சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசுவதற்கு வசதி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறைச்சாலை மற்றும் பெண்கள் தனிச்சிறை இருக்கின்றது. இந்த சிறைச்சாலைகளில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். எனவே கொரோனா தொற்று பரவலின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
Tag: #வேலூர்
வேலூரில் தபால் நிலையத்தில் மீண்டும் ஆதார் சேவையானது இயக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சி.எம்.சி. மருத்துவமனை, லத்தேரி, காந்திநகர், குருவராஜபாளையம், காட்பாடி, ஒடுக்கத்தூர், தொரப்பாடி, ஓசூர், சைதாப்பேட்டை, போன்ற பல்வேறு இடங்களில் ஆதார் சேவை கொடுக்கப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு அறிவித்துள்ள தளர்வின்படி மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. […]
ஓட்டேரியில் சாலையின் நடுவில் வேரோடு சரிந்த புளியமரத்தை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அகற்றி சீர் செய்தனர். வேலூர் மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து மண் ஈரப்பதத்துடன் இருப்பதனால் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகில் வேலூர்- ஆரணி சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சாலையின் நடுவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி காந்திரோடு, ஜெயராம்செட்டி தெருவில் ஜெயின் சங்கம், மாவட்ட சமூகநலத்துறை ஆகியவை சேர்ந்து திருநங்கைகளுக்கு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தியது. அதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, ஜெயின் சங்க தலைவர் ருக்ஜிராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் […]
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் குடிசை கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சுரேஷ் 10-ம் வகுப்பு படித்து இருக்கின்றார். இவர் தற்போது பள்ளி திறக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருடன் சுரேஷ் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தொரப்பாடி கே.கே நகரில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் பணிக்காக சுரேஷ் சென்றுள்ளார். அந்த […]
கொரோனா தடுப்பூசி செலுத்த தயங்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனையடுத்து கர்ப்பிணி பெண்கள் அங்குச் சென்று வழக்கமான மருத்துவர் பரிசோதனை செய்யப்பட்டு சத்துவாச்சாரி அரசு ஆரம்ப […]
வேலூரில் சிறுமியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டையில் 17 வயது சிறுமி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் கம்மவான்பேட்டை பகுதியில் வசித்து வரும் கவுதம் என்பவர் சிறுமியை காதலித்ததும், அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடத்திச் சென்றதும் […]
தங்கும் விடுதியில் பெண் சடலமாக கிடந்ததை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரியூர், ஜீவரத்தினம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது கழிவறையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மனு அளித்துள்ளனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தலைமையில், விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றைகொடுத்துள்ளனர். அந்த மனுவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சில இடங்களில் மிகக் குறைந்த அளவில் இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு சில இடங்களில் இன்னும் […]
ஊராட்சி செயலாளர் மீது பெறப்பட்ட முறைகேடு புகார் எதிரொலியால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு ஊராட்சி ஒன்றியத்தில் சேவூர் ஊராட்சி செயலாளராக பிரபு வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து பிரபு வேலை பார்க்கும் சேவூர் பஞ்சாயத்து மற்றும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள செம்பராயநல்லூர் ஊராட்சியின் கோப்புகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் பிரபுவை வட்டார வளர்ச்சி அலுவலரான நந்தகுமார் பணியிடை நீக்கம் செய்யகோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். […]
காட்பாடியில் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்கு சென்ற 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மூலகசம் ஓடைப் பகுதி காட்பாடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சூடு வெடிக்கும் சத்தம் கேட்டு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பூனை, முயலை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கையும் களவுமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் வனத்துறை […]
விமானத்தில் வந்து மாடு திருடும் தொழிலில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் புதுவீதியில் ரசாக் என்ற மாட்டு வியாபாரி வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாட்டை ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மாடு வீடு திரும்பாததால் ரசாக் தனது பசுமாட்டை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரசாக் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
வேலையில் இருந்து திடீரென நீக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை, தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி, கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றில் பணிபுரிவதற்காக மருத்துவ உதவியாளர்கள் மற்றும் செவிலியர்கள் என 106 நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே செவிலியர்கள் கடந்த 2 மாதங்களாக பணியிலிருந்த நிலையில் திடீரென அவர்களுக்கு வேலை இல்லை எனக் கூறி […]
சமூக இடைவெளியுடன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவில்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக வட்டம் வரையும் பணி தீவிரமாக […]
பழைய பேருந்து நிலையத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி உள்ளே நுழையும் ஆட்டோ உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு ஆற்காடு, பள்ளிகொண்டான் போன்ற பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் […]
மோட்டார் சைக்கிளில் கன்றுக்குட்டியை திருடிவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் ஒரு கன்று குட்டியை கொண்டு வந்தனர். இதனையடுத்து 3 பேரையும் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை […]
மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டம் மக்கான் மீன்மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனையும், அங்குள்ள பேருந்து நிலையத்தில் சில்லரை மீன் விற்பனையும் நடைபெற்று வருகின்றது. எனவே கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் நிரந்தர தடுப்பு முகாம்களில் 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி முகாம்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவு ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். இதுகுறித்து […]
வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 202 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 227 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா […]
கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இந்த கன மழையினால் பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டு அருகில் மண் சுவரில் ஓலைக் கொட்டகை அமைத்து அதில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை […]
நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மர்ம நபர்கள் சிலர் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகையை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது. இந்நிலையில் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் அவரது நகையை பறித்துச் சென்றனர். இதனையடுத்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யக்கோரி வேலூர் […]
அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் வாகனங்கள் அதிக அளவு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு சாரதி மாளிகையில் இருந்து ஆரணி ரோடு திரும்பும் வரையிலும் மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளனர். இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூரில் பெய்துவரும் கன மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பொன்னை போன்ற பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை காரணமாக மாங்காய்மண்டி அருகில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்ததால் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே மாநகராட்சி பகுதிகளில் […]
மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கி இருப்பதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் நீதிமன்றத்திற்கும் ஆவின் பால் அலுவலகத்திற்கும் இடைப்பட்ட 4-வது தெருவில் பள்ளமாக இருக்கின்றது. இந்தத் தெருவின் இருபக்கத்திலும் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையோரம் தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமமல், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில், பயாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தனகிரி போன்ற பல்வேறு […]
வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 17,280 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் என பல்வேறு இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து 2 கட்டங்களாக 16 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மாவட்டத்திற்கு வந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு மேலும் 1,280 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. அதன்பின் அரசு மருத்துவமனை, ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் […]
குடியிருப்பு அருகில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அந்த மதுபான கடையை காலி செய்யும்படி இடத்தின் உரிமையாளர் கேட்டதால் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து காட்பாடி-குடியாத்தம் ரோட்டில் பாண்டியன் நகர் போகும் வழியில் குடியிருப்புகள் பகுதியின் பக்கத்தில் மதுபான கடையை திறப்பதற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். […]
ஓட்டல் உரிமையாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சாலையில் அந்தப் பகுதியில் வசித்து வரும் பாபுபாயும் அவரது மகன் அயாஸ் ஆகிய இருவரும் சேர்ந்து ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அணைக்கட்டு தாலுகா தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் பள்ளிகொண்டா பஜார் வீதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாபுபாய் கடையில் உள்ள ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் பணி செய்து […]
சட்டவிரோதமாக ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வெளிமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா, மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுப்பதற்காக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடிக்கு வந்தது. அந்த ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி தலைமையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் உள்ள இருக்கைக்கு அடியில் தனியாக கிடந்த […]
6 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டி.ஐ.ஜி. உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 6 போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனவே அங்கு பணியாற்றிய சந்திரகுமார் பொன்னைக்கும், அங்கு பணியாற்றிய காண்டீபன் ஆற்காடு தாலுகாவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பாலு செய்யாறுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஹேமமாலினி திருவண்ணாமலை தாலுகாவுக்கும், […]
ரேஷனில் கைரேகை பதிவு மீண்டும் தொடங்கப்பட்டு மக்கள் பொருட்களை பெற்று சென்றனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த சில மாதங்களாக ரேஷனில் கைரேகை பதிவு நடைபெறாமல் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பல வகையான பொருட்கள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 698 ரேஷன் கடையிலும் […]
மெல்மொணவூர் இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மெல்மொணரில் இலங்கை அகதிகள் முகாமில் 311 குடும்பத்தைச் சேர்ந்த 992 நபர்கள் வசித்து வருகின்றனர். அங்கு நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்து மக்களிடம் அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் […]
வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 4,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 11 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே 3 ஆயிரம் தடுப்பூசி மருந்து […]
மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி கடை உரிமையாளருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டித்தெரு, லாங்கு பஜாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து கமிஷனர் உத்தரவின்படி, 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்தப் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை […]
சாராயம் விற்பனை செய்த 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு கலெக்டர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தில் முத்தமிழன் என்பவர் வசித்து வருகின்றார். இவரை சாராயம் விற்ற வழக்கில் காவல்துறையினர் கைது செய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதேபோன்று குடியாத்தம் தாலுகா செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரையும் சாராயம் விற்ற வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு முத்தமிழ், சரண்ராஜ் ஆகியோர் தொடர்ச்சியாக சாராயம் […]
