Categories
தேசிய செய்திகள்

சாகர் ராணா தன்கட்டை சரமாரியாக தாக்கிய சுஷில் குமார்…. வெளியான வீடியோ…!!

சாகர் ராணா தான்கட்டை மல்யுத்த வீரர் சுஷில் குமார் அடிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய… இளைஞர்களை அடித்து, இழுத்துச் சென்ற கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு இளைஞர்களை தரதரவென அடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களிலும் பரிசோதனை தீவிரப் படுத்தப் பட்டு வருகின்றது. ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்பெட் என்ற பகுதியில் கோவில் முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

செல்லம்மா செல்லம்மா…. மாஸ்க்க கொஞ்சம் போடும்மா…. அட்டகாசமான கொரோனா விழிப்புணர்வு வீடியோ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “செல்லம்மா செல்லம்மா சோசியல் […]

Categories
தேசிய செய்திகள்

வாகனசோதனைக்கு பயந்து அதிவேகமாக வந்த இளைஞர்கள்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் வாகன பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்கள் செக்போஸ்டில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களில் பலரை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சில இளைஞர்கள் அவர்களிடமிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ…. தமிழக அரசு வெளியீடு….!!!

சிவகார்த்திகேயனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து அரசாங்கமும், திரை பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் கொரோனா குறித்து விழிப்புணர்வை அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவிக்கு சென்ற நபர்… சட்டென எட்டி பார்த்த சிறுத்தை… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் பகுதியில் சிறுத்தை நடந்து  சென்ற வீடியோவை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்   . தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மலைபகுதியில் பல வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி பகுதிக்கு ஒருவர் சென்றார். அப்போது அந்த அருவியின் மேல் பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அந்த சிறுத்தையை பார்த்தவுடன் மரத்தில் நின்றுகொண்டுயிருந்த குரங்குகள் திடீரென சத்தம் போட ஆரம்பித்ததால் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: வெற்றிமாறன் வெளியிட்ட கண்ணீர் வீடியோ…!!

நடிகர் நிதீஷ் வீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றின் காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, ஆசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து நடிகர் நிதீஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரைப்பட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்று… அடக்கம் செய்த தந்தை… நெஞ்சைஉலுக்கும் சம்பவம்..!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 13 வயது மகளை தோளில் சுமந்தபடி அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் நோயாளிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திலீப் என்பவரின் மகள் சோனுக்கு அஜீரண கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட்டி நாயை வைத்து ஆண்ட்ரியா செய்யும் உடற்பயிற்சி…. வைரலாகும் கியூட் வீடியோ…!!!

குட்டி நாயை வைத்து நடிகை ஆண்ட்ரியா செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது ஆண்ட்ரியா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிங்க் நிற உடையில் வலம் வரும் ராய் லட்சுமி…. ரசிகர்களை கவர்ந்த வீடியோ…!!!

பிரபல நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்த ராய்லட்சுமி தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி அவ்வப்போது தனது கவர்ச்சியான […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப வறுமை… படிப்பை நிறுத்திவிட்டு சாக்ஸ் விற்ற 10 வயது சிறுவன்… உதவிக்கரம் நீட்டிய முதல்வர்..!!

பஞ்சாப் மாநிலத்தில் டிராபிக்கில் சாக்ஸ் விற்ற சிறுவனை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார் அம்மாநில முதல்வர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் டிராபிக்கில் 10 வயது சிறுவன் ஒருவன் சாக்ஸ் விற்று வந்தான். மேலும் அவரது தந்தையும் சாக்ஸ் வியாபாரி தான். இவரது வீட்டில் தாய் மற்றும் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர் . வாடகை வீட்டில் வசித்து வரும் இந்த சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை தொழில் செய்து வந்துள்ளார். இதைக் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த பரபரப்பு வீடியோ…. பதற வைக்கும் திமுகவினர்…. அஞ்சி ஓடும் மக்கள்…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

வீடியோ வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்… என்ன வீடியோ தெரியுமா…? நீங்களே பாருங்க…!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி நாம் இதில் பார்ப்போம். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரஜினி பாட்டு பாடி மனைவியிடம் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்…. வைரலாகும் வீடியோ…!!!

ரஜினியின் பாடலுக்கு தனுஷ் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா உணவகத்தை…. மீண்டும் சரி செய்த திமுகவினர்… வைரலாகும் வீடியோ…!!

