நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]
Tag: வெளியான அறிவிப்பு
தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கையில் வாழும் பல்வேறு மக்கள் இனப் பிரச்சனை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு விதமான அமைப்புகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிற நாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் தமிழர்களிடம் அரசாங்கம் உதவி கோரியுள்ளது. இதன் காரணமாக தமிழ் அமைப்புகளின் மீதான தடையை […]
பெண் பயணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஐஆர்சிடிசி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக பேருந்து, விமான பயணங்களை விட ரயில் பயணங்களை நிறைய பேர் விரும்புவார்கள். டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பு வசதிகள், சௌகரியமான பயணம் என ரயில் பயணத்தை விரும்புபவர்கள் ஏராளம். ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி ஆப் மூலமாக, ஆன்லைன் மூலமாக அதிகமாக டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு பல இடங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் […]
தமிழகத்தில் மின்னாளுமை முகமை இயக்கம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக இ சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான அரசு இ சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது. அவற்றில் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல இ சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இந்நிலையில் இனி இ சேவை மையங்களில் திருமண சான்றிதழும் வழங்கப்படும் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கட்டாய தமிழ் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, TRB உட்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் தமிழ் எழுதுவதில் இருந்தும் […]
மே 30, 31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு வேலை நிறுத்த போராட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 30, 31 […]
செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான முடிவுகளை மே 4-ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் வழக்கமாக செய்முறை தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். ஆனால் இந்த வருடம் தேர்வு நேரம் 2 பணி நேரமாக […]
கேரள மாநிலத்தின் ஆளுநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் துணை ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மாநில பா.ஜ.க கட்சியின் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கலந்து கொண்ட பா.ஜ.க உறுப்பினர்கள் 4 பேர் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் நுழைந்தனர். […]
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை திங்கட்கிழமை மீண்டும் சட்டசபை கூட்டம் தொடங்கும். இந்த கூட்டத்தில் இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்புத்துறை, பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வருவாய்த் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் […]
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத்; திட்டம் அமலாகும் என கூறியிருந்தது. தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வல்லுநர் […]
தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை […]
UP போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. UP போர்டு 12-வது வாரியத்தின் தேர்வு தாளை அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை https://upmsp.edu.in/. என்ற இணையதளத்தின் மூலமாக பார்க்கலாம். UP வாரியத்தின் 12-வது கால அட்டவணையின்படி வாரியத்தின் ஆண்டு தேர்வுகள் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை நடைபெறும். இதனையடுத்து இன்டெர் கல்லூரிகளுக்கான தேர்வுகள் 15 நாட்களில் முடிவடையும் என்று உபி வாரியத்தின் தலைவர் மற்றும் இயக்குனரான வினை குமார் பாண்டே தெரிவித்துள்ளார். […]
பொதுமக்களின் முகக்கவசம் அணிய வேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதாவது கொரோனா பரவல் காரணமாக தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் சட்டம் அமலில் இருந்தது. இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ஏப்ரல் 2-ஆம் தேதி பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். மேலும் பயணிகளுக்கு கட்டாய தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட […]
நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி, ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் ஆகும். இதை அடுத்து 2-ஆம் தேதி நவராத்திரி முதல் நாள், உகாதி, மற்றும் 3-ஆம் தேதி ஞாயிறு விடுமுறை, 4-ஆம் தேதி சாரிஹீல்(ராஞ்சி), 5-ஆம் தேதி பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள்(ஐதராபாத்). இந்நிலையில் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு ஏற்ப வேறுபடும். எனவே வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், ஏதேனும் பணிகள் இருந்தால் விரைந்து இன்றே […]
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் கூடிய விரைவில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயராக கடந்த 4-ஆம் தேதி பிரியா ராஜன் பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். இவர் சென்னை திரு.வி.க நகர் மாணவ-மாணவிகளுக்கு 170 கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குடற்புழுநீக்க மாத்திரைகள், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் என பல்வேறு பணிகளை தொடர்ந்து […]
தமிழக ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமானது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் குறைந்த பலனே உள்ளதால்,அதை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தரப்பில் போராடி வருகின்றனர். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் […]
2022 ஆம் ஆண்டுக்கான JEE மெயின் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது. முதல் கட்டம் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் மே 29 வரை நடைபெறும். மேலும் IIIT, NIT உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) மற்றும் கட்டடக்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் JEE மெயின் தேர்வில் தேர்ச்சி […]
மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் ஜனவரி 10ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் வழிகாட்டுதல் வெளியிடும் பொழுது அதில் தெரிவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் […]
பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் இருப்பதாக இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது “இந்திய ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 வீரர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4,850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1,265 அதிகாரிகள் மற்றும் 11,166 வீரர்கள் பணியிடங்களும் காலியாக […]
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்காக ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாடுமுழுவதும் இதற்காக மண்டல வாரியாக 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் காலியாக உள்ள பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை மற்றும் பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு போன்ற பணிகளுக்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. […]
நாடு முழுவதும் பரவி வரும் பறவை காய்ச்சல் முட்டை மற்றும் சிக்கன் சாப்பிடுவதால் பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை […]
இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் […]
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நட்சத்திர ஹோட்டலில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் […]
மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் […]
தமிழகத்தில் திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை குறைந்துள்ளதால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விதிமுறைகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் ரசிகர்களின் வருகை குறைந்ததால் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பெரிய […]
உலகின் எந்த நாட்டில் உள்ளவர்களும் power ball போட்டியில் கலந்து கொண்டு கோடீஸ்வரர் ஆகலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலகின் மிக பிரபலமான Power ball லாட்டரி போட்டி மூலம் $243 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல உலகின் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தற்போது உலகில் எந்த மூலை முடுக்கிரும் இருப்பவர்களுக்கும் Power ball விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். $243,000,000 […]
10 மற்றும் 12 ம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு எழுத்துப் பூர்வமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்நோய் தொற்று தீவிரமடைந்து வந்ததன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்படவில்லை. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் […]
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மேலும் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடரும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை யில் காலை 5 மணி […]
தமிழகத்தில் திரையரங்குகள் வருகின்ற 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் வருகின்ற 10ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். தாங்கள் வைத்துள்ள திரைப் படங்களை திரையிடுவதற்கு முடிவு செய்து இருப்பதாக அவர் கூறினார். விபிஎப் கட்டணம் பற்றி திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த […]