Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

IND vs PAK : எங்கள் மகனை சொல்லட்டும்…. எந்த பிரச்சனையும் இல்லை…. அர்ஷ்தீப் சிங்கின் பெற்றோர் கருத்து என்ன?

இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நாங்கள் அதை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறோம் என்று அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நிறுத்துங்கள்…. வேணும்னு யாரும் பண்ணமாட்டாங்க…. ஆதரவு கொடுத்த ஹர்பஜன் சிங்..!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அர்ஷ்தீப் சிங்கிற்கு ட்விட்டரில் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனியே இருந்தாலும் CSK பிளே ஆப் போயிருக்காது”….. ஹர்பஜன் சிங்….!!!!!

15வது ஐபிஎல் சீசன் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதலில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தற்போது அணியில் இருந்து விலகியுள்ளார். இதனிடையே சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் தோனி ஆரம்பத்திலேயே கேப்டனாக இருந்து இருந்தாலும் இந்த முறை சிஎஸ்கே-வால் பிளே ஆப் சென்றிருக்க முடியாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். சென்னையில் வலுவான பந்துவீச்சில் இல்லை. பேட்ஸ்மேன்களும் அந்த அளவிற்கு விளையாடவில்லை.இதைத் தவிர சிஎஸ்கே சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி தான் கேப்டனாக இருக்கிறார்”….. ஹர்பஜன் சிங் அதிரடி….!!!!

15வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி அறிவித்தார். தற்போது ஜடேஜா கேப்டனாக உள்ளார். இந்நிலையில் தோனிதான் சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். பீல்டிங் செட்டு செய்யும் பொறுப்பை முற்றிலுமாக தோனியிடம் கொடுத்துவிட்டு ஜடேஜா எல்லைக்கோடு அருகே நிற்பதை குறிப்பிட்ட அவர், பேட்டிங் மற்றும் பௌலிங் என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜடேஜா தன்னை ஒரு கேப்டனாக நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவங்க 2 பேர் கழுத்து மேல கத்தி தொங்குது” …. சீனியர் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை ….!!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (11-ம் தேதி) கேப்டவுனில் தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும்  வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அணியில் ஓரங்கட்டப்பட்ட காரணம் எனக்கு தெரியல” ….! ‘தோனி கிட்ட கேட்டும் பதிலும் இல்ல’ -ஹர்பஜன் சிங் ….!!!

 இந்திய டெஸ்ட் அணியில் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 1998ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் . இதில் குறிப்பாக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளவர் 417 விக்கெட் கைப்பற்றி உள்ளார் .இதைப்போல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலுக்கு தாவும் ஹர்பஜன் சிங்?…. நிறைய ஆஃபர் வந்திருக்காம்…. அவரின் விருப்பம் என்ன?….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஒரு காலத்தில் ஹர்பஜன் சிங் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டதும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், ஹர்பஜன் சிங்குடன் இருப்பது போன்ற புகைப்படத்தை போடவே ஹர்பஜன் காங்கிரஸுக்குப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“711 விக்கெட் சாதாரண விஷயம் அல்ல” ….! ‘ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் புகழாரம்’ ….!!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  அனைத்து  வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து  ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார் இந்த நிலையில் அவருக்கு விடைதரும் வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீடியோ ஒன்றை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.!!

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்து, வாழ்க்கையில் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டிலிருந்து  இன்று விடைபெறுகிறேன், இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மனமார்ந்த நன்றி”. என்று பதிவிட்டுள்ளார்.. இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 டி20 கிரிக்கெட் போட்டிகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘புதிய அவதாரம் எடுக்கும் ஹர்பஜன் சிங்’ ….! வெளியான முக்கிய தகவல் ….!!!

சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்  ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆலோசகராகவோ பகுதி நேர பயிற்சியாளராகவோ  அல்லது வழிகாட்டியாகவோ  செயல்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார் .ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் ஸ்பின்னராக மாறியதே ஹர்பஜன் சிங் பாத்துதான்” ….! சுவாரஸ்ய தகவல் பகிர்ந்த அஸ்வின் ….!!

