திரைப்பட நடிகர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் திருவான்மியூர் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இன்று அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீரென மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர்கள் அனைவருக்கும் பழக்கம் போல மிரட்டல் விடும் மாரகாணத்தை சேர்ந்த நபரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி […]
Tag: வெடிகுண்டு
தேமுதிக தலைவரான விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் அவர் இல்லத்தில் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீடு உள்ளது. அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அந்த தகவலை சொல்லி, வேறு எதையும் சொல்லாமல் தொடர்பைத் துண்டித்துவிட்டார். அதனால் தேதிமுக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் […]
சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.இவர் இப்போது நடித்து முடித்த படம் சூரை போற்று அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக […]
பயங்கரவாத தாக்குதலில் வெடிகுண்டு வெடித்து சிதறியதால் 8 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தங்களது ஆதிக்கத்தால் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறி பார்த்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அடாவாடி தனத்தை ஒடுக்குவதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு […]
ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் ஆப்கானிஸ்தானில் நாட்டு அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் சுமார் 19 வருடங்களாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய போர் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனிடையே தலிபான் பயங்கரவாதிகளுடன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனை தொடர்ந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தவறான தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு அலைபேசி எண்ணினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் அந்த எண்ணினை தொடர்புகொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஏர்வாடி தர்கா ஆகிய பல பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து […]
சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது. கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே கட்டியிருந்த அணைகளில் மூன்று […]
பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்டாவின் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றின் மேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இத்தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வெற்றிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க போவதாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பகுதி காவல்துறைக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழுவை வரவழைத்து ரஜினிகாந்தின் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. போயஸ் தோட்டம் பகுதி முழுவதும் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதல் […]
சென்னையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு […]