இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும் அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]
Tag: வெளிநாடு
வெளிநாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு நீண்ட கால குடியுரிமை வழங்கும் விதமாக கடந்த 2019 ஆம் வருடம் முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி திரிஷா போன்ற பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில்ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்க உள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில […]
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளது. சேப் மூன் வேல்டு எனும் பெயரில் வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக […]
மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. டி. ராஜேந்தர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசை என அனைத்துத் துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முத்திரை பதித்தவர்.. இந்நிலையில் இவருக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் டி.ராஜேந்தருக்கு அயல்நாட்டு மருத்துவம் தேவை என கூறிய நிலையில், சிம்பு […]
முடி அழகு முக்கால் அழகு என்பார்கள் அதுபோல முடி என்பது ஆண் பெண் இருவருக்கும் அழகு சேர்க்கும் ஒன்றாகும். ஆனால் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனைகள் இருக்கக்கூடும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். முடி கொட்டுவதற்கு போதிய அளவு ஊட்டச்சத்து இன்மை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை காரணமாக கூறலாம். அதிக அழுத்தம் கொடுத்து சீவும் போது கூட உங்களின் முடி கொட்டலாம். அதோடு நம்மில் பலர் வாசனைக்காகவும் பிசுபிசுப்பு தன்மையைப் போக்கவும் பல்வேறு விதமான […]
தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மயில்கல் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு எஸ்.பி வேலுமணியின் மகன் மனைவி உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணியுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் […]
சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்தவகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணசித்திர நடிகர்களாக பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்து வருகிறார்கள். 2001ஆம் ஆண்டு வெளிநாட்டு ஹீரோவாக நடிக்க வைத்து வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் பென்ட்லி மிச்சம். மேலும் இந்த படத்தில் ஜோதிகா, அனுபம், கேர் நாசர் ,பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் […]
தமிழக கோவில்களில் உள்ள சிலைகளை வணங்குகிறார்களோ இல்லையோ, களவாடி விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். தமிழகத்தில் பழமையான கோவில்களில் உள்ள ஏராளமான சிலைகள் காணாமல் போனது. எனவே இது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொன்மாணிக்கவேலை நியமித்திருந்தது. அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து பல சிலைகளை கண்டுபிடித்தார். இந்நிலையில் தமிழக தெய்வ சிலைகளை வெளிநாடுகளில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர். மேலும் சென்னையிலும் அருங்காட்சியகத்தில் 2,000 சிலைகள் காட்சி பொருளாக வைத்துள்ளனர் […]
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது: “வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 18 பேருக்கு டெல்டா வகைகள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கமின்றி முன்வரவேண்டும். உருமாறும் வைரஸை மனதில் வைத்துக்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய […]
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை ஏழு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “நான்கு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆப் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று […]
நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டுப்பாட்டில் தளர்வு காரணமாக ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மனித உயிர் பாதுகாப்பு நிர்ணயச் சட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாட்டிற்கு போவதை கட்டுப்படுத்தியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நவம்பர் 1-ஆம் தேதி […]
வெளிநாட்டில் பணியாற்றும் பெண், சொந்த ஊரில் தன் மகள் உயிரிழந்த செய்தியை அறிந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தை சேர்ந்த பீனா என்ற பெண் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் ஆதிரா கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். பீனா, தன் மகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாடு சென்றிருக்கிறார். ஆதிரா, அஜி என்ற அவரின் உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, அஜியின் குடும்பத்தினர் வெளியில் சென்றுவிட்டனர். […]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நாட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உலக அமைதி மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதில் இத்தாலி, ஜெர்மன் பிரதமர் மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மத்திய […]
வெளிநாட்டில் ஒரு நபர், வேலைக்காக ஒரு நிறுவனத்திற்கு அனுப்பிய பயோடேட்டாவில் குறிப்பிட்டிருந்த திறமை அனைவரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு, வேலைக்காக விண்ணப்பித்தால், அங்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அதில் நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை மட்டுமே அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் நேர்காணலுக்கு சென்று, அதில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இந்நிலையில் வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் பணிக்காக தன் சுயவிவரத்தை(Bio-data) ஒரு நிறுவனத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு திறமையால் கவரப்பட்ட […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து சுங்கத்துறைக்கு அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்து அறநிலைத்துறை தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்த […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செதுக்கிக் கொண்டதற்கான சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை இணைக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானம் மூலம் செல்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்பதை உறுதி படுத்தும் […]
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 6.13 லட்சம் கோடியை தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் தங்கி பணிபுரிபவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகையை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2020இல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு 6.13 கோடியை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 2019 ஆண்டு 6.24 கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது […]
வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியர்களில் 10 இல் 6 பேருக்கு இதயநோய் இருந்ததாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் வேலை கிடைக்காத காரணத்தினாலும், போதிய அளவு சம்பளம் கிடைக்காததாலும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். தங்களுடைய மனைவி, பிள்ளைகளை வருடக்கணக்கில் தவிக்க விட்டு விட்டு வெளிநாட்டில் சென்று கஷ்டப்பட்டு வேலை பார்த்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதாவது உடல்நல கோளாறு காரணமாகவும் சிலர் உயிரிழந்து விடுகின்றனர். இந்நிலையில் துபாய் […]
வெளிநாடுகளில் முக்கிய பதவி பொறுப்புகளில் இருக்கும் இந்திய வம்சாவளியினரின் பட்டியலை “இந்தியாஸ்போரா” நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க,பிரிட்டன்,ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர்,தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் உட்பட 15 வெளிநாடுகளில் இந்திய வம்சாவளியினர் எத்தனை பேர் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்பதனை “இந்தியாஸ்போரா” அமைப்பு ஆய்வு செய்து அதன் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ், 60க்கும் மேற்பட்டோர் கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளை வகித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவில் எம்பிக்கள் ஆக […]
திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சென்ற […]
சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போலி தடுப்பூசி தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் மர்ம கும்பல்கள் சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பவதற்காக போலி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வந்தனர். அதனை தடுப்பதற்காக பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஒரு இடத்தில் போலி கொரானா தடுப்பூசிகளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போலி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினரின் விரைந்த நடவடிக்கையால் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது. இதுவரை இந்த குற்றத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் […]
குளிரூட்டிகள் உடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் புதிய நியூ மேட்சிக் டயர்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர் தொலைக்காட்சி முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஏசி […]
ஒரே மகன் வெளிநாட்டுக்குச் படிக்க செல்வேன் என்று கூறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தை சேர்த்தவர்கள் தங்கமுத்து – ராதாமணி தம்பதியினர் . இவர்களுக்கு மதன்குமார் என்ற ஒரே மகன் உள்ளார். தொழிலதிபரான தங்கமுத்து அதே பகுதியில் கார்மெண்ட்ஸ், நிதி நிறுவனம் ,லாட்ஜ் உள்ளிட்டவைகளை வைத்துள்ளார் .இந்நிலையில் தங்கமுத்துவின் மகன் மதன்குமார் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்வதாக கூறினார்.அதற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து ,”நீ எங்களுக்கு ஒரே மகன் உன்னை வெளிநாட்டுக்கு […]
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]
விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஆனால், தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விவரம்: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், கொரோனா பாதிப்பு காரணமாக […]
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேலும் 29 விமானங்கள் இயக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. 29 விமானங்கள் மூலம் 26,000 பேர் மீட்கப்படுவர் என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இதுவரை 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன என பதில் அளித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் வகையில் தமிழகத்தில் விமானங்களை தரையிறக்க அனுமதிக்கக்கோரி திமுக மனு தாக்கல் செய்தது. திமுக தொடர்ந்த வழக்கு: திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் […]
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,106 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று வரை தமிழகத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில், கார், பேருந்து மூலம் 2,00,081 பேர் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிராவில் இருந்து வந்த […]
VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை 17 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது. இதை நிலையில், நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரசின் 2 சிறப்பு விமானங்கள் மூலம், 363 இந்தியர்களுடன் புறப்பட்டு நேற்று இரவு கேரளாவின் கொச்சி மற்றும் கோழிக்கோடு சர்வதேச […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]
வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சியுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து […]