வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவர் ஆண் பக்தர்களிடம் பாலியல் தொல்லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருக்கும் சாமியார் ஒருவருக்கு ஆண்களை மட்டும் தான் பிடிக்கும். அந்த சாமியார் ஆண் பக்தர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் நெருக்கமாக இருந்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. வேலூர் முழுவதிலும் இரண்டு நாட்களாக சாமியார் பற்றி தான் ஒரே பேச்சு. அந்த சாமியாரை நிஜப்பெயர் சாந்தகுமார். அதன்பிறகு சாமியாராக மாறி சாந்தா ஸ்வாமிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். […]
Tag: #வேலூர்
நபர் ஒருவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த போது லாரி மோதியதால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த விருதம்பட்டில் வசிப்பவர் பழனிவேலு (வயது 38). ஆட்டோ டிரைவரான இவர் காட்பாடியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிவேலு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் ஆட்டோவில் கொணவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பணம் வாங்குவதற்கு சென்றுள்ளனர். இதையடுத்து மேல்மொணவூர் பக்கம் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை ஆட்டோவில் […]
பள்ளிகொண்டா அருகே இளம்பெண் ஒருவர் கோவில் முன்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ராமாபுரம் சாலையில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பமரம் ஒன்றில் இன்று காலை பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய […]
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியை கணவரே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் மஞ்சுரேகா தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. பிரிந்துசென்ற மஞ்சுரேகா வளத்தூர் பகுதியில் தனது தாய் வீட்டில் தங்கி மாதனுர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரிந்து […]
வேலூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். அவர் நேற்று மாலை தனது நண்பர் சந்தோஷ் குமார் காரில் காட்பாடியிலிருந்து ஓட்டேரியில் தனது தாயார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது நேஷனல் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு பாலகிருஷ்ணன் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12.30 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் அதே பகுதியில் கேபிள் டிவி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12.30 லட்சம் ரூபாய் […]
காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தில் அமைந்த கே.வி குப்பம் அருகே சென்னங்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகாரத்தினம். கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு காரில் இருந்த அமிலத்தை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் எரிச்சலில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கே. வி குப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை […]
தந்தை மகள் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் ஜார்தாகொல்லைமலை கிராமத்தில் வசித்து வருபவர்கள் பொன்னுசாமி – பாஞ்சாலை தம்பதியினர் . இவர்களுக்கு தீபா என்ற 10 வயது மகள் இருக்கின்றார். அங்குள்ள ரங்கப்பன்கொட்டாய் இடத்தில் அன்வர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் பொன்னுசாமி தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.பாஞ்சாலை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஒரே வீட்டில் மனைவி தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருக்கின்றனர். காலை நேரத்தில் […]
வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல் திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]
வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் […]
வேலூர் அருகே விவகாரத்து பெறும் முடிவில் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவனை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். வேலூர் அடுத்த பேரணாம்பட்டு பத்திரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவர், தனது தாய்மாமன் மகளான சுப்புலட்சுமியை 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாள்முதலே கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து பெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்கே சென்றுவிடும் முடிவில் இருந்துள்ளார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் யுவராஜுக்கும், சுப்புலட்சுமிக்கும் நேற்று […]
குடும்ப தகராறில் மனைவி செருப்பால் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் பத்திரபல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே தகராறு அதிகரித்ததால் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக […]
வேலூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 […]
வேலூரில் 50 மூட்டை குட்கா பொருள்களை வேன்களில் கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பகுதியில் பெண்கள் மூலமாக 50 மூட்டை குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குட்கா பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிமுடித்த கட்டிடங்களை திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கரிகிரி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 400 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, 40 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். மேலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 18,589 […]
முறைகேடாக இ-பாஸ் வாங்கி கொடுத்த ஜெகதீஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூரில் வசித்து வரும் ஜெகதீஷ்குமார் என்பவர் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்று கொடுத்துள்ளார். அவ்வாறு பெற்றுத்தரும் இ-பாஸ்க்கு தலா 2,500 ரூபாய் வசூலித்து வந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் செய்துள்ள முறைகேடுகள் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் தொடர்புடைய திருப்பூரை சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். […]
வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த 8 நாள் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று வேலூர் மாவட்டத்தில் மிகவும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குடியாத்தம் நகரிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.. இதுவரை குடியாத்தம் நகரில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே குடியாத்தம் நகராட்சியில் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காலை 6 மணி முதல் மதியம் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் 24ஆம் தேதி (இன்று) முதல் 31ஆம் தேதி வரை […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் மீது கார் மோதியதில், நான்கரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவரது மனைவி கவிதா.. செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. இவரது மனைவி கவிதா வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், இவர்களது இளைய மகள் சாரா நேற்று இரவு சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஈசாக் என்பவர் சரியாக […]
கடந்த சில வாரங்களாக சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற பகுதிகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு சவால் அளிக்கிறது. இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் தமிழக அரசு அதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சிக்கின்றது. அந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தலைநகர் சென்னையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்க உத்தரவை பிறப்பித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் இணைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஜூலை 24 முதல் 31ம் தேதி (8 நாள் ) முழுவதும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் சில பகுதிகளில் ஆங்காங்கே மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தின் சில பகுதிகளில் இதேபோல் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் வரிசையில் தற்போது குடியாத்தம் நகராட்சியும் சேர்ந்திருக்கிறது. குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை […]
தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், மதிப்பெண் குறைவாக பெற்றதால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார்.. இவருக்கு வயது 17 ஆகிறது.. குடியாத்தத்தில் இருக்கும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கணக்கு-உயிரியல் பாடப்பிரிவில் 12ம் வகுப்பு படித்தார். இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்று […]
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் அசோக்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் அசோக்குமார் 600க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் தான் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக வருந்திய […]
சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான […]
வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக 45 கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள அரசுத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 நாட்களில் துறை வாரியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானதில், அங்குள்ள 45 கடைகளில் […]
தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]
வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூரில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 […]
வேலூரில் இன்று ஒரே நாளில் 3 நீதிபதிகள் உள்பட அதிகபட்சமாக 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை 1,241 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 286 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 951 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 3 நீதிபதிகள் உள்பட129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,378ஆக […]
வேலூர் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 897 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வேலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் கடந்த இரு நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் வேலூரில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 750 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 168 பேர் கொரோனாவில் […]
அரசு மருத்துவமனையில் தவறாக நடக்க முயன்ற வாலிபரை பெண் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு எதிரில் கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் காத்திருப்பது வழக்கம்.. அதன்படி இங்கு 40 வயதுடைய பெண் ஒருவர் காத்திருந்தபோது, அவரை வாலிபர் ஒருவர் சுற்றிசுற்றி வந்துள்ளார். அவரிடம் தவறாக நடப்பதற்கு முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், கடுமையாக திட்டி காலில் […]
மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த […]
வேலூர் செல்லியம்மன் கோவிலில் பள்ளி மாணவிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை சமூகநல அலுவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.. அதன்பேரில், வேலூர் பெண்கள் ஒருங்கிணைப்பு சேவை மைய நிர்வாகி பிரியங்கா, சமூகநல அலுவலர்கள் ரம்யா, சங்கரி மற்றும் சத்துவாச்சாரி காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.. அதில், சத்துவாச்சாரி முருகன் தியேட்டர் தெருவிலுள்ள பாட்டி வீட்டில் தங்கி […]
தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ள நிலையில் 757ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னைக்கு […]
வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 தினங்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, துணிக்கடைகள், நகைக்கடைகள், ஷோரூம்களும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இறைச்சிக் கடைகள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே இயங்கும் என கூறப்பட்டுள்ளது. வேலூர் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நடமாட்டாதி குறைக்கும் வகையில் இவ்வாறு நடவடிக்கை […]
வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிடுவதாக மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியானார்.. வேலூர் மாவட்டம் பாகாயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்திருந்தார். 11 ஆம் வகுப்பு செல்ல இருந்தார்.. இந்நிலையில் தான் அந்த மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கணபதி என்ற தாமஸ் (19) மற்றும் 17 வயது […]
வேலூர் சி.எம்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து ஆம்பூர் சென்ற 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, திருவண்ணாமலையை சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே,சென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை […]
செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதால் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தச்சு வேலை செய்பவரின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அப்போது திடீரென மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி தீ குளித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தீ பற்றி எரிந்ததும் மாணவியின் அலறல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து […]
வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]
வேலூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் பலியானார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில் நேற்று (ஜூன் 11) மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனனின்றி நேற்று பரிதாபமாக பலியானார். இதுவரை வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். அதில் 20 வயது கர்ப்பிணி […]