ஸ்விட்ஸர்லாண்ட் நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டர் மூலம் நதியில் தண்ணீரை பம்ப் செய்து வருகின்றனர். அப்போது தவறுதலாக டார்டாகினி என்ற இடத்தில் உள்ள தண்ணீரில் சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்து விட்டது .அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நதிக்குள் ஆக்சிஜன் […]
Tag: ஸ்விட்ஸர்லாந்து
ஸ்விட்சர்லாந்தில் வரும் கோடைகாலத்திலிருந்து கொரோனாவிற்க்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கொரோனா தொற்றுக்காக கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்ட நிலையில் ஸ்விட்சர்லாந்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக கட்டுப்பாடுகளை விலக்க முடியும் என நம்புவதாகவும் அது தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்திதான் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்த முடியும் என்று கூறியுள்ளனர். பைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்களிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்ததாகவும் அவற்றிலிருந்து ஜூலை இறுதி […]
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் பிரான்சின் முன்னாள் பனிச்சறுக்கு உலகச் சாம்பிய வீரர் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது . பிரான்ஸின் முன்னாள் பனிச்சறுக்கு உலக சாம்பிய வீரரான 40 வயதான பொமகல்ஸ்கி யூரியின் மண்டலத்தில் நான்கு பேர் கொண்ட குழுவில் பனிச்சறுக்கு விளையாடும் போது பனியில் சிக்கிய உயிரிழந்ததாக ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த பனி சறுக்கில் பிரான்ஸ் வீரரான புருனோ புடெல்லியும் சிக்கி பலியாகியுள்ளார். மற்றோரு வீரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. […]
சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் அரசியல் சாசனத்தில் கடவுளைப்பற்றி குறிப்பிடுவதை நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ஸ்விட்ஸர்லாந்து அரசியல் சாசனத்தின் முகப்புரையில் கடவுளின் பெயரால் ஸ்விஸ் மக்கள் அவர்களின் கடமையை செய்வதில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்தக் கூற்று பொருத்தமானது அல்ல மேலும் அரசியல் சாசனம் என்பது மக்களின் நம்பிக்கையை தேர்ந்தெடுக்கக்கூடிய உரிமை என்பதால் இந்த கூற்று மாற்றமானது என்று தேசிய கவுன்சிலரான ஃபபியன் மோலினா கூறியுள்ளார். எனவே அவர் அரசியல் சாசனத்தில் கடவுளைப் பற்றி குறிப்பிடுவதை நீக்க வேண்டும் […]
சுவிட்சர்லாந்தில் இருவரை பள்ளத்தில் தள்ளிவிட்ட வழக்கு ஒன்று போலீசாரால் விசாரிக்கப்பட்டு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் மண்டலத்தில் கண்டெர்தல் பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் இரண்டு நபரை 63 வயது தக்க நபர் தள்ளிவிட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. கடந்த 2019 நவம்பர் 5 ஆம் தேதி இளைஞன் ஒருவனை நபர் ஒருவர் அழைத்து சென்று பள்ளத்தாக்கில் தள்ளி விட்டுள்ளார்.பிறகு அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பியதாக அதிகாலை வந்த வாகன ஓட்டுநரிடம் இளைஞன் […]
சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பேராபத்து ஏற்பட போவதாக அரசு ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் குளிர்காலத்தில் ஆறுகளில் 30% தண்ணீர் அதிகரித்து வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடைகாலத்தில் 40% தண்ணீர் குறைவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரிக்கை செய்துள்ளது. அரசின் புதுப்பிக்கப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு சட்டத்தின்படி பருவநிலை மாற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறையை எடுக்காவிட்டால் பெரிய ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. […]
சுவிட்சர்லாந்தின் பாஸஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் போதை மருந்துடன் ஜெர்மன் போலீஸில் சிக்கியதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் சுவிட்சர்லாந்தின் பாஸஸ் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் 2.63 கிலோ போதை மருந்துடன் ஜெர்மனி போலீசாரிடம் சிக்கியுள்ளார்.வாகன சோதனையில் தப்ப முயலும் போது இளைனரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் போதை மருந்தை விளையாட்டு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தும் பையில் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது .இது […]
