Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் தற்கொலை வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்….!!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை வேளச்சேரி காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : வெங்கடாசலம் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்….  ஈபிஎஸ் வலியுறுத்தல்….!!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாச்சலம் தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 24ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம்  தற்கொலை!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம்  தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடாசலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதாக சேலம் அம்மம்பாளையம் வீடு உட்பட இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.. இந்த சோதனையில் 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன பொருட்கள் 13.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.. இது தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள்…. வெங்கடாசலம் மீது வனத்துறை வழக்கு பதிவு!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார்.. 2019ஆம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வந்தார். இந்த சூழலில் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த […]

Categories
மாநில செய்திகள்

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி… தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில்… “மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல்”..!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், நேற்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரூ 15,00,000 பறிமுதல்!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் ரூ 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார்.. ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் பணியில் இருந்து வரும் வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாக வந்த தகவலின் அடிப்படையில், […]

Categories
மாநில செய்திகள்

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில்…. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!!

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறுப்பில் இருந்து வருகிறார் வெங்கடாசலம். இந்நிலையில் மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. தற்போது இந்த பணியில் இருந்து […]

Categories

Tech |