Categories
கொரோனா

ஓணத்திற்கு பின் தொற்று அதிகரித்ததாக மட்டுமே கூறினேன் – ஹர்ஷ்வர்தன்…!!

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே கூறியதாகவும், அம்மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளது என குறிப்பிட வில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் விளக்கமளித்துள்ளார். டெல்லியிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் நேற்று உரையாடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாகவும், ஓணம் பண்டிகையின்போது பொது முடக்கத்தில்  தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று  […]

Categories
தேசிய செய்திகள்

கோலாகலமாக பண்டிகை கொண்டாட எந்த கடவுளும் கேட்கவில்லை – ஹர்ஷ்வர்தன்…!!

பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடும் படி எந்த கடவுளும் கேட்கவில்லை என்றும் தற்போது கொரோனாவை எதிர்த்து போராடுவதே முதல் தர்மம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மருத்துவத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நவராத்திரி விழா, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடங்க உள்ளதால் உயிரை பணயம் வைத்து பண்டிகை கொண்டாட வேண்டுமா என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் இன்று மட்டும் இறப்பு விகிதம் சுமார் 3.2% ஆக உள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.7% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்த காலகட்டங்களில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது”. நாடு முழுவதும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா காரணமாக முழு நாட்டையும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு நாம் தயார்படுத்தியுள்ளோம்: ஹர்ஷ் வர்தன்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.3% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் மீட்பு விகிதம் 29.9% ஆகவும் உயர்ந்துள்ளது எனவும் இவை மிகச் சிறந்த குறிகாட்டிகள் என கூறியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கான இரட்டிப்பு விகிதம் சுமார் 11 நாட்கள், கடந்த 7 நாட்களில் இது 9.9 நாட்கள் உள்ளது என கூறியுள்ளார். மேலும், பல வளர்ந்த நாடுகளைப் போல […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 1,813 புதிதாக கொரோனா உறுதி… இரட்டிப்பு விகிதம் 11.3 நாட்கள் ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

தற்போது கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,813 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 31787 பேரில், 22982 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுவரை 1008 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7797 ஆக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரேபிட் டெஸ்ட் கிட் இந்தியாவிலே தயாரிக்கப்படும் – ஹர்ஷ் வர்தன்

கொரோனா துரித பரிசோதனை கருவிகள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 7 நாட்களாக, 80 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்..!

கடந்த 7 நாட்களாக சுமார் 80 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இன்று பயோடெக்னாலஜி துறையின் தன்னாட்சி நிறுவனத்துடன் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் உரையாடல் நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” கடந்த 14 நாட்களில், நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 8.7 ஆகவும், கடந்த 7 நாட்களுக்கு இது 10.2 நாட்களாகவும் உள்ளது. கடந்த 3 நாட்களில், இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் சுமார் 400 மாவட்டங்களை கொரோனா தாக்கவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

இந்தியாவின் சுமார் 400 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும், கொரோனா வைரஸ் பாதித்த பகுதிகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டள்ளது என அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” ஜனவரி 7ம் தேதி சீனாவில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸை சமாளிக்கும் திட்டம் குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் – ராகுல் காந்தி!

மத்திய அரசு கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் கூறுவது, டைட்டானிக் கப்பலின் கேப்டன், தனது கப்பல் மூழ்காது, எனவே யாரும் பயப்பட வேண்டாம் என பயணிகளுக்குச் சொல்வது போல உள்ளது என ராகுல்கந்தி தெரிவித்துள்ளார். சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இந்தியாவில் டெல்லி மற்றும் […]

Categories

Tech |