பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கூறிய விதமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோவுக்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இவருடைய கருத்திற்கு எதிராக நாடு முழுவதும் பா.ஜ.க- வினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க சார்பாக நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பாக்தாத் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அதில் பேசிய பா.ஜ.க உள்ளூர் நிர்வாகியும் மாவட்ட கவுன்சில் உறுப்பினருமான மனுபால் பன்சால் அதிரடியான அறிவிப்பு […]
Tag: வெளியுறவு மந்திரி
இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்றோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஜி-20 […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஏழு பேரையும் அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படை படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை வெதுவாக பாதிக்கிறது. பாகிஸ்தான் ஜல சந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகும். தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை. […]
ரஷ்ய புகலிட கோரிக்கையாளர்களுக்கு விசா அளிக்க வேண்டும் என்று உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 172-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. அதன்படி, பின்லாந்து, எஸ்டோனியா மற்றும் லாட்வியா போன்ற நாடுகள் ரஷ்ய மக்கள் தங்கள் நாட்டிற்குள் புகலிடம் கோரி நுழைய தடை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக […]
தைவான் மற்றும் சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீன அரசு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜோசப் வூ தெரிவித்திருப்பதாவது, எங்கள் நாட்டிற்கு யாரை வரவேற்க வேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். மேலும், தைவான் நாட்டை […]
அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவால் பிடிபட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க கோரி ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினேன். இந்த பேச்சு வார்த்தை 25 நிமிடங்கள் வரை நீடித்தது. அதனை தொடர்ந்து வெளிப்படையாக மற்றும் நேரடியாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் பால் வீலன் மற்றும் பிரிட்னி கிரினர் இருவரையும் விடுவிப்பதற்கு அமெரிக்காவில் உள்ள ரஷ்யர்களை விடுவிப்பது என்ற பெரிய அளவிலான […]
இஸ்ரேலில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அந்த கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி ஏற்றது. இருந்தபோதிலும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கட்சியில் […]
வட கொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியகுழு கூட்டம் அந்நாட்டின் தலைவர் கிம்ஜாங் அன் தலைமையில் நடைபெற்றது. அதாவது 3 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது, நாட்டின் ராணுவபலத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தின் இறுதிநாளான நேற்று முன்தினம் வட கொரியாவின் புது வெளியுறவு மந்திரியாக சோ சோன்-ஹுய் என்ற பெண் நியமிக்கப்பட்டார். வட கொரியா வரலாற்றில் வெளியுறவு மந்திரியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன் […]
ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ரஷ்யா தெரிவிக்கிறது. […]
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பொருளாதார மேம்பாட்டு துறை மந்திரியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலகளாவிய வளர்ச்சி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மன் நாட்டிற்கு சென்றிருக்கிறார். இதனிடையே ஜெய்சங்கர் பல நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதன்படி, அவர் ஜெர்மன் நாட்டின் வெளியுறவு மந்திரியான அன்னலேனா பாயர்போக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவது […]
கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். […]
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிலிப்பைன்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குவாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதனை அடுத்து மத்திய […]