ஸ்ரீபெரும்புதூர் அருகே விடுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 3 பேர் மரணமடைந்தனர். தமிழக அரசு சார்பில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. அதற்காக பிரத்யேகமாக இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலாளிகள் இதுபோன்று கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் போது உயிரிழப்பு நடைபெற்று […]
Tag: ஸ்ரீபெரும்புதூர்
தி.மு.க கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் வசித்து வருபவர் வீரா (32). இவர் சமீப காலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இவர் தி.மு.கவில் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சூப்பர் […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணியிடம் 3 பவுன் நகைகளை பறித்து விட்டு 2 வடமாநில கொள்ளையர்கள் தப்பித்து செல்ல முயன்றனர்.. அப்போது பொதுமக்கள் விரட்டி பிடிக்கும் போது கை துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று பொது மக்களை மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் […]
ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு காவலர்கள் நகை வியாபாரியிடம் இருந்து 300 சவரன் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளுவரை சேர்ந்தவர் மகேந்திரன். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநகை கடைகளில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் மகேந்திரனின் மகன் 300சவரன் நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 300சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர். தமிழ்ச்செல்வன் […]
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 4வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே மாத்தூர் தனியார் குடியிருப்பில் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தினேஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு […]
கணவன் சந்தேகத்தின் பேரில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள பால்நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மாள். இவருக்கு திவ்யபாரதி என்ற ஒரு மகள் இருக்கிறார் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சேட்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் இதற்கிடையே திவ்யபாரதி அவரது […]
தனது திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர் படும் கஷ்டத்தை கண்டு இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பழைய நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத். 51 வயதுடைய இவர் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரேவதி என்ற மகள் உள்ளார்.. மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.. சிறிது சிறிதாக நகைகளை சேர்த்து வைத்தால்தான் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் […]
ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
திருமணமாகாத விரக்தியில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ள குணகரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகள் ரேணுகாதேவி.. 32 வயதுடைய இவருக்கு பெற்றோர் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி பார்த்தும் திருமணம் நிச்சயமாகவில்லை. தனக்கு திருமணம் ஆகவில்லையே என்று ரேணுகாதேவி கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து வீட்டின் கதவை […]
அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 – 19 ஆண்டுகள் அதிமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தவர் கே. என் ராமச்சந்திரன். இவர் நடத்த்தி வரும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்திற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் பெற்று கடன் கேட்டிருந்தார். 20 கோடி ரூபாய்க்கு போதுமான […]
ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் அதிமுக எம்பி ராமச்சந்திரன் குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக எம்பியாக 2014 முதல் 2019 வரை இருந்தவர் கே. என் இராமச்சந்திரன். இவர் கல்லூரி விரிவாக்கத்துக்கு சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு எம்.பி , எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. சிபிஐ தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்து […]