அம்மா உணவகத்தை திமுகவினர் மீண்டும் சரிசெய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 158 இடங்களில் வெற்றிபெற்ற திமுகவினர் ஆட்சி அமைக்க உள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் பல இடங்களில் பட்டாசு வெடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினரால் சூறையாடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நம்மையும் காப்போம்…! நாட்டையும் காப்போம்…. ஸ்டாலினின் வீடியோ….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிரிக்கெட் விளையாடும் ‘அந்தகன்’ படக்குழுவினர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘அந்தாதூன்’. இத்திரைப்படத்தை தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் பிரசாந்த் நடித்து வருகிறார்.மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தியாகராஜன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் அந்தகன் […]

Categories
உலக செய்திகள்

நடு ரோட்டில் காவல்துறை அதிகாரிக்கு முத்தம்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டனில் காவல்துறை அதிகாரி மற்றும் பெண் அதிகாரி இருவரும் வாகனத்திற்குள் முத்தமிட்டு கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனிலுள்ள Blackburnல் இருக்கும் Carl Fogherty Way என்ற பகுதியில் வாகனத்திற்குள் காவல்துறை அதிகாரியும், ஒரு பெண் அதிகாரியும் முத்தமிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதன்பின்பு அந்த பெண் அதிகாரி வாகனத்திலிருந்து வெளியே வந்து டிரைவர் சீட்டிற்கு அருகில் வந்து மீண்டும் முத்தமிடுகிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/21/8278141049881643874/480x270_MP4_8278141049881643874.mp4 மேலும் அந்தப் பெண் அதிகாரி அப்போது பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை அங்கு இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் அணியும் படி… சி.எஸ்.கே வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ…!!

மாஸ்க் அணியும் படி சி.எஸ்.கே வீரர்கள் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அனைவரையும் மாஸ்க் அணியும் படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, ராபின் உத்தப்பா, ஷதுல் தாக்கூர், சாய் கிஷோர், ஜகதீசன் உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்க் அணியின் வீரர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணைந்த பிக்பாஸ் ஜோடி…. இணையத்தில் பரவும் வீடியோ…. குவியும் லைக்ஸ்….!!!

பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் சில படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்த சீசனில் பெரிதும் பேசப்பட்ட ஜோடிகள் தான் பாலாஜி முருகதாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை…. தமிழ் கற்றுக் கொடுத்ததாக உருக்கம்…. வைரலாகும் வீடியோ….!!!

மறைந்த விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விவேக் கடைசியாக இணைந்து நடித்த நடிகை தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.அதன்படி லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

நொடிப்பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. A Good Samaritan: At Vangani station of Central Railway, Pointsman Mr. […]

Categories
மாநில செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய நபர் ..!!வெளியான பரபரப்பு வீடியோ ..!!

மகாராஷ்டிராவில்  ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை  காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றது . மும்பையில் வாங்கனி ரயில்வே நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சியை இந்திய ரயில்வே அமைச்சரான பியூஷ்  கோயல் அவரின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தன்னுயிரை பொறுப்பேற்காமல் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரான மயூர் செல்கியின் துணிச்சலான செயலை கண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி… கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ…!!

ஜனங்களின் கலைஞருக்கு என் புகழஞ்சலி என்று கூறி உருக்கமான வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]

Categories
உலக செய்திகள்

13 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோவை வெளியிட்ட காவல்துறையினர் ..!!எந்த நாட்டில் தெரியுமா ?

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை  காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. சிகாகோவை  சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவருக்கு இப்படி ஒரு திறமையா…? அசந்து போன ரசிகர்கள்…. குவியும் பாராட்டு…!!!

பிரபல நடிகை நிவேதா தாமஸின் புது வித திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பிரபல நடிகையாக இருப்பவர் நிவேதா தாமஸ். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்’ […]

Categories
கிரிக்கெட் தமிழ் சினிமா விளையாட்டு

செம மாஸ்…. ‘வாத்தி கம்மிங்’…. ஆட்டம் போட்ட வார்னர்….. வைரலாகும் வீடியோ …!!

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘வாத்தி கம்மிங்’ மிகவும் டிரெண்ட் ஆனது. இப்பாடலுக்கு பல திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரெனப் பாய்ந்த மயில்…. பிரபல நடிகை அலறல்…. இணையத்தைக் கலக்கும் வீடியோ…!!!

