புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் குடியரசு தினத்தன்று ட்ராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள பெண்களுக்கு ட்ராக்டர் ஓட்ட பயிற்சி அளித்து வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியின் Singhu, Tikri, Ghazipur உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில், தொடர்ந்து 41-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி […]
Tag: வேளாண் சட்டமசோதா
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை […]
விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விவசாயிகள் போராட்டம் விரைவில் வாபஸ் ஆகும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் […]
“மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடும் விவசாய போராளிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போராட்டம் இன்று […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 17 வது நாளாக போராடிவரும் விவசாயிகள் டெல்லியில் இருக்கும் முக்கிய சுங்க சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள கெரிக்கிதுவாலா சுங்கச்சாவடி வழியாக பஞ்சாப் ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இந்த சுங்க சாவடி மூன்று மாநிலங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே தான் இந்த சுங்க சாவடியை விவசாயிகள் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். அவர்களது எண்ணம் நிறைவேறிவிட்டால் மூன்று மாநிலங்கள் மட்டுமல்லாமல் வடமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்படும். […]
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் மு க ஸ்டாலின் காஞ்சிபுரம் கீழ் அம்பி பகுதியில் கலந்து கொண்டார். முன்னதாக நேரடியாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக தலைவர் அங்கு வயல்களில் இறங்கி வேலை செய்யும் மக்களோடு வயலில் இறங்கி…. விவசாயிகளிடம் இந்த சட்டமசோதா குறித்து […]
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் குடியரசுத் தலைவருக்கு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கூடாது. ஏனென்றால் அது முறையான விதிமுறைகளை பின்பற்றி, மரபுகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக மாநிலங்களவையில் விதிமுறைகளுக்கு மாறாக துணைத்தலைவர் நடந்துகொண்டார். எனவே இதற்கு ஒப்புதல் வழங்க கூடாது, திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்கள். அதனால் அந்த கோரிக்கை என்பது நிராகரிக்கப்பட்டு […]