதியில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டில் 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக இறங்கியுள்ளார். இந்நிலையில் விஷ வாயு தாக்கி அவர் மயங்கி விழுந்திருக்கிறார். இதன் காரணமாக அவரது மகன் பிரவீன்குமார் மற்றும் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் போன்றோரும் […]
சென்னை திருமுல்லைவாயலில் சிவசக்தி நகரில் சம்பிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப் குமார் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த அதிக அளவிலான நச்சுப் புகையை வாசித்ததால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சோனிபட் ஹூண்டாய் மெட்டல் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொழிற்சாலையில் உள்ள உலோகங்களை உருக்கும் உலையிலிருந்து நச்சுவாயு வெளிவந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த நச்சுவாயு தாக்கியதில் 30 பெண்கள் மயங்கி விழுந்து உள்ளனர். இவர்கள் […]
தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதும், அதனால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் ராஜன் சையல் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துக்குமார், அப்பு ஆகிய இருவரும் இறங்கி சுத்தம் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாண கழிவிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், அவரது வீட்டின் கீழ் தொட்டில் ஒன்றை கட்டி அதில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் ராஜேந்திரனும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கூலி தொழிலாளி ஒருவரும் அந்தத் தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி […]
கால்வாயை சுத்தம் செய்ய வந்த தொழிலாளர் இருவர் உயிரிழந்தது பரபரப்பை எற்படுத்துயுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு பின் ராணுவ முகாம் உள்ளது.அங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. அன்னை சத்யா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ்,சந்தோஷ்,ராஜா,மணிவண்ணன்,பன்னீர்செல்வம் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 5 நபரும் மயங்கி விழுந்தனர். இதை அடுத்து கோட்டை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 5 நபரையும் மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு […]
விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]
மருத்துவமனையில் நோயாளிகள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மருத்துவமனையில் விஷவாயு தாக்கியதில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென மோனாக்சைடு கசிந்துள்ளது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு அனைவரும் சுயநினைவை இழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து மற்றவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்நிலையில் மருத்துவமனையில் விஷ வாயு கசிந்து நோயாளிகள் உயிரிழந்துள […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கியதால் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் மற்றும் சுனில் என்ற இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் […]
தூத்துக்குடி மாவட்டம் காரைக்குடியில் விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதாக 4 பேரும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை விவகாரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை தாக்கிய கொடிய விஷவாயு: நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை மக்கள் அனைவரும் மயங்கி விழுகிறார்கள். ஏராளமானோர் தன்னுடைய வீட்டு வாசலிலும், அங்கு ஓடும் சாக்கடைகளில் விழுந்து கிடக்கிறார்கள். மேலும் சிலர் பேர் கிணற்றில் விழுந்து கிடக்கிறார்கள், சிலர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து விட்டார்கள். இவ்வாறு ஆந்திராவில் இன்று விடியற்காலை அதிர்ச்சி சம்பவம் நடந்தது. ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? விசாகப்பட்டினத்தில் விஷவாயுக் கசிவால் கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழும் மக்கள். மயங்கி விழுந்ததில் பலர் மரணம் அதாவது 10க்கும் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]
விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. […]