முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் […]
Tag: வெள்ள அபாயம்
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 4297 கன அடியாக உள்ளது. இதனால் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கரையோரம் வசிக்கும் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக […]
சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , […]
திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் […]
காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் […]
சென்னை பூண்டி ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு உபரி நீர் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளதால் உபரிநீர் திறக்கப்பட இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் 4 மாவட்டங்களில் உள்ள ஏரி குளங்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில் குடிநீர் தரும் 5 முக்கிய ஏரிகளில் […]
வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சுவிட்சர்லாந்திலிருக்கும் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவையும் எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும் ஏரியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்விட்சர்லாந்தில் பெய்து வரும் கனமழையால் Zug என்னும் மாவட்டத்தில் உள்ள Reuss என்னும் ஆற்றின் கரை பகுதி உடைந்துள்ளது. இதனால் […]
டவ்-தே புயலால் கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் செல்வதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தர விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் டவ்-தே […]
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புலால் மற்றும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து […]
வேலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் […]
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை […]
கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பெருமாள் ஏரி திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த […]
மதுரை மாவட்டத்தில் வைகை அணை திறப்பால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா […]
ஆந்திர மாநிலத்தில் அம்மபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து நிவர் புயலால் ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மபள்ளி அணையிலிருந்துநீர் திறப்பால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாயம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அனைத்து இடங்களிலும் உள்ள நீர் இருப்புகளில் தண்ணீர் நிரம்பியது. அதன்படி செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால், அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் கரையை கடந்த […]
கர்நாடகாவில் பெய்த கனமழையால் தென்பண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தென் பண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்து 1,440 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்து 39.96 அடிி ஆக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி நீர்வரப்பு முழுவதும் வெளியேற்றப்படுகிறது. கரையோர மக்களுக்கு இரண்டாவது நாளாக வருவாய் துறையினர் […]
டெல்லியில் யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விட வாய்ப்புள்ளது. டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது. அதாவது அரியானாவின் ஹதினிகுண்ட் அணையில் இருந்து நொடிக்கு நாலாயிரத்து 353 கன அடி நீர் யமுனையில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 204 மீட்டராக உயர்ந்துள்ளது. இந்த நீர் மட்ட அளவு இன்னும் அரைமீட்டர் உயரத்துக்கு உயர்ந்தால் கூட வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்படும். சென்ற […]