கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கோவையில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி கார் வெடிப்பு நடந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த முபின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது அசாருதின், அப்சர்கான், முகமது தல்கா , முகமது ரியாஸ், முகமது நாவாஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு […]
Tag: வெடிப்பு
தெலுங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் வீட்டுக்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி போன்றோர் காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்தனர். இதில் பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து […]
கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் […]
வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியாகியுள்ளனர். இரவு பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. புகையில் இருந்து தப்பிக்க கழிவறையில் புகுந்த அவர்கள் மூச்சு திணறி இறந்து உள்ளனர். தற்போது மக்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டதனால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஓரியண்டல் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த இரண்டு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில்அமைந்துள்ள மளிகை கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கும் அதிவேகமாகப் பரவியது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி இன்னும் […]
சீனாவில் உள்ள ஷியான் நகரில் திடீரென எரிவாயு குழாய் பயங்கரமாக வெடித்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சீனாவில் உள்ள ஷியான் நகர் குடியிருப்பு பகுதியில் எரிவாய் குழாய் ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குழாய் பயங்கரமாக வெடித்துள்ளது. இதனால் அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்ததில் 12 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 138 பேர் இடிபாடுகளில் சிக்கியதில் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. […]
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா நகரம் அருகே, உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் நியாராகாங்கோ என்று அழைக்கப்படும் எரிமலை நேற்றிரவு வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த விவரம் தெரியவில்லை. இதற்கு முன்பாக இந்த எரிமலை 2002இல் இதேபோல் வெடித்தபோது 250 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் உள்ள ஒரு எரிமலை தனது அழகிய தன்மையால் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகின்றது. ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது. எரிமலையின் வாயிலிருந்து வெப்ப குழம்பு வெளியேறியதால் மேற்பரப்பில் ஒரு மைல் தூரத்தில் சாம்பல் புகை உருவானது. மேற்பரப்புக்கு மேலே ஒரு மின்னல் புயல் உருவானது போல் இயற்கையான அந்த காட்சியை அற்புதமாக படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகை 3000 கிலோ மீட்டர் உயர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் புகைப்படக்கலைஞர் இந்த நிகழ்வை கைப்பற்றுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். Snapshots […]