நடிகர் எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். தமிழ் சினிமா உலகில் 80களில் முன்னணி நடிகராக நலம் வந்தவர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர். காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இது பற்றி அவர் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, இன்று காலையில் […]
Tag: வீடு திரும்பினார்
சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு தான் நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28- ஆம் தேதி திடீர் உடல்நிலை குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் சிறிய அடைப்பு இருப்பதாக கூறினார். அதன்பின்னர் சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்து வந்தார். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்தார். கடந்த 7ஆம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ரங்கசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மன்மோகன் சிங் குணமடைந்து […]
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி மற்றும் சுவாச கோளாறு ஏற்படவே அவரை லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்டனர். ஆனால் பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பரிசோதனை […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான […]