அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ் .பி.கே பள்ளி சாலை வழியாக புறவழிச் சாலைக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது. ஆனால் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து விடுகிறது. ஆகையால் இங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Tag: வேகத்தடை.
கோவை – திருச்சி சாலையில் புதியதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது […]
டிராக்டரில் இருந்து கீழே விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தூரத்தியேந்தல் பகுதிகள் நாகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ்பாண்டியன் வன்னிவயல் பகுதியில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்ஸ்பண்டியன் ராமநாதபுரத்திற்கு செங்கல்களை இறக்கிவிட்டு மீட்டும் டிராக்டரில் வன்னிவயலுக்கு திரும்பியுள்ளார். அப்போது ரெட்டைபோஸ்ட் பகுதியில் ஒரு வேகத்தடை ஏறி இறங்கிய போது அலெக்ஸ்பாண்டியன் திடீரென டிராக்டரில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு […]
வேகத்தடையின் உயரம் அதிகமாக இருப்பதால் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி டவுன் கச்சேரி மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலையை கடந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. அப்போது விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு நெடுஞ்சாலைதுறை சார்பாக சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் அதிகமாக இருப்பதால் அருகில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து […]
குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி குரங்குகள் உட்பட வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றனர். சாலையின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் உணவு பொருட்களை எடுப்பதற்காக சாலையின் குறுக்கே ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு ஓடும்போது அதிவேகமாக வரும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் சாலை […]