பிரபல நடிகை மீது மயில் பாய்ந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டிகங்கனா ஒரு மயிலின் அருகே சென்றுள்ளார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய்யின் முதல் ஆட்டோகிராப்…. எப்போது தெரியுமா…? அவரே சொன்ன பதில்…!!!

தளபதி விஜய் ஆட்டோகிராப் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வரும் மே2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்யின் வீடியோ தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதே போல் விஜய்யின் பழைய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் தனது முதல் ஆட்டோகிராஃப் பற்றி கூறியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
உலக செய்திகள்

வீடியோ கேம் விளையாடும் குரங்கு… எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ….!!!

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆத்திரம் அடைந்த ரசிகர்கள்…. அடித்து நொறுக்கும் தியேட்டர்…. காட்டுத்தீ போல் பரவும் வீடியோ…!!!

ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்கும் காட்சி இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதேபோல இப்படத்தை தெலுங்கில் வக்கீல் ஷாப் என்ற தலைப்பில் இயக்கியுள்ளனர். பவன் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. முன்னணி நடிகரின் திரைப்படம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா…. குவியும் லைக்ஸ்…!!!

வித்தியாசமாக ஒர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியாவின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான கண்ட நாள் முதல் என்கின்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இதை தொடர்ந்து மங்காத்தா, விஸ்வரூபம், வடச்சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.அந்த வகையில் அவர் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

க்யூட்டாக பியானோ வாசிக்கும் பிரபலத்தின் குழந்தை…. வைரலாகும் வீடியோ…!!

நடிகை எமி ஜாக்சனின் குழந்தை க்யூட்டாக பியானோ வாசிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து ஐ,2.0 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில் எமி ஜாக்சன் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் எமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விராட் கோலியை தூக்கிய அனுஷ்கா ஷர்மா…. வைரலாகும் க்யூட் வீடியோ…!!

நடிகை அனுஷ்கா ஷர்மா விராட் கோலியை தூக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் அகமதாபாத் விமான நிலையத்தில் குழந்தையுடன் அனுஷ்கா வர்மா முன்னே செல்லும் போது பின்னால் வந்த விராட் கோலி பைகள் அனைத்தையும் சுமந்து வந்த புகைப்படம் […]

Categories
உலக செய்திகள்

வாசற்படியில் இருந்த சாக்லேட்டும் கடிதமும் …ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தோம்… லைக்கை அள்ளும் வைரல் வீடியோ…!!!

இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும்  ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது […]

Categories
உலக செய்திகள்

வேலைக்கு போகும் போது தன்னுடன் குழந்தையை கூடையில் அழைத்து செல்லும் தந்தை ..வெளியான வைரல் வீடியோ ..!!

சீனாவில் வேலைக்கு செல்லும் ஒருவர் தன் குழந்தையைத் தன்னுடன் கூடைக்குள் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த லீ என்பவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையை  செய்து வருகிறார். அவர் தன்னுடன் தனது 2 வயதான Fie ‘er எனும் தன் மகளையும் வேலைக்கு செல்லும் போது வாகனத்தில் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார் .மேலும் fie 5 மாத குழந்தையாக இருக்கும் போதே […]

Categories
உலக செய்திகள்

இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சிய ஜார்ஜ் பிளாய்டு …வைரலாக பரவி வரும் வீடியோ காட்சிகள் ..!!

அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம்’ நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ் ‘என்று கெஞ்சிய காட்சிகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் போலீசுக்கும்,இனவாதத்திற்கும் இடையில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மிநீயாபொலிஸ்  நீதிமன்றத்தில் அவர் கொல்லப்பட்டதற்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமஸ் லேன் ஜே, அலெக்சாண்டர் குயெங் மற்றும் டோ தோ ஆகியோர் தான்  ஜார்ஜை கைது செய்த அதிகாரிகள். அவர்களின்  உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம்…. வைரலாகும் வீடியோ…!!

