Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எனக்கு சொத்து வேணும்… தாய், தந்தையை அடித்துக்கொன்ற விவசாயி..!!

சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலை விட்டுடுங்க… மகளை தாக்கியதால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்..!!

வேலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. வேலூர் அருகேயுள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்.. 42 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். தற்போது தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு சித்ரா (36) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 15  ஆண்டுகளுக்கு மேலாகிறது.. தற்போது இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பகலில் நோட்டமிட்டு… இரவில் தூக்கி சென்ற திருடர்கள்… விசாரணையில் அதிர்ந்த காவல்துறை..!!

வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. வேலூர் அடுத்துள்ள கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள் மற்றும் ஆடுகள் திருட்டு போனது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி, மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது. இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து… தொழிலதிபர் உடல்நசுங்கி பலி..!!

மதுகுடித்து விட்டு போதையில்  காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு இன்று கொரோனா உறுதி!

வேலூரில் 8 மருத்துவ பணியாளர் உட்பட 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் இதுவரை 38 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனோவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 16,395 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, வேலூர், தென்காசி உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்த்திரம், ரெட்டியார்பட்டி,வீரகேளம்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் காங்கேயம், வள்ளலார், சத்துவாச்சாரி, காதிப்பட்டறை பகுதிகளால் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் மற்றும் அதன் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை மையம்!!

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

45 வயது மணமகன்… 20 வயது மணமகள்… திருமணமாகி 3ஆவது நாளில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!

திருமணமான மூன்று நாட்களிலேயே புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் பெட்டி கடை வைத்துள்ள சங்கர்(45) என்பவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் மகள் மகாலட்சுமி(20) என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மகாலட்சுமி சங்கரை விட 25 வயது சிறியவர். இருந்தும் பெற்றோர் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கடந்த 29ஆம் தேதி கோவிலில் வைத்து அவசர அவசரமாக திருமணத்தை முடித்துள்ளனர். திருமணம் முடிந்து கணவரின் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வேலூர்

BREAKING : தமிழகத்தில் கொரோனா பலி 8ஆக அதிகரிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது. அதனை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

BREAKING : வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு ….!!

வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து – ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29லிருந்து 35ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஏப்., 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தியது. ஆனால் சிலர் இந்த உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவு மீறியதாக 4,100 பேர் மீதி தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

வேலூரில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி? சிகிச்சை பெற்று வருவதாக தகவல்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய 3 பேர் கைது …!!

கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி காட்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளி ,கல்லூரிகள் , திரையரங்குகள், வணிக வளாகங்கள் , மால்கள் என அனைத்தையும் வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் யாரும் பொது இடங்களில் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

தோசை மாஸ்டரின் “மாஸ்டர் பிளான்” … 7 ஆண்டுகளில் கோடிஸ்வரன்..! போலீஸ் கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிராமத்தில் வீசிய துர்நாற்றம் …. ஊருக்குள் கசிந்த தகவல்! தோண்டியபோது காத்திருந்த அதிர்ச்சி..!

குடியாத்தம் அருகே மத்தேட்டிபள்ளி என்னும் இடத்தில் பிச்சாண்டி என்பவர் தனியாருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி  யானைகள் தோட்டத்தில் புகுந்து பயிர்களை அழித்து வந்துள்ளது. இதையடுத்து  பயிர்களை காப்பதற்காக பிச்சாண்டி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து  தனியாக வந்த 20 வயது மதிக்கத்தக்க  ஆண் யானை ஓன்று  தோட்டத்திற்குள்  நுழைய முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிபட்டு உயிருக்கு போராடிய நாய்… பதறும் நெஞ்சம்… 5 குட்டிகளை காப்பாற்ற உதவிய நபர்!

வேலூரில் அடிபட்டு உயிரிழந்த  நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து  5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில்  நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் […]

Categories

Tech |