Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் தீ, அதில் ஈ மொய்க்காது… இந்திய அரசின் அதிகாரமே தமிழ் தான்.. BJP அரசுக்கு வகுப்பெடுத்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்….  காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள்.  தமிழ் தீ,  அதில் ஈ மொய்க்காது. தமிழ் ஒரு கருங்கல் சிற்பம், அதை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உலக நாகரிகத்தை ஒழுங்குபடுத்துங்கள்”…. எலான் மஸ்க்கிற்க்கு கோரிக்கை விடுத்த வைரமுத்து….!!!!!

எலான் மஸ்க்கிற்க்கு கவிதை வாயிலாக வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினி நடிப்பில் 1980-ல் வெளியான காளி திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் அறிமுகமான வைரமுத்து இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கின்றார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு கவிதை வாயிலாக கோரிக்கை ஒன்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிந்தி படித்தால் வாய் பேச முடியாது… ஊமையர்களாக மாறிடுவோம்… வெளுத்து வாங்கிய கவி பேரரசு வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. தமிழை ஒரு கண்ணாகவும்,  ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் நான் எப்படி புரிந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா ? தாய் மொழியாகிய எங்கள் தமிழை,  வாழ்வுக்கானது என்று நினைக்கிறோம். ஆங்கிலத்தை எப்படி நினைக்கிறோம் தெரியுமா ? வசதிக்கானது என்று நினைக்கிறேன். வாழ்வுக்கான மொழி தாய்மொழி, வசதிக்கான மொழி ஆங்கில மொழி. நாங்கள் வாழ்வோடும் இருப்போம், வசதியோடும் இருப்போம். தமிழையும் – ஆங்கிலத்தையும் படித்தால்,  இந்தியை படித்தால் ஊமையர்களாக, வாய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிணத்தை அனுப்ப கூட ஹிந்தி தெரியணும்…! பாஜக அரசுக்கு எதிராக…. கொளுத்தி போட்ட வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. நான் ஒன்று கேட்கிறேன் நண்பர்களே… மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி.  மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி.  கல்வி மொழியாக இந்தி. அலுவல் மொழியாக இந்தி என்ற சாதாரணமான போக்கில் நீங்கள் புரிந்து கொண்டு போய்விட முடியாது. ஐ எஃப் எஸ் என்று சொல்லக்கூடிய இந்தியன் அயல்ரக தேர்வு முழுக்க இந்தியில் இருக்க வேண்டும், அவை இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

85ஆவது வருஷம் போராடுறோம்…! மத்திய அரசு சட்டத்தால் அழிக்க முடியாது… வைரமுத்து மாஸ் ஸ்பீச் …!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிது இல்லை, இந்தி திணிக்கப்படுவதும், தமிழன் அதை எதிர்த்து கொண்டிருப்பதும் இது 85 ஆவது ஆண்டு. 85 ஆண்டுகளாக ஒரு மொழியை ஒரு அரசு திணிக்க பார்க்கிறது,  அந்த திணிப்பை தமிழர்களும், தமிழ்நாட்டு அரசும் எதிர்க்க பார்க்கிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது. தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சரியான டைம் வந்துட்டு…! தமிழர்களே வீரியமாக தயாராகுங்க…. ஹிந்திக்கு எதிராக வைரமுத்து அறைகூவல் ..!!

ஹிந்தி மொழிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பேசிய கவிஞ்சர் வைரமுத்து, மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று, சில பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களே…  அது வெறும் பரிந்துரை தான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. மசோதாவை நோக்கி நகர்த்தப்படுகின்ற பரிந்துரைகள் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். இதற்கு முன்னால்… இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது,  இந்து திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்தி திணிப்பு எல்லாம் கொசு கடித்ததை போல, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலத்தை இழந்தோம்… மொழியை இழந்தோம்… ஆட்சியை இழந்தோம்… இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை… இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆவேசம்…!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும்.  இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள். வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும்.  வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர்.  எங்களுக்கு திருமறைக்காடு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை அழிக்க பார்த்தாங்க..! இந்தியை கொசுவை போல நசுக்கணும்… கர்ஜித்த வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  தமிழை வாளின் முலையில் அழிக்க  பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே…  தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது,  சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]