வெயிலின் பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கோடைத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வெயிலின் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இதற்காகவே வேலூர் மாவட்டத்தை வெயிலூர் என்று அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தொடங்கிய வெயில் பாதிப்பு மதியம் அதிகரித்து 103 டிகிரியை தாண்டி 103.3 டிகிரி பதிவானது. […]
காவல்துறையினர் தேடுவதால் திருடிச் சென்ற அம்மன் சிரசை மர்ம ஆசாமிகள் கோவிலில் வைத்து சென்றுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பி குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் தரப்பில் வருகின்ற 16-ஆம் தேதி திருவிழா நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து திருவிழா நடத்த அனுமதி […]
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்த முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள மோட்டூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வெளி மாநிலத்திற்கு கடத்துவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன், உணவுப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். […]
அணைக்கட்டு அருகில் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகங்கநல்லூர் கிராமத்தில் ராணி என்பவர் வருகின்றார். இவருடைய மகன் மகி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவரது மனைவி அருணாதேவி தாய் ராணி அம்மாள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அருணா தேவியை கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 16ஆம் தேதி ராணி அம்மாள் மற்றும் […]
மர்மபொருள் வெடித்து பசுமாட்டின் வாய் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னசேக்கனூர் பகுதியில் தாதா என்ற விவசாயி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாதா தனக்கு சொந்தமான பசுமாட்டை எப்போதும்போல் கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது மாடு அங்கு கிடந்த மர்மபொருள் மீது வாய் வைத்ததால் அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் மாட்டின் தாடைப் பகுதி முழுவதும் கிழிந்து பலத்த காயம் அடைந்து பரிதாபமாக […]
பிரசவத்திற்காக சென்ற பெண்ணிற்கு ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்து பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேலூர் மாவட்டத்திலுள்ள குருமலை மலை கிராமத்தில் ராமு என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பவுனுக்கு 2 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் 3-வது முறையாக பிரசவ வலி ஏற்பட்டது. இந்த மலை கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாததாலும் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கி வந்தனர். இதனையடுத்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள […]
வழிமறித்து சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்திலுள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வடிவேலன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சத்துவாச்சாரி பொன்னியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு ரங்காபுரம் புலவர் நகரைச் சேர்ந்த யோகேஷ் என்பவர் வடிவேலனை வழிமறித்து நான் பல கொலை செய்துள்ளேன் என்றும் உன்னிடம் உள்ள பணத்தை தரவேண்டும் என்று மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் […]
வேலூரில் 4 1/2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இருக்கும் சி.சி.டி.வி. கேமராக்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, விபத்துக்கள் போன்றவை அதிகமாக நடைபெற்று வருவதால் பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வடக்கு போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு […]
அலோபதி முறையில் சிகிச்சை அளித்த கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஊசூரில் ஆயுர்வேதம் யுனானி மருத்துவம் பயின்று விட்டு அலோபதி முறையில் சிகிச்சை அளிப்பதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மினுக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி அணைக்கட்டு மருத்துவ அலுவலர், மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் போன்றோர் அந்தப் பகுதியில் உள்ள கிளினிக்குகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு […]
அம்மன் சிரசை மர்மநபர்கள் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு ஆண்டுதோறும் அம்மன் சிரசு ஊர்வலத்துடன் திருவிழா நடைபெற்றுவருவது வழக்கம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து வருகின்ற ஜூலை மாதம் 16-ஆம் தேதி இந்த திருவிழாவை நடத்துவதற்கான முடிவெடுத்து ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் இடையில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு சொந்தமானது […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை நல்லான்பிள்ளை 2-வது தெருவில் அய்யப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் மது அருந்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அய்யப்பனை கைப்பற்றி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அய்யப்பன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நம்பிராஜபுரம் இந்திரா நகரில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் காட்டுப்புத்தூர் அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அஜித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் […]
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியபோது இந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது. இதனால் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி கிராமப் பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார். மேலும் தினமும் 2 கிராமங்களில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று […]
மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விலை கிராமம் பிள்ளையார் தெருவில் நீலகண்டன் என்பவரின் மகன் சந்துரு வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரின் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சந்துரு பாகாயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சந்துரு சென்று […]
காட்பாடி செல்லும் இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை கிரீன் சர்க்கிள் வழியாக செல்வதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர். வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்க்கிளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பாகாயம், தொரப்பாடி, தோட்டப்பாளையம் போன்ற பகுதிகளிலிருந்து காட்பாடி […]