Categories
தேசிய செய்திகள்

பந்து என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காக்கிநாடா  ரயில்வே நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் ஒன்று உள்ளது. அந்த தண்டவாளம் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அப்போது தண்டவாளம் அருகே ஒரு பொட்டலம் கிடந்தது. அதனை கண்ட ஒரு சிறுவன் அதனை பந்து என்று நினைத்து கையில் எடுத்து விளையாடினான். அந்த சமயத்தில் பந்து திடீரென வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மூன்று […]

Categories
உலக செய்திகள்

டோராண்டோ தீவு விமான நிலையத்தில் வெடிகுண்டு…? இரண்டு பேர் கைது… பெரும் பரபரப்பு..!!!!

டொரேண்டா தீவு விமான நிலையத்தின் படகு முனையதிற்கு அருகே வெடிக்க கூடிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து விமானங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பில்லி பிஷப் விமான நிலையத்தின் மெயில் லேண்ட் படகு முனையத்தில் சந்தேகத்திற்குரிய லக்கேஜ் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு நேற்று மாலை 4 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்”… பல மாணவிகள் உடல் சிதறி உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!!

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்… 8 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பிய பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றது. இதனால் போதை கடத்தல் கும்பல் பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத்தில் பிரச்சனை!…. ஒரே ஒரு போனில் அதிகாரிகளை மிரளவிட்ட நபர்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு…..!!!!!

சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7:35 மணிக்கு துபாய் செல்வதற்காக ஒரு தனியாா் விமானம் 174 பயணிகளுடன் புறப்படத் தயாராகியது. இந்த நிலையில் எழும்பூரிலுள்ள சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது பேசிய நபா் “துபாய் செல்ல இருக்கும் தனியாா்விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவா் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்” என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா். இதனைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சென்னை விமான நிலையத்துக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

“டி 20 கிரிக்கெட் போட்டி”…. மைதானத்தில் திடீர் குண்டு வெடிப்பு…. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் தலைநகர் காபுலிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடந்தது. ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்ட் -இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர்ஷல்மி அணிகள் மோதிகொண்டன. இந்த போட்டியை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் போட்டியை தலீபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட […]

Categories
தேசிய செய்திகள்

நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு…. பழங்குடியின பெண் காயம்….!!!!!!!

சதீஷ் கரிப்பூர் மாவட்டத்தில் நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை கேதுல்நார் கிராமத்தை சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகில் உள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷனே கூறியுள்ளார். அந்தப் பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்து சிதறி உள்ளது. காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வேட்டையாட நாட்டு வெடிகுண்டு”… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. 2 பேர் கைது…!!!!!!!!

விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகின்றனர் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 20 […]

Categories
தேசிய செய்திகள்

டிபன் பாக்சில் வெடிகுண்டுகள்…. ட்ரோன் மூலம் பறக்கவிட்ட பாகிஸ்தான்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

டிபன் பாக்ஸில் வெடிகுண்டுகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவில் உள்ள கனாசக் என்ற இடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது. இதைப் பார்த்த பாதுகாப்பு படையினர் உடனே அந்த குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆளில்லா குட்டி விமானம் வானத்தில் பறந்துள்ளது. அந்த விமானத்தையும் சுட்டு வீழ்த்தினர். அந்த ஆளில்லா குட்டி […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை….. திடீர் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சேலம் தலைமை தபால் நிலையம் நிலையத்தில் இருந்து, பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான கடிதம் சென்றுள்ளது. இது குறித்து மத்திய புலனாய்வுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலிருந்து ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், […]

Categories
தேசிய செய்திகள்

“விமான நிலையத்தில் வெடிகுண்டு இருக்கு”… சிஸ்டரின் கணவரை பழிவாங்க…. மிரட்டல் விடுத்த நபர்…. பரபரப்பு…..!!!!