பிரபல இசையமைப்பாளர் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதை தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இவர் தற்போது வெளியாக உள்ள கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து விக்ரமின் சியான்60 படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

படுக்கையறையில் இருந்த பதுங்கு குழி… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் படுக்கை அறைக்கு கீழே பதுங்கு குழியை கண்டு பெண் ஓருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அமெரிக்காவில் ஜெனிபர் லிட்டில் என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி  வருகிறார். அவருக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக   இருந்துள்ளது. அதனால் கடந்த 1951 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடு ஒன்றை  வாங்கி அதில்  தற்போது  வசித்துவருகிறார் .அந்த வீட்டில்  அவரது படுக்கை அறையில்  ஒரு சாக்கடை மூடி இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் கிட்டத்தட்ட 98 மணிநேர போராட்டத்திற்கு பிறகு….மிகப்பெரிய சரக்கு கப்பல் மிதக்கவைக்கப்பட்டது ..!!வெளியான வீடியோ காட்சிகள் .!!

எகிப்தில் சூயஸ் கால்வாய் குறுக்கே மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எவர்கிவன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் உலகளவில் சரக்கு போக்குவரத்த்தில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. Another great shot of the refloating!#Suez #SuezBLOCKED #EVERGIVEN #Evergreen #Egypt pic.twitter.com/amRCzK1eqi — Jeff Gibson (@GibbyMT) March 29, 2021 அந்த கப்பலை மிதக்க […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில்… வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வைரல் வீடியோ..!!

தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தொகுதியில் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அதிலும் நடிகை குஷ்பூ தமிழகத்தில் தாமரையை எப்படி மலர வைப்பது என செய்து காட்டியது. மறுபுறம் […]

Categories
உலக செய்திகள்

“வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட சாக்கடை மூடி”… மூடிக்குள் என்ன இருந்தது தெரியுமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள வீட்டிற்குள் பழங்காலத்து பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் Jennifer Little என்ற பெண் எஸ்டேட் மேலாளராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் 1951 ஆம் ஆண்டு  கட்டப்பட்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் சாக்கடை மூடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதனை Jennifer தனது நண்பரை கொண்டு திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. மூடிக்கு கீழே இருந்தது ஒரு பதுங்கும் குழி. எதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

யானையை மனிதாபிமானம் இல்லாமல் விரட்டிய ஊர்மக்கள்… சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ..!!

யானை ஒன்ரை  ஊர்மக்கள் ஒன்றுகூடி விரட்டி  துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் யானையை ஊர்மக்கள் அனைவரும்  ஒன்றுகூடி விரட்டி துன்புறுத்திய வீடியோவை வெளியிட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார். No words!! Wondering who is the animal here 😔 pic.twitter.com/LAcY276HdX — Sudha Ramen 🇮🇳 (@SudhaRamenIFS) March 17, 2021 அந்த வீடியோவில் இரவில் யானையை ஊர்மக்கள் அனைவரும் சிறியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தற்கொலை செய்வது எப்படி…? யூட்யூபில் வீடியோ பார்த்து உயிரிழந்த இளைஞன்… சோகம்..!!

தற்கொலை செய்வது எப்படி என்று வீடியோவை பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீடர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாளாகவே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். பிறகு தனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் […]

Categories
பல்சுவை வைரல்

“மக்களே உஷார்”… இந்த காலத்துல எறும்பு கூட தங்க செயினை திருடுது… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

எறும்புகள் தங்க செயினை எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட்டு என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. முன்பெல்லாம் சிலர் வயிற்று பசிக்காக திருடுவர். ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது, ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான திருடுகின்றனர். சிறுவயதிலேயே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று கொடுத்தால் மட்டுமே திருட்டை தடுக்க முடியும். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்று கொடுக்க பெற்றோர் இருக்கின்றனர். ஆனால் எறும்புகளுக்கு…? தற்போது இணையத்தில் ஒரு வீடியோ  வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் டான்ஸ்…. கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா மேனன்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனனின் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வரியா மேனன். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “நான் சிரித்தால்” படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.  மேலும் வீரா,தமிழ் படம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது புகைப்படத்தையும் ஒர்க் அவுட் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக அமைச்சர் மீதான ஆபாச வீடியோ வெளியான தகவல்…. அதிர்ச்சி….!!

நீர்ப்பாசனத்துறை பாஜக அமைச்சர் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் பெண்ணுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. கர்நாடகா மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கும் 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்து இளம்பெண் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயல் அடித்து உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டிவிடும் நடிகர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பிரபல ஹீரோயினான கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் ஒருவர் பீட்சா ஊட்டி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது “ராங்குதே” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்துள்ளார். மேலும்  வெங்கி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவான நிதின் கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனை காதலித்தது இப்படித்தான்…. மனைவியின் அழகான காதல் கதை…!!

இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க […]

Categories

Tech |