கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மாநிலத்தில் மக்களுக்காக அல்ல தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்கி வருகிறார் என கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, முதல்வரின் திட்டங்கள் தேவையற்ற கமிஷன்களை உருவாக்கி, தன் மகளுக்காகவோ (அல்லது) அவரது குடும்பத்திற்காகவோ (அல்லது) அவரது குடும்பத்தின் எதிர்கால சந்ததியினருக்காகவோ வளர்ச்சி எனும் வேஷத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறது. இவை கேரளாவின் FONஆக இருக்கக் கூடாது, கேரள பைபர் […]
Tag: ஸ்வப்னா சுரேஷ்
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி […]
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் கேரள உயர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசை சுங்க சட்டம் 108 படி கேரள உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்ட விரோத நாணய […]
கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் மீது அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை சுங்கத் துறை மற்றும் […]
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுவப்னா சுரேசை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு கொச்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தின் பெயருக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டன. இதை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்டோரை கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. […]
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேர் நாளை நேரில் ஆஜராக கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வழக்கில் தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்திப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய […]
கேரளாவில் தங்க கடத்தலில் ஈடுபட்தாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் NIA அதிகாரிகள் நேற்று பெங்களூருவில் கைது செய்தனர். அவரை இன்று மாலை கேரளா அழைத்துவந்த NIA அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷிடம் விசாரணை நடத்தினர். அவரோடு கைது செய்யப்பட்ட சந்தீபிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருவரையும் […]