வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது உள்ள வெப்பத்தின் தாக்கம் ஆனது கடந்த வருடங்களை விட அதிக அளவில் இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் […]
Tag: வெயிலின் தாக்கம்
இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.5. டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இதை 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் […]
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தினமும் 100 டிகிரி வெப்ப நிலையை தாண்டி வெயில் அதிகமாக அடித்து மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயில் அதிகமாக அடித்து வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தினால் முதியவர்கள் அதிகமாக […]
போக்குவரத்து காவலர்களுக்கு மோர்,குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கி வெயிலின் தாக்கத்தை தீர்த்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோடைக்காலம் நெருங்கி வரவே வெயிலின் தாக்கமானது அதிகரித்து வருகிறது. எனவே இந்த சூழலில் போக்குவரத்து காவலர்கள் அயராது உழைத்து வருகின்றனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து சோர்வடையாமல் பணிசெய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் வழிகாட்டுதலின்படி நேற்று குமரி மாவட்டம் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பணி செய்த போக்குவரத்து காவலர்களுக்கு மோர், குளிர்பானம் […]
சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் கூறியுள்ளனர். கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதன்மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு […]
பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 106 டிகிரியாக கொளுத்தியது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழரசம், மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகின்றனர். இதனால் விற்பனையும் அமோகமாக உள்ளது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் நுங்குகளில் அதிக […]
தேனியில் வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் நுங்கினை அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் தேனியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்வதற்கு கூட தயங்குகிறார்கள். இதனையடுத்து அவர்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருட்களான நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் மோர், இளநீர் முதலானவற்றையும் பருகி வருகின்றனர்ம் இதற்கிடையே […]
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் பொதுமக்கள் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி பழங்களையே அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி பழங்கள் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக திண்டுக்கல்லுக்கு கொண்டு […]