அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் அரசு வங்கிக்கு தாசில்தார் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுகிறது. இது குறித்து தாசில்தார் காமாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு அரசு வங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பதை வருவாய்த்துறையினர் பார்த்துள்ளனர். […]
Tag: #வேலூர்
குடியாத்தம் அருகில் காளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் வைத்துச் சென்ற ஐம்பொன் சிலையால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள பிச்சனூர் காளியம்மன்பட்டி சாமியார் மலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிரா காளியம்மன் கோவில் கட்டப்பட்டது. இங்கு சுமார் 10 அடி உயரத்திற்கு காளியம்மன் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி பிச்சனூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் பூஜை செய்து வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த […]
மின்கம்பம் அறுந்து விழுந்து பசுமாடு துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒலக்காசி கிராமத்தில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அருகில் இருக்கும் விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி கஸ்தூரி தனது பசுமாட்டை வேப்பூர் ஆற்றோரம் உள்ள ரகு என்பவரது விளைநிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த நிலத்தில் உள்ள தென்னை மரத்தின் மட்டைகள் மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் அறுந்து வயலில் மேய்ந்து […]
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ஊரகசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொத்தப்பல்லி ஊராட்சியில் 38 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஜல்லி மற்றும் தார் சாலையும், கொட்டாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 35 லட்சம் மதிப்பில் சிறு பாலம் மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு […]
மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளை கண்காணிக்க ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 10- ம் தேதியில் இருந்து மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வருதல் மற்றும் சாராயத்தை காய்ச்சுதல் போன்றவை தடுப்பதற்காக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.ஜி.பி உத்தரவின்படி, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆபரேசன் வின்ட் என்ற திட்டத்தில் மது, சாராயம் விற்றலை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் […]
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தை தாமதமாக தருவதாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா தொற்றால் […]
சாராய ரோந்து பணிக்காக சென்று வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுக்கா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்,காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சாராய ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்தப்பகுதியில் இருந்த சாராயம் வியாபாரிகள் அடித்துப் பிடித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சாராய அடுப்பை அடித்து நொறுக்கி […]
உயிரிழந்தவர்களின் சடலத்தை ஒப்படைப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளரை பணியிட மாறுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் சடலத்தை பாதுகாப்பான முறையில் கொடுப்பதற்கு அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அனுப்பி வைப்பதற்கு […]
மீன் மார்க்கெட்டில் இரவு நேரத்தில் மொத்த வியாபாரம் செய்வதற்கு கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து மீன் மார்க்கெட் செயல்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேல் மொத்த வியாபாரம் செய்ய மட்டும் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால் வாடிக்கையாளர்கள் நேரில் சென்று மீன் வாங்க முடியாதனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு மீன்கள் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே நள்ளிரவு […]
வேலூரில் ஒற்றை யானை விரட்டி படுகாயம் அடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் தனது சொந்தமான மாந்தோப்பில் காவலுக்கு சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் அவ்வழியாக வந்த ஒற்றை யானையின் பிளிறல் சத்தத்தை கேட்டு ரமேஷ் அங்கு இருந்து தப்பிக்க முயன்றதால் யானை விரட்டியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து ரமேஷின் அலறல் சத்தத்தை கேட்டு […]
கிராம நிர்வாகி பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னை கிராமத்தில் கவிதா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இவரிடம் பொன்னை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் […]
கொரோனா தடுப்பூசி இருப்பு தீர்ந்து விட்டதால் வந்ததும் பொதுமக்களுக்கு செலுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நகர்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து மாவட்டத்தில் கடந்த மாதம் வந்த 7 ஆயிரம் கோவிசில்டு தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் பணி நிறுத்தப்பட்டு முகாம்களில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை அறியாமல் பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்து ஏமாற்றத்துடன் […]
வேலூருக்கு வந்த 1,320 சித்த மருந்து பெட்டகம் விரைவில் முன்களப் பணியாளர்களுக்கு விநியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் . வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு தொற்று தடுப்பு பணியில் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் வருவாய்த்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் போன்றோர் ஈடுபட்டு வருவதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்திற்கு கேரளா மாநிலத்தில் இருந்து சித்த மருந்து பெட்டகம் மினி […]
ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்து வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா பேட்டை பகுதியில் சரக்கு மினிவேன் டிரைவர் கோபாலகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ரூபாவதி ஆரணி என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும்- விக்னேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் அதே பகுதியில் இருக்கக்கூடிய கோணிப்பைகள் தைக்கும் கடையின் […]
