வரி ஏய்ப்பு குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறையில் மானிய கோரிக்கையின் போது வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வெகுமதி வழங்க 20223 ஆம் நிதி ஆண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார். இந்த அறிவிப்பை தற்போது செயல்படுத்தும் விதமாக தமிழக […]
Tag: வெகுமதி
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும் பிரபல தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கு பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெகுமதி அறிவிப்பை எஸ்.பி ஜெயக்குமார் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில், ‘கடந்த 2012ஆம் வருடம் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காலை நிலைய கு.எண். […]
உக்ரைன் நாட்டின் டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை ஒப்படைக்கும் ரஷ்ய வீரர்களுக்கு 75 லட்சம் முதல் ஏழரை கோடி வரை வெகுமதி வழங்கப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் சபாநாயகர் கோர்நியன்கோ நாடாளுமன்றத்தில் உக்ரைன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என கூறியுள்ளார். அதன்படி போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைக்கும் ரஷ்ய வீரருக்கு […]
5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பி.சி.சி.ஐ செயலாளர் 40 லட்ச ரூபாய் ரொக்க தொகையை அறிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணி 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் பி.சி.சி.ஐ தலைவரான சவுரவ் கங்குலி வாழ்த்தியுள்ளார். இதனையடுத்து பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், துணை பணியாளர்களுக்கும் பி.சி.சி.ஐயின் செயலாளரான ஜெய் ஷா வெகுமதிகளை அறிவித்துள்ளார். […]
பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவோருக்கு ரூபாய் ஐந்தாயிரம் வெகுமதி வழங்கப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களும் அரசின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கினையும் […]