நான் ஸ்பின்னர் ஆனதற்கு  காரணம் ஹர்பஜன் சிங் தான் என அஸ்வின் கூறியுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் அஸ்வின்  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாம்  லாதமின் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 418-வது விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின்  418 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் அனில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஹர்பஜன் சிங் ரெகார்டை முறியடித்த அஷ்வின்”…..! ‘ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்து அசத்தல் ‘….!!!

இந்திய  அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டை கைப்பற்றி ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வந்தது இதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது இன்னிங்சில் டாம் லாதம் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தியதன் மூலம் 418-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 418 விக்கெட்டுகள் கைப்பற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா? வெளுத்து வாங்கிய ஹர்பஜன்சிங் …!!

பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார். டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது. இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்பஜன் சிங்குக்கு தமிழில் வாழ்த்து சொன்ன ‘சின்ன தல ரெய்னா’…..!! வைரலாகும் ட்விட்டர் பதிவு ….!!!

இந்திய  அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ள படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளார் படம் ‘பிரண்ட்ஷிப்’. இதில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இப்படம் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது  . இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாளை முதல் ‘பிரண்ட்ஷிப்’ படம்  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா இணைந்து நடிக்கும் புதிய படம்…. வெளியான அப்டேட்….!!!

பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பிரெண்ட்ஷிப்’. இத்திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியாவும் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சதீஷ், KPY பாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தற்போது தமிழில் உருவாகி வரும் இப்படத்தினை ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிரண்ட்ஷிப்’ படப்பிடிப்பை முடித்த ஹர்பஜன் சிங்… டிரைலர் எப்போ ரிலீஸ்?…!!!

ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் சதீஷ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்த படம் பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பூமி உள்ளவரை உன் கலை பேசும்… நீ நட்ட மரங்கள் பேசும்… ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்..!!

நடிகர் விவேக் மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழனின் தாய்மடி கீழடி… ஹர்பஜன்சிங் ட்வீட்… வைரலாகும் புகைப்படம்…!!!

ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படம் பற்றி ஹர்பஜன்சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. ஜான் பால்ராஜ் மற்றும் சாங் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரண்ட்ஷிப். ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழனின் தாய்மொழி கீழடி, தமிழ்நாடு என்னை அரவணைக்கும் ஒரு அன்னை மடி. எந்த சொல்லிலும் அடங்காது வேஷ்டி கட்டிய தருணம். இந்த summer நம்ம படம் #friendship […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எனக்கு அவ்வளவு வயதாகவில்லை” ஓய்வு பற்றி ஹர்பஜன் சிங் அதிரடி பதில்….!!

ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவதற்கான முடிவினை நான் எடுக்கவில்லை என்றும் தனக்கு வயதாகவில்லை என்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஹர்பஜன்சிங் தனியார் சேனல் ஒன்றில் பேட்டியளித்த போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது தாங்கள் என் திறமையினை ஆராய விருப்பப்பட்டால் இளம் வீரர்களின் சிறந்தவராக கருதும் ஒருவரை என்னுடன் போட்டியிட சொல்லுங்கள். அப்போட்டியில், பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலும்? குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் […]

Categories
கிரிக்கெட் புதுக்கோட்டை விளையாட்டு

7 வயது சிறுமி வன்கொடுமை… நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்… ரொம்ப கஷ்டமா இருக்குயா… ஹர்பஜன் சிங் வேதனை..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, “நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்” என்று  ஹர்பஜன் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சூழலில் உயிரிழந்த அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

மனிதம் எங்கே…? எதுக்கு சாகிறோம்னு தெரியாம அப்பா..மகன் மரணம்….. ஹர்பஜன் சிங் கண்டனம்….!!

தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்தன் காரணமாக வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரசிகர்கள் உடல் நலனுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் – சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்

ரசிகர்களுக்காக காலி மைதானத்தில் விளையாட தயார் என சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் விளையாட்டுப்போட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே போல் இந்தியாவிலும் மார்ச் 29 தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பின் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் கிரிக்கெட்டைப் பற்றி சிந்திக்கவில்லை”… மக்களை விட அது பெரிது கிடையாது… கவலையில் ஹர்பஜன்!

கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான் கிரிக்கெட்டைப் பற்றி துளியும் யோசிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 6 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியிருக்கின்றனர். இதனால் உலகில் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்திர […]

Categories

Tech |