வேலூரில் இதுவரையிலும் வந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தி விட்டதால் தற்போது கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் 45 வயது மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை போன்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட தடுப்பூசியும், […]
காணாமல் போன இளம்பெண்ணை மீட்டு தர வேண்டி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வாழைப்பந்தல் பகுதியில் 16 வயதுள்ள இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் “கிருஷ்ணமூர்த்தி என்பவர் என் மகளின் மனதை மாற்றி கடத்தி வைத்திருப்பதாகவும், என் […]
கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு பணியாளர்களை மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியபோது மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் தினசரி 3,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் […]
கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஆம்பூரில் தினசரி 360 லிட்டர் கபசுர குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நகராட்சி சார்பில் தினசரி சுமார் 360 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்யப்பட்டு நகரப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேதாஜி ரோடு மற்றும் […]
சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டு மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக திரண்டு வந்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பள்ளி கிராமத்தில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே.எஸ். குபேந்திரன், வக்கீல் டி.ஜி.பி, பி. மோகன், பிரபாகரன், கோவிந்தன், துளசிராமுடு பக்தவச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ அமுலு விஜயன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி […]
வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 851 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தன வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் […]
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 80 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக தமிழக- ஆந்திர மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என 55 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிவதால் அவர்களை காவல்துறையினர் நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் […]
பொன்னை ஆற்றங்கரை அருகில் இருக்கும் கிராம மக்கள் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் கேட்டுகொடுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மழை பெய்து அங்குள்ள கலவகுண்டா உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக […]
வேலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, அடுக்கம்பாறை, அணைக்கட்டு, குடியாத்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை இரவு 11 மணி வரை இடைவெளிவிட்டு பரவலாக செய்தது. எனவே கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் கொணவட்டம், சேண்பாக்கம், சம்பத்நகர், கன்சால் பேட்டை போன்ற குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. […]
குடியாத்தம் அருகில் செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் பிடித்து காப்புக் காட்டுக்குள் விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆர். கொல்லப்பல்லி கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக செங்கல் சூளை ஒன்று இருக்கின்றது. அந்த செங்கல் சூளை அருகில் பொதுமக்கள் சென்றபோது அங்கு ஏதோ சத்தம் வந்ததால் அங்கே சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த செங்கல் சூளையில் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்து இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். […]
வேலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் கொத்தக்குப்பம் கிராமத்தில் பிச்சாண்டி மகன் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் சக்திவேல் சென்று கொண்டிருக்கும் போது கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி […]
கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து வரும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வைத்திருக்கும் மாடுகளுக்கு 10 டன் வைக்கோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து பல்வேறு வகையான பொருட்களை ஏற்றிச் செல்லும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வளர்த்து வரும் மாடுகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதுகுறித்து வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்து அவர் மிருகவதை தடுப்பு சங்க துணைத்தலைவர் அனுஷா […]
வேலூரில் தூய்மைப் பணியாளர்கள் திடீர்தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, கிருபானந்தவாரியார் சாலை பகுதிகளில் அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பலர் தள்ளுவண்டி மூலம் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் அருகருகே கடை வைத்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகி கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று புகார் எழுந்துள்ளது. அந்த […]
வேலூரில் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் பணியை உதவி கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா மற்றும் வேறு பிரச்சனைகளால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் வீடு தேடிச்சென்று இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வருவாய்த் துறையினரால் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வீடு தேடி சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து வேலூர் சப்- […]
கரும்பு தோட்டத்திற்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி என்பவரிடமும், தாசில்தாரிடமும் சிறுத்தை ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் அறிவுரையின்படி அதிகாரிகள் மற்றும் […]
கவுண்டன்ய ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தாலுகா மோர்தானா கிராமத்தில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு 261.36 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து 5 நாட்களுக்கு வேலூர் மாவட்டத்தில் கமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கனமழை பெய்து […]
மதுபான கடை சுவரில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருட முயற்சி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கசம் பகுதியில் இருக்கும் மதுபான கடை சுவரில் மர்ம நபர்கள் ஓட்டை போட்டு உள்ளே சென்று சுமார் 3 இலட்சத்து 40 ஆயிரம் […]
மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்த முயற்சி செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து […]
காட்பாடியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் பாக்கெட் சாராயத்தை காட்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த […]
சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு முழு ஊரடங்கை அறிவித்து அதன்படி மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மது விற்பனை செய்தல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருதல், மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்றவை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனாலும் வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, பேரணாம்பட்டு […]
பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாற்று பகுதியில் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு வெங்கடேசன் என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து […]
மாங்காய் மண்டி அருகில் மழை நீர் சூழ்ந்து காய்கறிகள் நனைந்ததால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பழைய பேருந்து நிலையம் கிரீன் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி கிடந்தது. எனவே இந்த கனமழையால் மாங்காய்மண்டி அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மொத்தவிற்பனை காய்கறி கடை பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் தக்காளி, வெங்காயம் என 150 டன் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]
வேலூரில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வந்தபின் செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி நான்கு வாரங்களுக்கு பிறகு 2- வது டோஸ் தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் காந்தி ரோட்டில் உள்ள அரிஹந்த் மைதானம், காட்பாடி காந்தி நகரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம், ஊரீசு கல்லூரி […]
ரேசன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தின் வழியாக திருப்பத்தூரில் இருந்து ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட கலெக்டர் பார்த்திபன் உத்தரவின்படி பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை […]
முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பழங்கள் பொது மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மேலும் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுறை, வேளாண்மை இயக்குனர் ரேணுகாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட […]
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள நரியம்பட்டு கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்-சுடர்மதி என்ற தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளாக மாமியார் வீடான பத்தலப் பல்லி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்வின்ராஜ், ரோஷன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின்ராஜிக்கு காய்ச்சலுடன் வாந்தி ஏற்பட்டதால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் அஸ்வின்ராஜை பரிசோதனை செய்யாமலயே அங்கிருந்த செவிலியரிடம் போன் […]
வேலூரில் கணவரை பொய் புகாரின் பேரில் கைது செய்ததாக மனைவி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தலைவர் கஜா என்ற கிருஷ்ணமூர்த்தி வியாபாரிகளுக்கு கடை அமைப்பதற்காக தன்னிச்சையாக அடையாள அட்டை வழங்கியுள்ளார். இதனால் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி அவரது மகள் மற்றும் உறவினர்களுடன் […]
கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை தந்தையே எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு அருகில் கடந்த 24- ஆம் தேதி கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை அதே மாவட்டத்திலுள்ள தொரப்பாடி பகுதியில் வசிக்கும் ஜோதி- சுவாதி தம்பதியினர்க்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் இவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தனியாக வசித்து […]
குடியாத்தம் அருகில் கிராம பகுதிக்குள் நுழைய முயன்ற யானைகள் கூட்டத்தை கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் விரட்டி அடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் விவசாய நிலத்திற்குள் யானைகள் நுழைந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதனால் கிராம மக்களின் உதவியுடன் வனத்துறையினர் அந்த யானைகளை விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் 15 யானைகள் கூட்டம் கடந்த சில தினங்களாக பரதராமி கன்னிகாபுரம் பகுதியில் நுழைவதற்கு முயன்றுள்ளது. அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]
வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 18 வயது மேல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்த மாவட்டத்திற்கு வந்த 40 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் முன்னுரிமை […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனால் மாவட்டத்திற்கு வந்த 40 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசியை செலுத்துவதற்காக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஆனால் கோவேக்சின் தடுப்பூசி […]
சட்டவிரோதமாக 18 வயது பூர்த்தியாகாத 2 மாணவிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அலுவலர் வில்லி, சைல்டுலைன் ஊழியர் சங்கர் மற்றும் வேலூர் வடக்கு காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த 15வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கேளூர் பகுதியில் […]
தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் தடுப்பூசி டிரைவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் போன்றோர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு […]
வேலூரில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் தினசரி ஏராளமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருபவர்கள் மீது கருப்பு பூஞ்சை என்னும் புதிய நோய் தாக்குகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆனால் வேலூர் […]
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் கருகி எரிந்த நிலையில் அட்டைப்பெட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது பெட்டிக்குள் பச்சிளம் குழந்தை கருகி இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி […]