தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதேசமயம் மக்களின் கோரிக்கைகள் உடனடியாக பரிசளிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐந்து ஊராட்சிகளின் குறைகேட்பு முகாம் நேற்று நடைபெற்றது. அந்த முகாமில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் என முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் முறையான கோரிக்கைகள் மட்டுமே […]
Tag: வீடுகள்
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அங்கு உள்ள அணைகளிலிருந்து காவிரியில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கு இருந்து உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் கடும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிந்து காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் […]
வங்காளதேசத்தில் இந்துக்களின் குடியிருப்புகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் பகுதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் அவர்களின் குடியிருப்புகளையும், கடைகளையும் அடித்து நொறுக்கி சூறையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது மதச்சார்பில்லாத நாட்டில் இவ்வாறான வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாதது என்று கூறியிருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வங்காள தேசத்தின் லோஹகரா என்னும் நகரத்தில் உள்ள இந்துக்கள் வாழும் குடியிருப்புகளில் சிலர் […]
வீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாக கூறி பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 264 வீடுகள் உள்ளது. இதற்கான பயனாளிகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் பணி நடைபெற்றது. அப்போது குழுக்கள் முறையில் கோடீஸ்வரர்கள் மற்றும் நகை கடை அதிபர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மற்ற பயனாளிகள் […]
சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய தா.மோ.அன்பரசன் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்கு தாமாக வீடு கட்டிக்கொள்ள 2.10 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் சென்னை, இதர மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் தனி வீடு கட்டும் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் நகர்ப்புற ஏழை மக்களுக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஒதுக்கீடு […]
மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வீட்டுவசதி வாரியம் சார்பாக குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். அதாவது சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக பொன்னுசாமி, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் 5 பேரூராட்சிகள் இருக்கின்றன. ஆனால் அங்கு சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் இருக்கின்றனர். கொரோனா காலக் கட்டத்தில் வாடகை செலுத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்களுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக […]
பாகிஸ்தானில் ஒமிக்ரானால் கொரோனா 5-வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக அரசு சுமார் 55,000 சுகாதாரப் பணியாளர்களை கொண்ட பிரத்தியேகமான குழு ஒன்றை நியமனம் செய்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த குழு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாவது தவணை தடுப்பூசிகளையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று செலுத்தும் […]
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ அன்பரசன் சென்னையில் 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்ற கடந்த ஆட்சியாளருக்கு இல்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் வாழ்வதற்கு தகுதி இல்லாத 23 ஆயிரம் வீடுகள் இருக்கிறது என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த இருபத்தி நான்கு வீடுகளுக்கு பதில் அடுத்த மூன்று வருடங்களில் புதிய வீடுகளை கட்டி தர முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். […]
கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. கொட்டி தீர்த்த கனமழையால் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கிய காட்சிகள் ட்ரோனில் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் எவர்சன் நகர் நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தனித் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இதற்கிடையே சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு மீட்புப்படையினர் […]
இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து வருகிறது. இதனால் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நிலவி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதியான அருணாசலப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளைச் சீனா கட்டியிருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீன […]
குறைந்த விலையில் வீடு, நிலம் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா ஆன்லைன் ஏலத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் நம்மால் சொத்துக்களை வாங்க முடியும். அதுவும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். ஆகஸ்ட் 18 ஆம் தேதி பேங்க் ஆப் பரோடா ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் […]
கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன. மேலும் […]
தமிழகத்திலேயே முதல் கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் குறைகளை முதலில் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஸ்தான் முகாம்களில் இலங்கைவாழ் தமிழர்கள் விடுத்த […]
டெல்லி மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார். அதில் முதலாவது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. […]
நம்மில் பலரும் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினால் துவைத்த துணியை வீட்டிலேயே காய வைக்கின்றனர். அது ஆபத்து என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய காலத்தில் வீடுகள் தள்ளி தள்ளி இருக்கும் அதாவது சிறிய இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது நகர்புறங்களில் வீடுகள் ஒட்டி ஒட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் பலர் வீட்டில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காயவைத்து கொள்கின்றனர். அந்த காலத்தில் வீட்டை சுற்றி கயிறு கட்டி அங்கு துணியை காய வைத்தனர். இதனால் வெயிலில் […]
சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களாக இருந்தால்கூட இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான மற்றும் தேவையான ஒன்று என்றால் அது வீடுதான். ஒரு வீடு என்பது அனைவரின் கனவாக உள்ளது. அனைவரும் எப்படியாவது ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயத்தில் மும்பை மிகவும் விலை உயர்ந்தது.நைட் ஃபிராங்க் இந்தியா சொத்து குறித்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அகமதாபாத் நாட்டில் வீடுகளுக்கு மலிவான சந்தை, வீட்டு வசதி அடிப்படையில் வீட்டு […]
கோவை ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு குளம் நிரம்பினால் வாய்க்கால் வழியாக அடுத்தடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நிலையில் முத்தண்ணன் குளத்தில் உபரி நீர் ராஜ வாய்க்கால் வழியாக செல்வ சிந்தாமணி குலத்திற்கு சென்றது. ஆனால் ராஜ வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் பொண்ணையராஜபுரம் […]
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனியார் கல் குவாரிகளால் ஒரு கிராமத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மதுராந்தகம் தாலுக்கா விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாமலை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் கல் குவாரிகளால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்குள்ள […]
நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவுகிறது. ஏரி குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை சம்மந்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதனால் மழை காலங்களில் வீடுகளுக்கும் தண்ணீர் புகும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் நாகையில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்த […]