பெங்களூர் தேவனஹள்ளி அருகில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இருக்கிறது. இங்கு இருந்து டெல்லி, சென்னை, தூத்துக்குடி, ஐதராபாத், உப்பள்ளி, பெலகாவி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நிலையம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் போன் அழைப்பு வந்தது. அப்போது போனில் பேசியவர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். அத்துடன் அவரது பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதன்பின் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

முதல்வர் முக ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு துறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னையிலுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்ததில் மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இது கூட நடந்திருக்கா…. டிரம்ப் குறித்து வெளியான பகீர் தகவலால் பரபரப்பு….!!

போதைப்பொருள் ஆய்வகங்களின் மீது வெடிகுண்டு வீசுவது குறித்து டொனால்ட் டிரம்ப் ஆலோசித்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டொனால்ட் டிரம்ப் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் . இவர் அதிபராக இருந்த போது அமெரிக்காவில் மார்க் எஸ்பர் பாதுகாப்பு செயலாளராக இருந்தார். இவர் தற்போது எழுதிய புத்தகத்தில் பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “2020 ஆம் ஆண்டில் மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மருந்து ஆய்வகங்களை அழிக்க இராணுவ ஏவுகணைகளை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர்: தீவிர வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை…. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டு…..!!!!!

ஜம்மு, காஷ்மீரின் குப்வாராமாவட்டத்தில் காவல்துறையினரும், பாதுகாப்புபடையினரும் சேர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இவற்றில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா எனும் இடத்தில் அதிகளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புபடையினர் கைப்பற்றினர். அதில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் போன்றவை இருந்தது. இவற்றையெல்லாம் பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா..? அல்லது சதி வேலைக்கு பயன்படுத்த கொண்டு […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… “நாங்கள் என்ன செய்தோம்”…. உக்ரைன் வீரர்கள் கண்ணீர் மல்க கேள்வி….?

ரஷிய படைகள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பிலும் பொருட்சேதம் மற்றும்  உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் உக்ரைனிய மரியு  போல் நகரம் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும்  வெடிகுண்டுகளுக்கு இறையாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதில் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா அதிபர் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு….. தேசிய கூட்டத்தில் திறக்கப்பட்ட உருவப்படம்….!!!!!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பதவி ஏற்று  10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற கட்சியின் தேசி கூட்டத்தில் அவரது உருவப்படம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய முக்கிய அதிகாரி ஒருவர் வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை கிங் ஜாங் உன் வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதுவரை வடகொரியா  நிகழ்த்திய 6 அணுகுண்டு சோதனைகளில் 4  சோதனைகள் கிம் ஜாங் உன் ஆட்சியில் நடத்தப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதனைகளும் அண்மையில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை  […]

Categories
தேசிய செய்திகள்

7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… தீவிர சோதனையில் போலீசார்… பெங்களூரில் பரபரப்பு…!!!!

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து  போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன்  சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம். ஆனால் இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை இந்த மிரட்டல் பொய்யாக  இருக்கலாம் என சந்தேகப்படுகிக்கிறோம்.  மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பெங்களூர் […]

Categories
உலக செய்திகள்

ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!!!

வரும் 3ஆம் தேதி பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசு மீது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற நிலை அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள கொத்ரி என்ற பகுதியின் அருகே மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…. கையில் கண்ணிவெடி! வாயில் சிகரெட்! மாஸ் காட்டிய உக்ரைனியர்…. வைரலாகும் வீடியோ….!!

உக்ரைனில் ஒருவர் கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றிய படி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மக்கள் மற்றும் வீரர்கள் அவர்களது தைரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனிய மனிதர் ஒருவர் எந்த ஒரு பயமும் இன்றி சிகரெட் புடித்தபடி ஒரு பாலத்தில் இருந்து கண்ணிவெடியை தன் கைகளால் அகற்றி வீசியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

தி.மு.க பிரமுகர் வீட்டில் வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!

