திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]
Tag: வேட்டை
விருதாச்சலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பாய்ந்து பெண் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சாந்தகுமாரி வீட்டின் வெளியே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது கணவரும் குழந்தைகளும் […]
ஆந்திர மாநிலம் கன்னூல் மாவட்டத்தில் உள்ள ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில் 2 குட்டிகளுடன் நாய் ஒன்று வசித்து வந்தது. இந்நிலையில் இரவு நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வந்த சிறுத்தை அங்கு படுத்திருந்த ஒரு குட்டியை வாயில் கவ்வியது. அப்போது தனது குட்டியை காப்பாற்றுவதற்காக நாய் தீரத்துடன் ஓடோடி வந்தது. ஆனால் சிறுத்தை அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது. அதனால் காப்பாற்ற முடியாமல் போனது. இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை கொண்டு வனத்துறையினர் […]
மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து […]
கடமானை வேட்டையாடி சமையல் செய்து சாப்பிட்ட 8 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் பதனவாடி காப்பு காட்டில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வன அலுவலர் நாயுடுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பொன்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில் வனத்துறையினர் சக்திவேல், செல்வமுத்து, பழனிச்சாமி போன்றோர் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் கடமானை வேட்டையாடி ஒரு கும்பல் சமையல் செய்து சாப்பிட்டுக் […]