தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மற்றும் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் கன மழை மற்றும் லேசான மழை பெய்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் தீவிர கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மழை என்பது குறைவாகவே உள்ளது. தற்பொழுது தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக […]
Tag: வெப்பச்சலனம்
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் […]
வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]