குருவாயூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மர்மநபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாம்பரத்தில் உள்ள ரயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் அனைத்து பெட்டிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் அழைத்துவரப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் குருவாயூர் […]
Tag: வெடிகுண்டு மிரட்டல்
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னைக்கு நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு பிறகு ரயிலில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இரவு 07.50 மணி முதல் ஒரு மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிக்குண்டு எதுவும் இல்லை. […]
ஜெய்சால்மரிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானமானது நேற்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதையடுத்து விமான பயணிகள் இறங்கும்போது, ஒருவர் விமானத்தின் இருக்கையில் “இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது” என இந்தியில் எழுத்தப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் உடனே விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முற்பட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த விமான நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் டெல்லி […]
ஐதராபாத் காவல்துறையினருக்கு நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுத்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து, அவர்கள் உடனே சோதனையில் இறங்கினர். இதையடுத்து ஐஎஸ் சதன் சாலையிலுள்ள கோவில்கள் மற்றும் மசூதிகள் உள்பட பல பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிரட்டல் அழைப்பு காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அத்துடன் வெடி குண்டு தடுப்புபிரிவினரும் வரவழைக்கப்பட்டனர். அதன்பின் அந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. அப்பகுதி முழுவதையும் […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி போனை துண்டித்தார். இதனால் உடனே ரயில் நிலைய காவல்துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகத்திற்குள் போலீசார் மோப்ப நாய்களோடு விரைந்து ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் […]
சீனாவிற்குச் சென்றுகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான் வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்தியபோர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றது. இது தொடர்பாக இந்திய விமானப்படையிலிருந்து வெளியாகி இருக்கும் தகவலில், இந்திய வான் வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனே ஈரான் பயணிகளின் விமானத்திற்கு பாதுகாப்புக்காக இந்திய ஜெட்விமானங்களானது பறந்துசென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் […]
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் செப்டம்பர் 16ஆம் தேதி வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர், உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில், பள்ளிக்கு விளைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது . அதன் பிறகு மெசேஜ் வந்த செல்போன் எண்ணை […]
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காலை 7.20 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்தது இண்டிகோ விமானம். அந்த விமானத்தில் 167 பயணிகள் இருந்த நிலையில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்படது. விமான நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து விமானத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், விமான […]
தமிழகத்தில் அடிக்கடி பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் யார் என்பது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர் […]
கர்நாடகாவின் பெங்களூரு நகரிலுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அவற்றில் 175 பயணிகள் இருந்துள்ளனர். இதனிடையில் விமானத்தின் கழிவறையில் மிரட்டல் குறிப்பு ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அதை விமான சிப்பந்தி ஒருவர் கவனித்துள்ளார். இதையடுத்து இது பற்றி விமான கேப்டனிடம் தெரிவித்து இருக்கிறார். அதாவது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது. அதன்பின் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்து, விமானத்தை முறையாக அனுமதி பெற்று விமான நிலையத்தில் […]
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நான் ஒரு மனித வெடிகுண்டு. திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போகிறேன். முடிந்தால் காப்பாற்று என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சில ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தது. இந்த குறுஞ்செய்தி கடந்த 23-ஆம் தேதி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி அனுப்பியவரை கண்டு பிடிக்குமாறு கமிஷனர் கே.கே நகர் […]
சென்னையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்வர் வீட்டில் சோதனை […]
வாஷிங்டனில் ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ந்து டி.சி.பி.எஸ். மற்றும் டி.சி. சார்ட்டர் ஆகிய 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டன் நகரின் காவல் துறையினர் அந்த பள்ளிகளுக்கு விரைந்தனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். அதன் பின்பு, அங்கு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் வெடிகுண்டுகள் இல்லை. இதே […]
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டிற்கு சென்று உடனடியாக சோதனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு அது புரளி என தெரியவந்தது.மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்த நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் […]
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பயணிகள் விமானம் துருக்கியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குவைத்திலிருந்து Jazeera ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில மணி நேரத்திலேயே அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமானமானது துருக்கியில் உள்ள Trabzon விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மேலும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தனியான இடத்தில் வைத்து அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான தகவலை Trabzon ஆளுநர் Ismail Ustaoglu சமூக […]
உணவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதால் ஊழியர்களும் விடுதியில் தங்கியிருந்தவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரித்தானியாவில் உள்ள Scarboroughவில் இருக்கும் Grand Hotelக்கு நேற்று காலை 10.15 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உணவகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சமடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உணவகத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த ஊழியர்களையும் அதற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவர்களையும் அவசரமாக அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் […]
சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 இடங்களில் தனியார் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினம் வரவுள்ள நிலையில் வெடிகுண்டு வெடிக்கும் என்று இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 6 ஹோட்டல்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. அங்கு வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தனியார் ஹோட்டலுக்கு இமெயில் மூலம் குறுந்தகவல் ஒன்று இன்று காலை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி […]
கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலையில் ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, தான் மது போதையில் இருப்பதாகவும், கோவை ரயில் நிலையத்திற்கு குண்டுவைக்கப்போவதாக 2 பேர் பேசிக்கொண்டிருப்பதை தான் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரயில் நிலையம் முழுவதும் ஸ்கேன்னர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடமைகளையும் போலீசார் சோதித்தனர். தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார். இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்தின் வீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு அது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது. இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் […]
சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனைக்குப் பின் இது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை […]
பிரிட்டனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டன் Old Trafford செஸ்டர் சாலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் நேற்று இரவு 11.55 மணிக்கு எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் பொது ஒழுங்கை மீறிய வழக்கில் 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தொடர்ந்து வெடிகுண்டை தேடிய […]
பிரிட்டனில் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கிருந்த மக்களை உடனடியாக காவல்துறையினர் வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனிலுள்ள Old Trafford செஸ்டர் என்ற சாலையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, நேற்று இரவு 11:55 மணியளவில் Old Trafford செஸ்டர் சாலையில் குண்டு வைக்கப்போவதாக மர்மநபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த மக்கள் அனைவரையும் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பில் 20 […]
சுவிட்சர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நான்கு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றிற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 20 மாணவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். […]
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக திடீர் மிரட்டல் வந்தது. அதனால் தாஜ்மஹால் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மர்ம நபர் ஒருவர் உத்திரப்பிரதேச காவல் துறையை தொடர்பு கொண்டு காலை 9 மணிக்கு தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். உடனே எச்சரித்து கொண்ட போலீசார் பார்வையாளர்களை வெளியேற்றி வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எதுவும் […]
தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உலக அதிசயங்களில் மிக முக்கிய ஒன்று தாஜ்மஹால். இது இந்தியாவின் நினைவுச்சின்னமாக பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் செய்தி வந்தது. இதையடுத்து தாஜ்மஹாலில் சுற்றி பார்க்க வந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் தாஜ்மஹால் வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டது. தாஜ்மஹால் முழுவதும் சல்லடை போட்டு வெடிகுண்டை தேடி வருகின்றனர். உத்தரபிரதேச காவல்துறையின் […]
சென்னையில் கடிதத்தின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை ஆம்பூரை சேர்ந்த நபர் ஒருவர் சென்னை விமான நிலையம், கொச்சி விமான நிலையம், டிஜிபி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய நான்கு இடங்களிலும் வரும் மார்ச் 1ஆம் தேதி வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ஒரு கடிதம் எழுதி, அதை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
சென்னை மற்றும் சேலத்தில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி […]
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்ற இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த […]
நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலமாக தகவல் அளித்துள்ளார். அபிராமபுரத்தில் இருக்கின்ற நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலமாக தகவல் வந்துள்ளது. அதனால் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தனுஷ் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகு அது பொய் தகவல் என்று தெரியவந்தது. அதுமட்டுமன்றி […]
வெடிகுண்டு மிரட்டலால் பல நீதிமன்றங்களின் பணியை முடக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஜெர்மனியில் நேற்று காலை 7.30 மணி அளவில் Mainz நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து பல நீதிமன்றங்களுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்திற்கு […]
நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், “நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது ” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது. […]
ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது 14 வயது சிறுவன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் நடிகர் ரஜினி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போது காவல்துறையினரின் விசாரணையில் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது யார் என்பதை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் […]
மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]