Categories
மாநில செய்திகள்

இந்தி மொகலாய மொழியின் கலப்பு…! திராவிடமும் தமிழும் ஒன்னு…! பளிச்ன்னு சொன்ன வைரமுத்து ..!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  இந்தி என்ன மொழி தெரியுமா ? முகலாய மொழியில், சமஸ்கிருதம் கலந்து பிறந்ததுதான் ஹிந்தி மொழி. அதற்கு வரலாறு குறைவு, இலக்கியம் குறைவு, நேற்று பிறந்த மொழி இந்தி. 5000 ஆண்டுகளாக எழுத்து வடிவம் கொண்ட தமிழை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும் ?  இந்தியை படித்தால் ஊமையர்களாக,  வாய் பேச முடியாதவர்களாக,  நிராதரமானவர்களாக, அடிமைகளாக, மூன்றாம் தர குடிமக்களாக இருப்பதற்கு இது வழி செய்கிறது, இதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழுக்கு திராவிடம் என்று பெயர்.. முருகனுக்கு பெயர் மாற்றியது ஏன்..! சர்சையை கிளப்பும் வைரமுத்து …!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, சிவபெருமான் படைத்த மொழியாம் இரண்டும். சிவபெருமான் உடுக்கை எடுத்தாராம். ஒரு பக்கம் தட்டினார் தமிழ் பிறந்தது, மறுபக்கம் தட்டினார் சமஸ்கிருதம் பிறந்தது என்று ஆன்மீகவாதிகள் தமிழுக்கு,  ஒரு அழகான புனைவு வைத்திருக்கிறார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். கடவுள் படைக்கும் போதே தமிழை முதலில், சமஸ்கிருதத்தை அடுத்து படைத்துவிட்டார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். இரண்டும் ஒரே உடுக்கையின் ஒலியில் பிறந்த மொழிகள் என்றால் ? சமஸ்கிருதத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்…?” மணிரத்னம் ஓபன் டாக்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து இயக்குனர் மணிரத்தினம் விளக்கம் அளித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

“திடீரென வைரமுத்துக்கு போன் அடித்த அன்பில் மகேஷ்”…. ஆசிரியருக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….. வைரல்….!!!!

தமிழ் ஆசிரியரிடம் கவிஞர் வைரமுத்துவுக்கு போன் போட்டு கொடுத்து பேச வைத்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது கவிஞர் வைரமுத்து எழுதியிருந்த ஓ என் சமகால தோழர்களே என்ற கவிதை தொகுப்பை இரண்டு கண்கள் தெரியாத தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்து வந்தார். இதனை மாணவர்களோடு வகுப்பறையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் […]

Categories
சினிமா

என்னை கட்டிப்பிடித்து அப்படி பண்ணாங்க… தமிழ் சினிமா பிரபலம் புதிய பரபரப்பு…..!!!!

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து பாடகி சின்மயி முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அவர் என்னை கட்டிப்பிடித்த போது ஏதோ தவறாக இருக்கிறது என்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு பாலியல் தொல்லை செய்தார் என்று கூறியுள்ளார். மேலும் பலவற்றை அவர் பகிர்ந்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறிய அவர், தன்னை யாரேனும் கொலை செய்தால் அவற்றை வெளியிடுமாறு நண்பர்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய கொடி ஏற்றினால் மட்டும் தேசப்பற்று வளர்ந்துவிடுமா.. வைரமுத்து பேச்சால் சர்ச்சை..!

செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டம். தேசிய அக்கரைக்கு வழி வகுக்கக்கூடிய நல்ல திட்டம் தான். ஆனால் தேசிய கொடியை சுதந்திர தின நாளில் மட்டும் ஏற்றுவது தான் சிறந்தது என்று நாடு கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15 அன்றும், குடியரசு திருநாளான ஜனவரி 26 அன்று மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்துவிட்டால், தேசத்தின் சிறந்த குடிமகனாக ஆகிவிட மாட்டோம். 365 நாளும் நான் தேசத்தின் உடைய குடிமகன் என்ற அக்கறையை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாரதிராஜா படத்திற்கு பாடல் எழுதும் போது கண்ணீர் சிந்தினேன்”…. வைரமுத்து உருக்கத்துடன் ட்விட்…!!!!

