2022 -ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. கார், பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் என அனைத்து ரக வாகனங்களிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இருசக்கர வாகர தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் வருகிற 2023 -ஆம் ஆண்டு ஏராளமான புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகமாக உள்ளது. பர்க்மென் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். […]
Tag: ஸ்கூட்டர்
அசாமில் நல்ல படிக்ககூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர்கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்குவதற்கு அரசு முடிவுசெய்து இருக்கிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த 35,800 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இதற்குரிய முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்குரிய ஒப்பந்தபுள்ளி அறிவிப்பானது ரத்து செய்யப்படுவதாக மாற்றுத்திறனாளிகளின் நல ஆணையாளர் ஜெசிந்தா லாசரஸ் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் ஜூன் 20ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்த புள்ளிகளானது நிர்வாக காரணங்களால் இப்போது ரத்து செய்யப்படுகிறது என்று […]
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை பிரச்சனை காரணமாக நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். எலக்ட்ரிக் வாகனங்களை அரசு தரப்பிலிருந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதே போல இந்த நிறுவனங்களும் அதிகமான […]
இலங்கை நாட்டில் சாதாரண ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிளின் விலையானது தற்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னணி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளின் விலை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அங்கு புது வாகனங்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இப்போது ரூபாய் 8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று முன்னணி கார்களின் விலையும் 60 -90 லட்சம் வரை விலை […]
ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில்உள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்க்கு காரணம் உலக நாடுகளில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததாக கூட இருக்கலாம். இந்நிலையில் இந்திய நாட்டில்மட்டும் 4இடங்களில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவங்களை தொடர்ந்து பரிசோதனை பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெற இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. […]
ஐதராபாத் நகரை சேர்ந்த பியூர் EV நிறுவனம் தனது இ-டிரான்ஸ் பிளஸ் மற்றும் இ-புளூடோ 7ஜி ஸ்கூட்டர் மாடல்களில் 2 ஆயிரம் யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநிலத்தில் பியூர் EV நிறுவன ஸ்கூட்டர் மாடல் வெடித்து சிதறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன் பியூர் EV ஸ்கூட்டர் மாடலை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து சிதறியதை அடுத்து 80 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை […]
பஞ்சாப் மாநிலத்தில், சமீபத்தில் ஒருவர் 21 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்கினார். ஆனால் அந்த ஸ்கூட்டருக்கு பதிவு எண்ணை வாங்குவதற்கு அவர் 15 லட்சம் ரூபாய் செலவு அளித்துள்ளார். இந்த விலைக்கு அவர் ஒரு புதிய காரை வாங்கியிருக்கலாம். 42 வயதான பிரிட்ஜ் மோகன் என்பவர் செக்டர் 23இல் வசித்துவருகிறார். இவர் இந்த செய்தி மூலமாக பிரபலம் அடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த நபர் “இந்த நம்பரை நான் என் […]
ஆறுமுகநேரிபேரூராட்சி தலைவர் கவுன்சிலர்களுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சியில் 17வது வார்டு கவுன்சிலர்களுக்கு ஸ்கூட்டர் மற்றும் அதற்கு மாதம் 10 லிட்டர் பெட்ரோல் அந்த பேரூராட்சி தலைவர் காலாவதி கல்யாணசுந்தரம் இலவசமாக வழங்கி இருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் இருக்கிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் தினமும் தங்கள் வாதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து கொடுப்பதற்கு வசதியாக ஆறுமுகனேரி […]
சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டோமொபைல் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலை மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் களுக்கு கூடுதல் […]
ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளனர். ஜப்பானில் காற்றடித்து ஓட்டிச் செல்லக்கூடிய புதிய வகை குட்டி ஸ்கூட்டர்களை உருவாக்கி இருக்கின்றனர். பொய்மொ என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டரை டோக்கியோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஹிரோகி சட்டோ என்பவர் தயாரித்துள்ளார். சூட்கேஸ் சைசில் இருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, எளிதாக எங்கு வேண்டுமானாலும் கைகளிலே தூக்கிச் செல்லலாம். மேலும் தேவைப்படும் இடத்தில் பலூனுக்கு காற்றுடைடிப்பது போல் அடைத்து பயன்படுத்தலாம். தற்போதைக்கு மணிக்கு […]
பண்டிகை காலத்தை முன்னிட்டு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன்படி யாமஹா பாசினோ 125 எப் ஐ, ரே இசட் ஆர் ஸ்டிரீட் ரே 125 f5 ஆகிய மாடல்களுக்கு 3000 முதல் 4000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் தற்போது ஆர்15 வி4 ஏபிஎஸ், எம்டி 15 ஏபிஎஸ் ப்ளூ கேர் தொழில்நுட்பம்,எப்.இசட். 25 249சிசி (ஏ.பி.எஸ்.), […]
ஸ்கூட்டரில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது டேங்கர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரகூர் கிராமத்தில் சரவணன்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா என்ற மகள் இருக்கின்றார். இதில் பூங்கோதை மார்டுக்கும் மற்றும் ஷர்மிளா இருவரும் இந்த கிராமத்திலிருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரிமங்கலம் அகரம் பைபாஸ் சாலை அருகில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி […]
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏ.செக்காரப்பட்டி சூராங்கோட்டை பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் மாங்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் முத்துராஜ் தனது பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டூர் பேருந்து நிலையம் அருகில் முத்துராஜ் சென்றபோது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த […]
ஸ்கூட்டரில் பதுங்கி இருந்த பாம்பினைப் ஒருவர் லாவகமாக பிடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் கனமழையின் காரணமாக பாம்பு ஒன்று ஸ்கூட்டருக்குள் சென்று பதுங்கி விட்டது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபர் அதனை பத்திரமாக மீட்டுள்ளார். முதலில் ஸ்கூட்டரின் முன் பக்கம் இருக்கும் கண்ணாடி பாகத்தை அவர் அகற்றிய உடன் சீரிய பாடி பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த மக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். Such guests during […]
அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புளியடிவிளையில் சுரேஷ் என்பவர் கொத்தனாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இதில் சுரேஷ் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி என்பவர் சுரேசுடன் […]
கார்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியதால் கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு கூட்டமாவுவிளை பகுதியில் கனிஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிஷ் தனது ஸ்கூட்டரில் குழித்துறை சென்றுவிட்டு மதியம் 1 1/2 மணியளவில் முளகுமூடு நோக்கி புறப்பட்டார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு காரும் கனிஷ் ஓட்டி […]
ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் காவல் அதிகாரி பால்ராஜ் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்காதலை ரோட்டில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஸ்கூட்டர் மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் கடத்தி வந்த […]
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]
சியோமி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூபாய் 38000 என்ற மதிப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளவதில்லை. எனவே இதனுடைய விலை ஏற்றம் மக்களிடையே பெரிய அளவிலான பாதிப்புகளை தற்சமயம் ஏற்படுத்தவில்லை என்றாலும், ஊரடங்கிற்கு பின் இந்த விலை ஏற்றம் மக்களின் பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். கடந்த ஒரு […]