ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? […]
Tag: வெடிவிபத்து
கியூபாவில் ஒரு ஓட்டலில் வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்து, குழந்தை உட்பட 22 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இயங்கிவரும் சரடோகா என்ற ஹோட்டலில் நேற்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ஓட்டலின் ஒரு பகுதி இடிந்தது. உடனடியாக, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மேலும், ஓட்டல் கட்டிடத்தின் மாடிகளும் இடிந்து […]
பர்கினோ பாசோவில் உள்ள தங்கச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டு 59 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கினோ பாசோ நாட்டில் தங்கச் சுரங்கங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றில் பல சுரங்கங்களில் சட்டவிரோதமான முறையில் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்லொரா என்னும் இடத்தில் அமைந்துள்ள மிகப்பெரிதான தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, சுரங்கத்தில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. இக்கோர […]
கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் கொடூர வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்திருக்கிறார். கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் இருக்கும் சிங்ரூ அவென்யூ என்ற பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டு பல கட்டிடங்கள் கடும் சேதமடைந்து இருக்கிறது. இதில் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒரு கட்டிடத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்த சுமார் பதினெட்டு தீயணைப்பு வீரர்களும், 7 தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் பல மணி நேரங்களாக […]
துருக்கியில் எண்ணெய் குழாயில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் கிர்குக்கின் என்ற பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து, குழாய் மூலமாக துருக்கி நாட்டின் செயான் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் என்னும் மாகாணத்தில் இருக்கும் பசார்சிக் நகரத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் எண்ணெய் குழாயில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பற்றி எரிந்தது. எனவே, பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதற்கு முன்னதாகவே எண்ணெய் […]
ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் 23 அறைகள் உள்ளன. இன்று காலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ட பயங்கர […]
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 12 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கராச்சி நகரின் வங்கி கட்டிடம் ஒன்றிற்கு அடிப்பகுதியில் இருக்கும் பாதாள சாக்கடையின் கால்வாயில் திடீரென்று, பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில், வங்கி கட்டிடம் அதிர்ந்து, அதன் கண்ணாடிகள் உடைந்தது. மேலும் வாகனங்களும் சேதமடைந்ததில் 12 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 12 நபர்களுக்கு காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]
தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அவசரகால மேலாண்மைத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் ரியாஸன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள எலாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் […]
ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். கஜகஸ்தானில் உள்ள ஜம்லி மாகாணத்தில் பைசக் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ராணுவ தளத்தின் ஒரு அறையில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதனால் தீயானது ராணுவத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மொத்தம் 6௦ […]
ஜெர்மனி நாட்டில் இருக்கும் ரசாயன பூங்கா ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி, Leverkusen என்ற பகுதியில் இருக்கும் ரசாயன பூங்காவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் வான் அளவிற்கு கரும்புகைகள் பரவியதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். எனினும் அப்பூங்காவின் அதிகாரிகள், விபத்து எதனால் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை என்றே கூறுகிறார்கள். RAW: A huge explosion at a chemical park in the western […]
துபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருக்கும் Jebel Ali என்ற துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து தீ பற்றி எறிந்துள்ளது. கோடைகாலம் என்பதால் அதிக வெப்ப நிலை நிலவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரியும் வகையில் இருந்த பொருட்கள் உள்ள கண்டெய்னர்கள் வெடித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/disclosetv/status/1412867416191819778 இது வழக்கமாக நிகழும் விபத்து தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், […]
விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது. இதனையடுத்து அருகில் […]
விருதுநகர் அருகே மூலிப்பட்டி சாதனந்தபுரத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பெண்கள் உட்பட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 100 சதவீதம் உடல் கருகிஆதிலட்சுமி என்ற பெண்ணை தவிர்த்து 90 மற்றும் 70 சதவீதம் உடல் கருகிய மற்றவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தந்தை-மகள் இருவரும் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்குறிச்சி பகுதியில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. சந்திராவும் அவரது தந்தை பொன்னுசாமி என்பவரும் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று அந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சந்திரா உட்பட மூன்று […]
வேலைக்கு சேர்ந்து 3 நாட்களே ஆன கர்ப்பிணி பெண் வெடி விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் […]
சேலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அண்ணனே தம்பியை கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு விவசாயி மணி வீட்டின் அருகே வானொலிப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து தனது வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் 17-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வானொலிப் பெட்டியை எடுத்து மின் […]
சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]