சுவிட்சர்லாந்து அரசியல்வாதி மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர் உட்பட பலரும் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண அரசியல்வாதியான நத்தாலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். தற்போது அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது இது முதல் முறை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் மட்டும் கொரோனா பலருக்கும் மீண்டும் பாதிக்கப்பட்டதாக […]
ஸ்விட்ஸர்லாந்தில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பிரீ டெமோகிராடிக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி நாதலியே போன்டநெட் பாதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின் நிதி அமைச்சரான 56 வயதான நாதலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று முதல் காய்ச்சல் அடித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு […]
சுவிட்சர்லாந்தில் குடும்ப பிரச்சினையால் மனைவியை கொடுமைப்படுத்திய 46 வயதான நபரை போலீசார் கைது செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஆர்காவ் மண்டலத்தில் குடும்ப வன்முறையால் மனைவியை துன்புறுத்தி அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இந்த கொடூர சம்பவம் ஆர்காவ் மண்டலத்தின் schafisheim பகுதியில் நடந்துள்ளது . சம்பவத்தை குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததால் போலீசார் விரைந்து வந்து பார்க்கும்போது 44 வயதான பெண்ணொருவர் மூச்சின்றி கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இதனையடுத்து சம்பவம் […]
பிரிட்டன் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஓப்ரா வின்ஃப்ரே உடனான அளித்த பேட்டி சற்றும் எதிர்பாராத விதமாக சுவிட்சர்லாந்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஓப்ரா வின்ஃப்ரே அணிந்திருந்த கண் கண்ணாடி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே அதை போன்ற கண்ணாடிகளை செய்யக்கோரி மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். மேலும் வின்ஃப்ரே அணிந்த கண்கண்ணாடி gotti நிறுவனரான ஸ்வென் கோட்டியால் செய்யப்பட்டது. ஹரி- மேகன் பேட்டிக்காக வின்ஃப்ரே இந்த கண்ணாடியை வாங்கியுள்ளாராம். மேலும் இந்த […]
ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவலால் திட்டமிட்டபடி மார்ச் 22 ஆம் தேதி அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஸ்விட்ஸர்லாந்தில் இந்த மாதம் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 1491 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது .இதற்கு காரணம் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 1 முதல் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியதால் தான் அதிகமாக பரவியுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டனிலுள்ள உருமாறிய கொரோனா […]
ஸ்விட்ஸர்லாந்தில் இஸ்லாமிய பெண்களை பர்தா அணிய தடை செய்ய மேற்கொண்ட வாக்கெடுப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பெரும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் ஃபர்தா அணிய தடைக்காக வாக்ககெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 51.2% வாக்காளர்கள் பொது இடங்களில் பர்தா மற்றும் முக மறைப்பு அணிவதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.மேலும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிற்கு வழிவகுத்த அரசியல் பிரச்சாரத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நாடுகளுடன் சுவிட்சர்லாந்தும் இணைந்து விட்டதாக ஐக்கிய மனித உரிமை ஆணையர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
தமிழர்கள் 4 பேர் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற மாநிலசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சுவிட்சர்லாந்து சொலத்தூண் மாநிலசபைத் தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடுமையாக மக்கள் பணி செய்ததால் போட்டியிட்ட பிற தலைவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியதாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டனர். இதில் பராஹ் ருமி என்ற தமிழ் பெண் சொலத்தூண்-லெபெர்ன் பிரதேசத்தில் 3522 […]
புதுவகை கொரோனா வைரஸ் ஸ்விஸ் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இத்தாலிய கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . ஐரோப்பாவிலேயே பிரிட்டனுக்கு அடுத்ததாக இத்தாலியில் தான் அதிகமாக கொரோனாவால் மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது .இதுவரை பிரிட்டனில் 1,24,000 பேரும் அடுத்ததாக இத்தாலியில்1,00,000 பேரும் கொரோனாவால் இறந்துள்ளனர். இதற்குமுன் தாய்லாந்தில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிய வகை வைரஸ் இப்போது சுவிஸிலும் வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்கிய நபர் சமீபத்தில்தான் எகிப்தில் இருந்து வந்ததாக […]
சுவிட்சர்லாந்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் அத்தியாவசியம் இல்லாத இடங்கள் என்ற பிரிவின்படி கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவை மார்ச் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், விலங்கியல் பூங்காக்கள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு சுவிஸ் அரசு அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. வெளியிடங்களில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 15 பேர் வரை பங்கேற்பதற்கு அனுமதி […]
ஸ்விட்ஸர்லாந்து அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . பிரிட்டன் – ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கொரோனா தடுப்பூசிக்காக போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து ஸ்விட்ஸர்லாந்து விலக உள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஸ்ட்ராஜெனெகாவுடன் சுவிட்சர்லாந்து கடந்த அக்டோபரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதில் 5.3 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்விட்ஸர்லாண்ந்து அதிகாரிகள் தற்போது இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு விரும்பவில்லை. ஆனால் நாட்டில் தடுப்பூசி அங்கீகரிக்கப்படவில்லை என்றால் அத்தகைய முடிவு எடுக்க […]
ஸ்விட்ஸர்லாந்தில் குழந்தைகளுக்காக ஏற்கனவே போட்ட விதிகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய குழு அறிவித்துள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிப்ரவரி 8ஆம் தேதி முதல் நடைமுறையில் இருந்த நுழைவு விதிகளை மாற்றி புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்ஸர்லாந்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதியை மாற்றி, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டாம் என்ற விதி போடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வணிகக் காரணங்களுக்காக சில நாட்கள் […]
தனது ஏழு வயது சிறுவனுக்காக பனிவீடு ஒன்றை கட்டி எதிர்பாராமல் நிகழ்ந்த சோகம் சுவிட்சர்லாந்தில் அரங்கேறியுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் டரஸ்ப் என்ற பகுதியில் தன் 7 வயது மகனுக்காக தந்தை ஒருவர் பனிவீடு ஒன்றை கட்டியுள்ளார். அதில் தந்தையும் மகனுமாய் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் அந்த வீடு நிலைகுலைந்துள்ளது.அதனால் தந்தை ,மகன் இருவர் மீதும் பணி முழுவதும் விழுந்து அதில் சிக்கி தவித்துள்ளனர். பின் தந்தை மட்டும் எப்படியோ போராடி வெளியே வந்துள்ளார் .ஆனால் தன் மகனை காணவில்லை. […]
கொரோனா கட்டுப்பாடுகளை ஸ்விட்சர்லாந்தில் தளர்த்த வேண்டாம் என்று நிபுணர்கள் பலர் மத்திய குழுவிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர். ஸ்விட்ஸர்லாந்தில் எதிர்வரும் வாரத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி வரும் மத்தியகுழு அறிவிக்க இருக்கின்றது. இந்நிலையில் கொரோனா குறைந்து வரும் நேரத்தில் எதற்க்காக இந்த கடுமையான கட்டுப்பாடுகள் என்று மக்களிடம் பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைப்புகள் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி முதல் ஊரடங்கு முழுமையாக தளர்த்தி அனைத்து கடைகளும் திறந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் எனவும் […]
ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அலென் பெர்ஸட் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை மறைத்ததாக அவர் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தின் சுகாதாரத் துறை அமைச்சர் மீது அமைச்சரான அலென் பெர்ஸட் கொரோனா இரண்டாவது அலையை தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்த பெடரல் சுகாதாரத்துறை அழைப்பின் ஆவணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பெடரல் சுகாதாரத்துறை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி பெடரல் கவுன்சிலுக்கு 12 பக்க ஆவணங்களை கொடுத்து, இதனை வலியுறுத்துமாறு தெரிவித்துள்ளது. […]