பாரதிராஜா நடிக்கும் படத்தின் பாடலை எழுதும் பொழுது கண்ணீர் சிந்தியதாக வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியராக வலம் வருகின்றார் வைரமுத்து. இவர் நாட்படு தேறல் பருவங்களின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். எது பற்றிக் கூறினாலும் தனது அழகு தமிழால் இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். இயக்குனர் தங்கர்பச்சன் இயக்குகின்ற கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தி படிப்போரை வெறுக்க மாட்டோம்…. ஆனால் திணிப்போரை ரசிக்க மாட்டோம்…. வைரமுத்து கருத்து…!!!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து இந்தி பற்றிப் பதிவிட்டிருப்பது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் திணிக்க முயற்சி செய்து வருவது குறித்து கடுமையான எதிர்ப்பு குரல் ஆங்காங்கே எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. மருத்துவமனை சார்பாக கொடுக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இந்தி மொழியில் கையாளத் தொடங்கியுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வைரமுத்துவின் “ரோஜாவே தமிழ் பேசு பாடல்”… குவிந்த பாராட்டுகள்… வைரமுத்து ட்விட்…!!!!

வைரமுத்துவின் ரோஜாவே தமிழ் பேசு பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டர் பதிவு போட்டுள்ளார். வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள நாட்படு தேறல் பாடல் தொகுப்பானது ஆல்பங்களாக மாறி வருகின்றது. இந்த பாடல் தொகுப்பிற்கான பணிகளை தற்போது வைரமுத்து செய்து வருகின்றார். இந்த இரண்டாம் பகுதியில் இருந்து “ரோஜாவே தமிழ் பேசு” என்ற பாடல் உருவாகி இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருந்தது. இதில் பிக்பாஸ் பிரபலம் அக்ஷரா ரெட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்தநாள்”…. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த வைரமுத்து….!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது ஊசிமணி, பாசி மணி மாலைகள் அணிவித்து நரிக்குறவர் இன மாணவிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவி இல்லத்தில் தேனீர் அருந்திய ஸ்டாலின், பின்னர் அவர்கள் கொடுத்து இட்லி, வடையுடன் சிற்றுண்டி உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த நரிக்குறவர் மாணவி ஒருவருக்கு ஸ்டாலின் இட்லியை ஊட்டி விட்டார். இந்நிலையில் நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் முதல்வர் ஸ்டாலின் உணவருந்தியதை வைரமுத்து […]

Categories
மாநில செய்திகள்

“புத்தகப் பூங்காவுக்கு கலைஞர் திருப்பெயர்”…. முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து கோரிக்கை……!!!!!

அனைத்துவிதமான நூல்களும் ஒரேயிடத்தில் கிடைக்கும் நோக்கில் மாபெரும் புத்தகப் பூங்காவானது அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து உ ள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வருக்கு மனமார்ந்த நன்றி. இந்த புத்தகப் பூங்காவுக்கு முத்தமிழறிஞர் கலைஞரின் திருப்பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை நான் முதல்வருக்கு முன்வைக்கிறேன். “புத்தக பூங்காவால் அறிவுலகம் மகிழும் கலைஞர் பெயர் சூட்டினால் தமிழ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ஆயிரக்கணக்கில் குவிந்த வாசகர்கள்…. திருவிழா போல களைகட்டிய புத்தக கண்காட்சி….!!!

புத்தக கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து பார்வையிட்டு வாங்கி சென்றனர். கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமான வாசகர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் மைதானமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்த புத்தக கண்காட்சியில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனுபவித்த சிரமங்கள்  மற்றும் அவர்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கீவ் நகரத்தில் விழுந்த குண்டு…. கீரைக்காரி கூடையை உடைக்கும்”…. போர் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு….!!!

கவிஞர் வைரமுத்து ரஷ்யா உக்ரைன் போர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நேற்று போர் தொடுத்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக குண்டுகள் வீசி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீட் தேர்வு குறித்த சர்ச்சை…. கண்டனம் தெரிவித்த வைரமுத்து…. வைரலாகும் பதிவு….!!!

நீட் தேர்வு குறித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக அரசு கவர்னருக்கு அனுப்பி வைத்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பி அனுப்பி வைத்தார் கவர்னர். இதற்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைவராலும் குரல் எழுப்பப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் சம்மதத்தோடு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்தக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா”…. வைரமுத்து ட்விட்டர் பதிவு….!!

”உத்தம கலைஞனே பாட்ஷா போல் நடந்து வா” என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்கும் பால்கே விருது கொடுக்கலாம்…. ஒன்றிய அரசின் கண்களுக்கு காட்டுவோம்…. வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு….!!

கமல், பாரதிராஜா போன்ற தகுதிமிக்க கலைஞர்களுக்கும் பால்கே விருது வழங்க வேண்டும் என வைரமுத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த திங்கட்கிழமை தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். ரஜினி திரையுலகில் நிகழ்த்திய வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!…. வைரமுத்து இரங்கல் கவிதை…..!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக […]

Categories
மாநில செய்திகள்

“திருத்துங்கள், இல்லையேல் திருத்துவோம்”… கவிஞர் வைரமுத்து ஆவேசம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரித்துள்ளது பற்றி கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. பெட்ரோல் இருந்தா வரேன்… வைரமுத்து கவிதை…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி பெட்ரோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

காதல் வந்தால் சொல்லி அனுப்பு….. பெட்ரோல் இருந்தால் வருகிறேன்…. வைரமுத்து ட்விட் …!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றது. 100 ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் மிகவும் திணறி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை  அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்துவரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக மத்திய அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனக்குரிய ஸ்டைலில் பாட்டு வடிவில் […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது…. வைரமுத்து டுவிட்…!!

பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதை குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தொழிற்சாலை நடத்துபவர்கள் பணத்தின் மீதுள்ள பேராசையின் காரணமாக குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஏற்பட்டுள்ள கவனக்குறைவால் தான் இந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு ட்வீட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைரமுத்துவை அர்ரெஸ்ட் பண்ணாம கல்யாணராமனை மட்டும் ஏன் அர்ரெஸ்ட் பண்ணீங்க…? ட்வீட் செய்த H .ராஜா…!!

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசிய கல்யாணராமனை  கைது செய்த காவல்துறையினர் ஆண்டாள் நாச்சியாரை விமர்சித்த வைரமுத்துவை ஏன் கைது செய்யவில்லை? என்று H.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட  பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் நபிகள் நாயகம் பற்றி இழிவாக பேசியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும்  அவருக்கு கண்டனம் தெரிவித்ததோடு  அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கலையாக் கலையே கமல்’- கவிஞர் வைரமுத்து வாழ்த்து…!

கவிஞர் வைரமுத்து உலக நாயகன் கமலஹாசனின் 61 ஆண்டு திரையுலக பயணத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1959ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் திரையுலகில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி உலக நாயகன் ஆனார். அரசியல் கட்சியில் தற்போது தலைவராக உள்ளார். இவரின் 61 ஆம் ஆண்டு சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

ஒன்றா..? இரண்டா…? என் தமிழை அதிகம் கூவிய ஆண் குயில்… கவிஞர் வைரமுத்து உருக்கம்….!!

எஸ்.பி.பி குறித்த உருக்கமான கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் திரையுலகினர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் […]

Categories
மாநில செய்திகள்

கோரிக்கை வைக்க உரிமை உண்டு…. நன்றி சொல்கிறேன்… முதல்வரை பாராட்டிய வைரமுத்து ..!!

முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருமொழி கல்வி கொள்கை செயல்படும் என அறிவித்ததற்கு வைரமுத்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சியினர்  கூறி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிறகு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை செயல்படுத்த முடியாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கையே தொடர்ச்சியாக இருக்கும் என […]

Categories
சினிமா

“தாதா சகோப் பால்கே” விருது இவருக்கு கொடுக்கலாம் … பரிந்துரைக்கும் வைரமுத்து …!!

பாரதிராஜா பிறந்தநாளுவாழ்த்து தெரிவித்த வைரமுத்துக்கு “தாதா சகோப் பால்கே” விருது அவருக்கு கொடுக்கலாம் என பரிந்துரைசெய்துள்ளார்.  இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் பாரதிராஜா,  தமிழ் சினிமாவில் மண்ணின் வாசனையை வீச செய்து புதுமை செய்தவர். கவிஞர் வைரமுத்து சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரான பாரதிராஜாவுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் பாரதிராஜாவை “தாதா சகோப் பால்கே” விருதிற்காக பரிந்துரை செய்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் மண்ணின் இருதயத்தை, கல்லின் கண்ணீரை, சரளைகளின் சரளி வரிசையை, அறிவாளின் […]

Categories
மாநில செய்திகள்

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் – வைரமுத்து ட்வீட்!

உழவர்களின் அடிமடியில் கை வைத்தால்… அரசு மின்மாற்றியில் கை வைத்ததாகிவிடும் என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மின் நுகர்வோர்களிடம் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். இதனால் மின்சாரக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் தனியாருக்குச் சென்று விடும். […]

Categories
தேசிய செய்திகள்

எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? – வைரமுத்து

மத்திய அரசை நோக்கி கவிஞர் வைரமுத்து அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடைபெற்று வலுப்பெற்று வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசுக்கு கேள்வி ஒன்று எழுப்பி பதிவிட்டுள்ளார். அது “எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்.”

Categories

Tech |