கோவில்பட்டியில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி இன்று தொடங்குகின்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆண்கள் ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.ஆர் நகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, கோவில்பட்டி கே.ஆர் கல்லூரி ஜி.வி.என் கல்லூரி, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, அரசு கல்லூரி பாளையங்கோட்டை, ஜான்சி கல்லூரி, தூய சேவியர் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் […]
Tag: ஹாக்கி
பவினா பட்டேல் இந்திய குஜராத் மாநிலம் மெக்சனா நகரை சேர்ந்த இணை மேசை பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் தற்போது நடைபெறும் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி சுற்றிற்கு தகுதி பெற்று தங்கம் பெரும் வாய்ப்பினை கொண்டுள்ளார். தனது சர்க்கர நாற்காலியில் இருந்து மேசை பந்தாட்டம் விளையாடும் பட்டேல் பல தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 2011 தாய்லாந்தில் நடந்த உலகளாவிய மேசை பந்தாட்ட போட்டியில் […]
சிய சீனியர் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த போட்டியின் முடிவில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இணைந்த நிலையில் டை பிரேக்கர் மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் […]
வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை கண்டறிவதற்கு ஆரம்பமாக ஹாக்கி போட்டியை தொடங்கி வைத்தார் கலெக்டர். வேலூர் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர்களை வழிநடத்தி அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் மையம் அமைக்கப்பட்டு தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இதன் ஆரம்பமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஆக்கி போட்டியை மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் தொடங்கி […]
டோக்கியோ ஒலிம்பிக் 2020 தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது. ஆனால் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் 2 -1 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இதனிடையே வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி, இன்று பிரிட்டனை எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே வரிசையாக கோல் அடித்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3 – 2 என்ற […]
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் […]
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த பஞ்சாப் வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசுத் தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆடவர் ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷேர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு தலா ஒரு கோடி பரிசு வழங்கப்படுகிறது […]
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. கடைசி […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர் 1980 ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில், ஹாக்கியில் இந்திய அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் மகளிர் பிரிவில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், நான்காவது இடத்தை இந்திய பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய மகளிர் அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்ட நிலையில் , 40 ஆண்டுகளுக்கு பின்பு […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டன் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
மகளிர் ஹாக்கி… இந்தியா அபார வெற்றி…!!!
டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒரு போட்டியில் மகளிர் பிரிவு ஹாக்கி அணி அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் ஹாக்கி மகளிர் பிரிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி உள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாக அமைந்தது. ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருக்கும் நேரத்தில் இந்திய அணியின் நவ்நீட் கவூர் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். நாளை காலை 8 […]
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் ஜூனியர் காலமானார். இந்திய ஹாக்கி அணி முன்னாள் பல்பீர் சிங் ஜூனியர். இவருக்கு வயது 88. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தூக்கத்தில் இருந்த போதே உயிரிழந்தார். 1958இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடினார். பஞ்சாப் பல்கலை அணியை வழிநடத்திய இவர் உள்ளூர் போட்டியில் பஞ்சாப், ரயில்வே, சர்வீஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 1962இல் ராணுவத்தில் இணைந்த இவர் 1984 […]
இந்தியா – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் அர்ஜென்டினா அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய அணியை வீழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் காரணமாக இந்திய மகளிர் ஹாக்கி அணி சர்வதேச சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய அணி அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணியுடன் மோதியது . இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஆரம்பத்திலிருந்தே அர்ஜென்டினா ஜூனியர்ஸ் அணி […]
ராணி ராம்பால் தலைமையிலான இந்திய பெண்கள் ஹாக்கி அணி, வரும் ஜன. 17 முதல் 31 வரை, 8 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க அர்ஜென்டினா செல்கிறது. அர்ஜென்டினா செல்லக்கூடிய அணியில் 25 வீராங்கனைகள் உட்பட 32 பேர் கொண்ட இந்திய அணியினர் இருப்பர். “அர்ஜென்டினா தொடரில் கிடைக்கும் அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த பயிற்சியாக அமையும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே இலக்கு. இம்முறை டோக்கியோவில் புதிய வரலாறு படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் […]
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் […]