புதுச்சேரி உப்பளம் பகுதியில் பிராங்க்ளின் (59) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொதுப் பணித்துறையில் கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தார். அ.தி.மு.க பிரமுகராக இருந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் தி.மு.க.வில் சேர்ந்தார். இந்த நிலையில் பிராங்க்ளின் வீட்டில் நேற்று மாலை வேளையில் மனைவி, மகள், பேரக்குழந்தைகள் இருந்தனர். ஆனால் பிளாங்க்ளின் வீட்டில் இல்லை. அப்போது பிராங்க்ளின் வீட்டின் அருகே ஸ்கூட்டரில் 2 பேர் வந்தனர். அதில் ஒரு நபர் தான் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு?…. மர்ம நபர் துணிகரம்… பகீர் சம்பவம்….!!!!

சென்னையில் உள்ளமுதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர், சென்னை கோபாலபுரத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவில் வந்த பார்சல்…. ஒருவேளை வெடிகுண்டாக இருக்குமோ…? பீதியான போலீஸ் ஸ்டேஷன்…!!!!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்ஸ்பெக்டருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக பயந்து பீதி அடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் இரவு பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி இடம்தான் கொடுப்பேன் என்று அந்த நபர் தெரிவித்தார். மேலும் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பணி முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அந்த பார்சல் உதவி கமிஷனர் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தகவல் தெரிவித்த […]

Categories
உலக செய்திகள்

என்ன…! ஆசனவாய்க்குள் வெடிகுண்டா…? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நபரது ஆசனவாய்க்குள் 2 ஆம் உலகப் போர் காலத்திலுள்ள வெடிகுண்டு நுழைந்ததையடுத்து அவர் அந்நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள gloucextsrshire என்னும் பகுதியில் வாழும் நபர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இராணுவ ரீதியான சாமான்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் ராணுவ ரீதியான சாமான்கள் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் 2 ஆம் உலகப்போர் காலத்தைச் சார்ந்த வெடிகுண்டு ஒன்றின் மீது […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்… பற்றி எரிந்த கார்… பிரபல நாட்டில் பயங்கர சம்பவம்..!!

பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்துச் சிதறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் டாக்சி ஒன்று திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெடித்து சிதறியுள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து கார் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த காரில் பயணித்த நபர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

“பெண் கொட்டிய குப்பையில் இருந்த வெடிகுண்டு!”.. அதிர்ந்துபோன உறவினர்கள்.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் ஒரு பெண் குப்பைத்தொட்டியில் போட வைத்திருந்த பையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Swinton என்ற நகரத்தைச் சேர்ந்த 82 வயது பெண் நேற்று காலையில் தன் வீட்டின் பின்புறம் இருந்த பொருட்களை சுத்தப்படுத்தியுள்ளார். எனவே அங்கு கிடந்த பொருட்களை வீதியில் இருக்கும் குப்பைத்தொட்டியின் அருகில் கொண்டு போட்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் உறவினர்கள், அவர் கொட்டிய குப்பையில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்திய வெடிகுண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

’முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருக்கு’…. சற்றுமுன் பரபரப்பு…..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் அழைப்பு வந்துள்ளது. அதனால் பதறிப்போன போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தது கடலூரை சேர்ந்த ஒரு சமையல் மாஸ்டர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உதயநிதியின் ரசிகனாக இருந்ததாகவும், தனக்கு படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

நீருக்கடியில் வெடிகுண்டு சோதனை…. வெற்றிகரமா நடத்திய பிரபல நாடு….!!

முதல் முறையாக சீனா நீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. சீனா முதல் முறையாகநீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. ஆனால் சோதனை எங்கு நடந்தது என்பது குறித்து தெரிவிக்கபடவில்லை. இந்த முறையை விமானம் தாங்கி கப்பல்களைத் தாக்க துறைமுகங்கள் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான தி குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும்  அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், சீனா நடத்திய சோதனை முழு வெற்றி பெற்றதாகவும் தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கழிப்பறையில் இருந்த பொருள்…. அதிர்ச்சியில் உறைந்த துப்புரவு பணியாளர்…. கேரளாவில் பயங்கரம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர் மாணவிகள் பயன்படுத்தும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி தயாரித்த வெடிகுண்டு…. திடலில் வெட்டப்பட்ட பள்ளம்…. போலீஸ் செய்த செயல்….!!

பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதியின்றி ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சணல் வெடிகுண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் திரி, புஸ்வானம் தயாரிப்பதற்கான மண் குடுவை, ஒலக்கை வெடி போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்த நிலையில் அதனை […]

Categories
உலக செய்திகள்

அந்த காருல வெடிகுண்டு இருக்கு..! காவல்துறையினரை மிரட்டிய நபர்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் நபர் ஒருவர் காரில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமெரிக்காவில் பாராளுமன்ற கட்டிடம் அருகே பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காரில் வெடிகுண்டு இருப்பதாக காரை ஓட்டி வந்த டிரைவர் காவல்துறையினருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காரிலிருந்த அந்த நபரை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததோடு காரை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர். அதன் பிறகு சுமார் நான்கு மணி நேரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! மொத்தமா 200 கிலோ கிராம் எடை…. 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு…. நெடுஞ்சாலையை மூடிய அதிகாரிகள்….!!

இங்கிலாந்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 200 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கட்டிட பணிக்காக பள்ளம் தோண்டும் போது கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கூகுள் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த நகரில் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பள்ளத்தில் 2 ஆம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் எடையுடைய வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கட்டுமான பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. கோபத்தில் கூறிய சின்ன பொய்.. விமான நிலையமே களேபரமான சம்பவம்..!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவர்கள் கைது..! காவல்துறையினர் அதிர்ச்சி தகவல்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

ஹாங்காங்கில் தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சித்த பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்துள்ளது. இதையடுத்து சீனா கடந்த வருடம் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் விடுதி ஒன்றில் வெடிகுண்டுகளை தயார் செய்ய முயற்சித்த ஆறு மாணவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்கள சும்மா விட கூடாது…. தெரிந்தால் புகார் அளிக்கலாம்…. கலெக்டரின் எச்சரிக்கை….!!

வன விலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்படுவது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலங்களில் வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் வெடிகுண்டை வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கடித்து காயம் ஏற்பட்டு அவற்றின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் அனுமதியின்றி வெடிகுண்டு தயாரிப்பது, பயன்படுத்துவது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு வைத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குட்டகந்தூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு சென்ற கறவை மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்ததால் வெடித்த படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் ஸ்ரீராமுலு அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டு வைத்ததாக மிட்டாளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார், பாலாஜி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மேய்ச்சலுக்காக சென்ற மாடு…. மர்மபொருளை கடிதத்தில் விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்மபொருள் வெடித்து பசுமாட்டின் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேக்கனூர் பகுதியில் தாதா என்ற விவசாயி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாதா தனக்கு சொந்தமான பசுமாட்டை எப்போதும்போல் கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது மாடு அங்கு கிடந்த மர்மபொருள் மீது வாய் வைத்ததால் அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மாட்டின் தாடைப் பகுதி முழுவதும் கிழிந்து பலத்த காயம் அடைந்து பரிதாபமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது வீசிய…. 7 பேர் கொண்ட கும்பல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

நந்தி வரத்தில் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பள்ளிக்கூட தெரு பகுதியில் பரத் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 1 1/2 மாதத்திற்கு முன்பு பூமிநாதன் என்பவரை வெட்டிய வழக்கில் சிறைக்குச் சென்று விட்டு சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் பரத்தை வெட்டுவதற்காக 7 பேர் கொண்ட கும்பல் கடந்த 22-ஆம் தேதி அவரது வீட்டிற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டு…. பசுமாடு கடித்ததால் விபரீதம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்….!!

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுட்டகுண்டா பகுதியில் தட்சிணாமூர்த்தி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் பசுமாடு வளர்த்து வருகின்றார். இவர் தினசரி அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியியொட்டி மாடு மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வனப்பகுதியொட்டி பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் மர்மநபர்கள் யாரோ வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்க்காமல் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கு… உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்…!!!

