Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் மிரட்டல்களுக்கு விவசாயிகள் பயப்பட மாட்டார்கள்…!!!

நாட்டில் எங்கு போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேஸ் பாகல் குற்றம் சாட்டியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து பாஜக தலைவர்கள்  தொடர்ந்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருவதற்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் குபேல் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் மத்திய பாஜக அரசு அதனை முடக்க பார்ப்பதாகவும், டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் குலைக்க விவசாயிகளை பாகிஸ்தானிகள் என்றும் இடைத்தரகர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இது நல்லதுக்கில்ல…! மத்திய அரசை பகைக்காதீங்க… கேரள அரசுக்கு அமைச்சர் எச்சரிக்கை ..!!

கேரளாவிற்கு தொடர்பில்லாத விவகாரங்களில் மாநில அரசு தலையிட வேண்டாம் என மத்திய அமைச்சர் திரு.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க, கேரள சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு அனுமதி வழங்கும்படி, முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை இரண்டாவது முறையாக ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு. வி.முரளிதரன், கேரளாவின் கொரோனா இறப்பு விகிதம் நாட்டின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதோட விட போறது இல்ல…! திரும்பவும் போராடுவோம்….! முக.ஸ்டாலின் உறுதி …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் முக.ஸ்டாலின் பேசியது வருமாறு: மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமான அடிப்படையில் கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி டெல்லி தலைநகரில் மட்டுமல்லாது வடமாநிலங்களில் விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை இன்றோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரோட பிள்ளை நான்…! ”பேசாதீர்கள் மிஸ்டர் எடப்பாடி” வைகோ சொல்லி இருக்காரு …!!

நேற்று திமுக கூட்டணி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் நடத்தியது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர் எப்போ பார்த்தாலும் நான் விவசாயி நான் விவசாயி அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன விவசாயம் பற்றி தெரியும். எனக்கு தெரியாது டி ஆர் பாலு அவர்கள் பேசினார்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று அதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு […]

Categories

Tech |