அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]
Tag: வெள்ளை மாளிகை
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட செய்தி கிடைத்தவுடன் அதை மேடையிலேயே ஜோபைடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் 79 வயதான ஜோ பைடன் ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். அதாவது ரிஷி என்பதை ரிஷித் எனவும் சுனக் என்பதை சினூக் ஹெலிகாப்டரை நினைவுபடுத்தும் விதமாக சனூக் எனவும் மாற்றி […]
ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் […]
அமெரிக்காவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு வயது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி பிரபல அமெரிக்க ஊடகம் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் ஜோ […]
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. இது அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதிகாரப்பூர்வ பணியிடம் ஆகும். இந்த வெள்ளை மாளிகையின் கட்டுமான பணிகள் கடந்த 1792-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கப்பட்டு 1800-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நிறைவடைந்தது. இந்த வெள்ளை மாளிகை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படுகிறது. இந்த கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தினால் கூட சில அறைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த வெள்ளை மாளிகையில் […]
அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவும் படி கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக, ரஷிய தன்னலக்குழுக்களின் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளித்திடுமாறு அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக, வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மற்றும் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் நலனுக்காகவும், மேலும் […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நேர்காணலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வருவார் என நான் நினைக்கிறேன். இருப்பினும் அது அவருடைய பாதுகாப்பு நிலைமை மற்றும் சுய முடிவை பொறுத்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் ஜோ பைடனிடம் உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை […]
ரஷ்ய படையெடுப்பில் இருந்து மீளும் வரை உக்ரைனுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ராணுவம், பொருளாதாரம், மனிதாபிமானம் என அனைத்து வழிகளிலும் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம். உக்ரைனுடனான எங்களின் வரலாற்று ஆதரவு நிச்சயம் தொடரும். இந்தப் போரில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் அதுவரை உக்ரைனின் ஒரு பகுதியாக அமெரிக்கா விளங்கும். உக்ரைனை எதிர்க்க திட்டமிட்டிருக்கும் ரஷ்யாவின் […]
அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்க நாட்டின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்றவர் ஜோ பைடன். இவர் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் அதிக முன்னுரிமையை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் கொரோனா கட்டுப்பாடு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டாக்டர் ஆஷிஷ் ஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அளவிலான கொரோனா தொற்றுக்கு […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, போராட்டம் நடைபெற்று வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பிற நாடுகள் இதில் தலையிட்டால் வரலாறு காணாத கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என்று கடுமையாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் போரை தொடங்கியுள்ளன. இதில், டினிப்ரோ, கார்கிவ், கீவ் ஆகிய நகரங்களில் […]
அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்றை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோணி வுசி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். எனவே, கொரோனாவை தடுக்க நான்காம் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக இருக்கும் அந்தோணி வுசி […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் வில்லோ என்ற பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு இரண்டு வயது ஆகிறது. ஜில் பைடன் வளர்த்து வரும் பூனையின் பெயர் வில்லோ. இந்தப்பெயரை ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூறும் வகையில் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜில் பைடன் தேர்தல் பரப்புரைகள் ஆற்றிக் கொண்டிருந்த போது […]
அமெரிக்க நாட்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் புதிய சி பேண்ட் 5-ஜி சேவை விமானங்களின் பயண உயரத்தை காண்பிக்கும் அல்டி மீட்டர் கருவிக்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, மியாமி, ஆர்லண்டோ, டல்லாஸ், பாஸ்டன் மற்றும் சியாட்டில் போன்ற பல நகர்களின் விமான சேவை இதன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக துபாய்க்குரிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனினும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் விமானங்கள் செயல்படும் […]
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வருகின்ற 19ஆம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று வெள்ளை […]
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகரான ஆண்டனி பவுசி, ஒமிக்ரான் தொற்றுக்கு என்று தனியாக தடுப்பூசி கண்டுபிடிக்க தேவையில்லை என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் கொரோனா தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. இதில், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராக உள்ள ஆண்டனி பவுசி பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ் ஒமிக்ரான் தொற்றை எதிர்த்து செயல்படும். எனவே, ஒமிக்ரான் தொற்றுக்கென்று தனியாக தடுப்பூசி […]
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை பெற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக குதிரை வண்டியில் கிறிஸ்துமஸ் மரம் கொண்டுவரப்படும். அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரம் வட கரோலினாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு குதிரை வண்டியில் கொண்டுவரப்பட்ட அந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அந்த கிறிஸ்மஸ் […]
நவம்பர் 8 முதல் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு பயணிகள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் முழுமையாக பெற்றிருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நவம்பர் 8-ஆம் தேதி முதல் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயண வழிகாட்டுதலில் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸையும் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்காவுக்கு செல்லும் […]
அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது கௌவுரமிக்கதாக கருதப்படுகிறது. அமெரிக்க அதிபரின் அலுவலகமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களை அதிகாரிகளாக நியமனம் செய்வது வழக்கம். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது, “2021-2022 ஆம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் பயிற்சி உதவியாளர் பணிக்கு 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 3 போ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஜாய் பாசு, சன்னி படேல் ஆகியோர் கலிஃபோர்னியா […]
உச்சி மாநாட்டில் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக புடின் இளம்பெண் ஒருவரை அழைத்து வந்தார். முன்னால் வெள்ளை மாளிகை செயலரான Stephanie Grisham தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியதாவது “ஜப்பானில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்ற புடின் ஒரு கவர்ச்சியான பெண்ணை மொழி பெயர்ப்பாளராக அழைத்து வந்ததார். அவர் ட்ரம்பின் கவனத்தை திசை திருப்புவதற்காக பெண்ணை அழைத்து வந்து இருக்கலாம் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பெண் Daria […]
பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்த ஜோ பைடன் பின் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை காமெடியாக பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையினில் அவரை வரவேற்ற ஜோ பைடன் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து காமெடியாக பேசியுள்ளார். அப்போது ஜோ பைடன் […]
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து சுமார் 12 மணி நேரங்களுக்குள் 4200 நபர்கள் வெளியேற்றப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, அமெரிக்கா, இந்தியா இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களை விமானங்கள் மூலம் மீட்டு வருகிறது. இதனால் காபூல் விமான நிலையம், அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இம்மாத இறுதிக்குள் காபூலில் மீட்புப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் தங்கள் […]
வெள்ளை மாளிகை, ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேற்றுவதாக தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் அரச படையினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. எனவே அந்நாட்டின் அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இறக்கப்பட்டது. சுமார் இருபது வருடங்களாக தொடர்ந்த இந்த மோதலில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு […]
இந்தியா கொரோனாவை எதிர்கொள்வதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த சமயத்தில், இந்தியா பல உதவிகள் செய்தது. இதேபோன்று இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்தபோது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 100 மில்லியன் மதிப்புடைய உதவி பொருட்களை அறிவித்திருந்தார். மேலும் இந்தியா-அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு, 1.2 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பியது. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரான […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானியை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தங்களது படை வீரர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப பெறும் நடவடிக்கையில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசும் அந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இந்நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை வருகின்ற 25-ஆம் தேதி முதல் முறையாக வெள்ளை மாளிகையில் […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது . அமெரிக்கா வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிர்வாக அலுவலக இயக்குனராக நீரா டாண்டன் நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் நியமிக்கப்படுவதற்கு சில எம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் நியமிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகக்கட்சி எம்.பி ராபர்ட் போர்ட்மன் மற்றும் சூசன் கலின்ஸ் உள்ளிட்ட குடியரசு கட்சி எம்.பிகளும் நீரா டாண்டன் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் […]
கமலா ஹாரிஸின் பெயரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தக் கூடாது என்று மீனா ஹாரிஸ்க்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. கமலா ஹாரிஸின் தங்கை மகளான மீனா ஹாரிஸ் வழக்கறிஞர் மற்றும் தொழில் முனைவராக உள்ளார். மீனா ஹாரிஸ் “phenomenal” என்ற ஆடை தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வரும் நிலையில் அந்த நிறுவனம் கமலா ஹாரிஷை குறிப்பிட்டு “Vice President Aunty” என்று அச்சடிக்கப்பட்டு ஆடை ஒன்றை வெளியிட்டது. இந்த செயலானது சட்டத்திற்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை […]
கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று மீனா ஹாரிஸிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் நின்று கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் திகழ்கிறார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் மருமகளான மீனா ஹாரிஸ் சில நாட்களாக தனது பதிவுகளில் கமலா ஹாரிஸின் பெயரை பயன்படுத்தி வருகிறார். இதனால் அவருக்கு வெள்ளை மாளிகை […]
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்பு இது ஒரு புதிய தினம் என ஜோ பைடன் டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதிபராக 4 ஆண்டுகள் பதவி வகித்த டிரம்ப், பல்வேறு குழப்பங்களை செய்த டிரம்ப் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகையை காலி செய்து புறப்பட்டுவிட்டார். புதிய அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு கூட வர மாட்டேன் என்று பிடிவாதமாக கூறியுள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு செல்லும் காட்சிகள் தொலைக்காட்சியில் நேரடியாக […]
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அடம்பிடிக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோதிடம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றதை மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் […]
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பிற்கு 100 மில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வருமானம் கொடுப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர். 100 மில்லியன் டாலர்களை வருமானமாக கொடுக்க தொலைக்காட்சிகளும் புத்தக வெளியீட்டாளர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் வெள்ளை மாளிகையில் செலவிட்ட காலகட்டத்தை புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். 70 மில்லியன் வாக்குகள் உங்களுக்கு கிடைத்து இருப்பதால் அதனை […]
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் […]
கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பூரணமாக குணமடைந்து ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளைமாளிகை திரும்பினார். 74 வயது நிறைவடைந்த டிரம்ப் கடந்த 2-ஆம் தேதி கொரோனா தொற்றின் காரணமாக வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடம்பில் காய்ச்சல் அதிகமாகி ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டிரம்பின் ஊழியர் தலைவர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.ஆனால் டிரம்பிற்கு சிகிச்சையளித்த மருத்துவ வல்லுனர்கள் டிரம்பின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக […]
இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் வருகின்ற 18ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவை மேற்கொள்ளும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி கையெழுத்தாகியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன் மூலமாக இஸ்ரேலுடன் தூதரக […]
ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றுகள் அளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். அப்போது இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணனை வரவேற்று […]
இந்தியாவுடனான உறவில் ஜனாதிபதி டிரம்ப் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்காவின் முந்தைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்ள ஜனாதிபதி டிரம்ப், இந்தியா- அமெரிக்க உறவில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், இந்த உறவை இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேம்படுத்துவது என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இதுபற்றி […]
வெள்ளை மாளிகைக்கு வெளியே சுற்றித் திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிபர் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லம் என்பதால் எப்போதும் வெள்ளை மாளிகையை சுற்றிலும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறார். அதனை அறிந்த சீக்ரெட் சர்வீஸ் […]
வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேற டொனால்டு டிரம்ப் மறுத்தாலும் கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என அமெரிக்க சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாக்ஸ் நியூஸ் பேட்டி நடந்த போது ட்ரம்ப் அமெரிக்க தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி கூற மறுத்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்க தலைவர்கள் அனைவரும் அதிபர் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இது பற்றி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், “தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்ப் தோற்றுவிட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. […]
டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி உலகையே கதிகலங்கச்செய்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரசால் அமெரிக்காவில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்று விட்டது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு […]