Categories
தேசிய செய்திகள்

2வருஷம் வெயிட் பண்ணி பாருங்க…! உங்கட எல்லாரும் தப்பா சொல்லுறாங்க… ராஜ்நாத் சிங் வேண்டுகோள் …!!

விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளைத் தவறாக வழிநடத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 33 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். இந்நிலையில் இமாச்சல்பிரதேச அரசின் மூன்றாண்டு நிறைவு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களின் பலன்களை உணர குறைந்தது 2 வருடங்களாவது காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். வேளாண் பொருள்களின் குறைந்தபட்ச ஆதாரவிலையை பாதுகாப்பதில் நரேந்திரமோடி உறுதியாக உள்ளதாகவும், வேளாண் சட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை ? – விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை ..!!

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது குறித்து, விவசாய அமைப்புகள் இன்று ஆலோசனை நடத்துகின்றன. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட, விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த தீர்வும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை, போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள்… முதுகெலும்புள்ள முதல்வர் வருவார்… திருச்சி சிவா எம்.பி பேச்சு ..!!

“லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது” எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் போராட்டம்…. புதுவையில் புறக்கணிப்பு…. டபுள் கேம் ஆடும் திமுக …!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திமுக புதுச்சேரியில் போராட்டத்தை புறக்கணித்திருக்கின்றது. இது போன்ற திமுகவின் இரட்டை வேடத்தை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தை வைத்து திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள் என்பது கஷ்டங்கள் தான் – பாரிவேந்தர் எம்.பி விமர்சனம் ..!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் என்பது கஷ்டங்கள் தான் என பாரிவேந்தர் எம்பி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைமையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக கட்சி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

3000பேர் கூடுவார்கள்….! ”திமுகவுக்கு அனுமதியில்லை”…. செக் வைத்த அதிமுக அரசு ….!!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு இருக்கின்றது. அதனால் வரும் 19ஆம் தேதிக்கு பிறகுதான் பொதுவெளியில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என்று தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த காரணத்தை சுட்டிக் காட்டி நாளை வள்ளுவர் கோட்டத்தில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

வேதனையா இருக்குது…. தப்பு தப்பா சொல்லுறாங்க…. ஜியோவை புலம்பவிட்ட ஏர்டெல், வோடபோன் ..!!

விவசாயிகளின் போராட்டத்தைப் பயன்படுத்தி, தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கெடுக்கும் வேலைகள் நடப்பதாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனம் முதன்முறையாக அலறியிருக்கிறது. இந்திய மொத்த வர்த்தகம் மட்டுமன்றி சில்லரை வர்த்தகச் சந்தையையும் கைப்பற்றுவதற்கான முயற்சியில், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, வேளாண் சந்தையை தங்கள் கைகளுக்குள் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டியுள்ள அவர்கள், அதற்கேற்ப வேளாண் சட்டங்களை மோடி அரசைப் பயன்படுத்தி திருத்த வைத்துள்ளன. இதனை உணர்ந்த காரணத்தாலேயே, சட்டங்களைக் கொண்டு வந்தவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, […]

Categories
தேசிய செய்திகள்

இந்துக்களை மோதவிட பாஜக சதித் திட்டம் – அகாலிதளம் பரபரப்பு குற்றச்சாட்டு

பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் – இந்துக்கள் இடையே மோதலை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டத்தில் பாஜக இறங்கியிருப்பதாக, அக்கட்சியுடன் 2 மாதங்களுக்கு முன்புவரை கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங்பாதல் குற்றம் சாட்டியுள்ளார். பதிண்டா நகரில் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.“மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஆதரிப்பவர்கள் தேசப்பற்றாளர்கள் என்று போற்றப்படுகின்றனர். அரசை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்ஷிம்ரத்கவுர் பாதல், […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்… டாக்ஸி டிரைவர்கள்… அதிரடி அறிவிப்பு…!!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதிலும் டாக்ஸி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள்…!!!

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடைமுறைக்கு ஒத்து வராத புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

கொந்தளிக்கும் விவசாயிகள் போராட்டம்… இன்று பேச்சுவார்த்தை…!!!

டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கும் விவசாயிகள் சங்கத்துடன் இன்று மத்திய வேளாண் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தடுக்க போலீசார் வன்முறையில் இறங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் விவசாயிகளை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க….. நல்லது தானே பண்றோம்…. ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்த மோடி….!!

விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தி நன்மை அடையலாம் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி 71வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசும்போது, “பாராளுமன்றம் தீவிர ஆலோசனைக்குப் பிறகு வேளாண் சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதிய வேளாண் சட்டம்” திரும்ப பெற வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினர் சத்யாகிரகம்…!!

புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது.  மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல வகையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி அருகே மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியாக்கிரகம் செய்துள்ளனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி, அம்பானி, அதானி உருவ பொம்மைகளை கொளுத்தி தசரா கொண்டாட்டம்…!!

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம்  அதானி ஆகியோரின் உருவ பொம்மைகளை கொளுத்தி விவசாயிகள் தசரா பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பதின்ராவில்  உள்ள  பெரிய விளையாட்டு மைதானத்தில் பாரதிய கிசான் யூனியன் தலைமையில் திரண்ட விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். விலை நிலங்களை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர். உருவ […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பங்கேற்காததால் பஞ்சாப் விவசாயிகள் எதிர்ப்பு…!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினர். டெல்லியில் கிருஷிபவன் இல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 29 விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை செயலாளர் பங்கேற்றார். ஆனால் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்காததால் விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண்துறை அமைச்சர் பங்கேற்கவில்லை – விவசாயிகள் எதிர்ப்பு…!!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய வேளாண் துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை  கண்டித்து கடந்த 20 நாட்களாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 29 விவசாய சங்கங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் மனித குலத்திற்கே எதிரானது – இயக்குனர் கௌதமன்…!!

வேளாண் சட்டம் மனித குலத்திற்கு எதிரானது என  இயக்குனர் கௌதமன் கூறியிருக்கிறார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கின்ற வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு மட்டும் எதிரான சட்டம்,  மனிதகுலத்திற்கு எதிரான சட்டமென தமிழ் பேரரசு கட்சித் தலைவர், இயக்குனர் திரு கௌதமன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம்…!!

வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள்… சட்டசபை கூட்ட வேண்டும்… மு.க. ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்…!!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபை கூட்ட வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். திமுகவை போலவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2-வது நாளாக ராகுல்காந்தி டிராக்டர் பேரணி…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி பஞ்சாப்பில் இரண்டாவது நாளாக டிராக்டரில் பேரணியில் பங்கேற்றுள்ளார். பன்லாலா சவுத் பகுதியில் இருந்து பட்டியாலா வரையிலான 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி மேற்கொண்ட அவர் அங்கு பொதுமக்களிடையே உரையாற்றினார். மத்திய அரசின் புதிய […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டரில் புறப்பட்ட ராகுல்….அனுமதிக்க மாட்டோம் என மாநில அரசு அறிவிப்பு…!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணியை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாய் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறார். பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை முதல் 6ம் தேதி வரை திரு ராகுல் காந்தி தலைமையில் பஞ்சாப் முதல் ஹரியானா வரை டிராக்டர் பேரணி நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில்  விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று 9வது நாளாக பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள் வரை இந்த போராட்டம் தொடரும் என பஞ்சாப் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

 புதிய வேளாண் சட்டம்… பஞ்சாபில் தொடரும் 7வது நாள் போராட்டம்… விவசாயிகள் ஆவேசம்…!!!

புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக பஞ்சாபி விவசாயிகள் தொடர்ந்து 7வது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் ‘ரயில் ராகோ’ என்ற பெயரில் ரயில் நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்று ஏழாவது நாளாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்துள்ளது. பஞ்சாபி பாடகர்கள் பத்தின்டா என்கின்ற இடத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் …..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்த சட்டங்களை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் இயங்கிவரும் நிலையில் ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநிலத்தில் CIT-யும் AITOC மற்றும் 21 விவசாய சங்கங்கள் இணைந்து முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ளதால் தடையை மீறுவோர் […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு – டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு அதற்குத் தீ வைப்பு…!!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருப்பது விவசாயிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories

Tech |