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே இருந்த வெடிகுண்டு கார் வழக்கில் சச்சின் வாசி உடன் பணியாற்றிய உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் 27 மாடி அன்டிலா குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வைக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில் காரின் உரிமையாளர் மார்ச் 5-ம் தேதி மும்பை கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார்…. தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்…. 30 பேர் உயிரிழந்த சோகம்….!!

ஆப்கானிஸ்தானில் கார் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்ததில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் மாளிகை அருகே தீவிரவாதிகள் கார் முழுவதும் வெடிகுண்டுகள் வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இந்த  தாக்குதலில் விருந்தினர் மாளிகை ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அருகே இருந்த பல கட்டிடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உட்பட 30 வே பலியாகினர் என […]

Categories
உலக செய்திகள்

500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு…. அவசர அவசரமாக மக்களை வெளியேற்றிய காவல்துறையினர்….!!

ஜெர்மனியில் 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் Mannheim நகரில் கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டிட வேலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 500 கிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை பணியாளர்கள் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசித்த 3000 பேர்களை வீட்டை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த வெடிகுண்டை செயலிழக்க வைத்ததை தொடர்ந்து மக்கள் தங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

“பதவி உயர்வுக்காக தான் இப்படி செய்தேன்”… ஒப்புக்கொண்ட போலீஸ்… முடிவுக்கு வந்த முகேஷ் அம்பானி பிரச்சனை..!!

உதவி காவல் அதிகாரி பதவி உயர்வுக்காக முகேஷ் அம்பானி வீட்டின் அருகே குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே கடந்த 25-ஆம் தேதி மர்ம கார் ஒன்று ரெடி பொருளுடன் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் சிறிது நாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. யார் அந்த இடத்தில் காரை நிறுத்தி அதில் வெடிபொருளை வைத்தது என்று காவல்துறையினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுதிக அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தலை நிறுத்த சதியா..? காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே வெடிகுண்டு கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே காய்கறி மற்றும் பழக்கடைகள் அமைந்துள்ளது . அந்தக் கடைக்கு சென்ற வடமாநில இளைஞர்கள் சிலர் அவர்களது பையை அங்கேயே வைத்து விட்டு சென்றுள்ளார்கள்.அங்கிருந்த காய்கறி கடை உரிமையாளர் சிறிது நேரம் கழித்து பையிடம் எவரும் இல்லாத காரணத்தினால் பையை எடுத்து திறந்து […]

Categories
மாநில செய்திகள்

அய்யயோ…! மக்கள் கூடும் இடத்தில் வெடிகுண்டு…. தமிழகத்தில் பரபரப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூடிய இடத்தில் பையில் சுற்றி […]

Categories
உலக செய்திகள்

தீடிரென வந்த பார்சல்…! திறந்த போது ”டமார்”… ஜெர்மனியில் பரபரப்பு …!!

ஜெர்மனியில் பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்தில் வெடிகுண்டு பார்சலால் 3 பேர் காயமடைந்துள்ளனர் . ஜெர்மனியில் நெக்கர்சுல்ம் என்ற நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் அலுவலகத்திற்கு பார்சல் ஓன்று நேற்று வந்துள்ளது. அந்த பார்சலில் வெடிகுண்டு ஒன்று இருந்துள்ளது.வெடிகுண்டு  வெடித்ததில் அலுவலகத்தில் வேலை செய்யும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு ரொம்ப மோசமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த கட்டிடத்தில் இருந்த 100 பேரை […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம்… 14 பேரை கொத்தாக பிடித்த போலீசார்… சிக்கிய பயங்கர பொருட்கள்…!

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாது இருந்த நிலையில் தற்போது மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள். 33,36 மற்றும் 40 வயதுடைய இந்த மூவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகள் வீசியதால்…. நெல்லையில் பரபரப்பு…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்…!!

மர்ம கும்பல் ஒன்று அடுத்தடுத்து 4 வெடிகுண்டுகளை வீசியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!

ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது  கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை  அவர்களது வீடுகளை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த கால்…! ஒரு நிமிடம் ஆடி போன அதிகாரிகள்… ஸ்கெட்ச் போட்டு சைபர் கிரைம் ..!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |