சீனாவில் அரசியல் பொருளாதாரம் ஆதிக்கம் கடந்த பத்து வருடங்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமானவர் இந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் இவர் கடந்த 2013 ஆம் வருடம் சீனாவின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அதனை தொடர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய சட்டதிட்டங்களையும் பல்வேறு துறைகளில் மாற்றங்களையும் கொண்டு வந்து சீனாவை கட்டமைத்துள்ளார். இவரது ஆட்சியில் சீனப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது இதனை அடுத்து கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற ஆளும் சீன கம்யூனிஸ்ட் […]
Tag: ஹாங்காங்
சீன நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற கூட்டத்திலும் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. […]
ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி நேற்று இரவு 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் […]
ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் […]
ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது. 2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் […]
ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஹாங்காங் அணி கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக அந்த அணி போராடியது. இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹாங்காங் 152 ரன்கள் எடுத்து மிரட்டியது. […]
ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் எனும் வனவிலங்கு பூங்காவில் உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உயிரிழந்தது. ஓஷன் பார்க் வனவிலங்கு பூங்காவில் “ஆன்-ஆன்” என்ற ராட்சத பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வந்தது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் பாண்டா என்ற பெருமையை பெற்ற இது, வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தது. அந்த பாண்டாவிற்கு வயது 35. மனிதர்களின் வயது படி கணக்கிட்டால் இந்த பாண்டாவிற்கு 105 […]
ஹாங்காங் நாட்டில் உலகிலேயே அதிக வயது கொண்ட பாண்டா கரடி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் என்ற வனவிலங்கு பூங்காவில் மிகப்பெரிய பாண்டா கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அதன் பெயர் ஆன்-ஆன். உலகிலேயே அதிக வயது கொண்ட அந்த பாண்டா கரடி நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வயது 35. ஆனால் மனிதர்களின் வயது அடிப்படையில் கணக்கிடும்போது அதன் வயது, 105. தற்போது, உயிரிழந்த அந்த பாண்டா கரடிக்கு தனியாக பூத் அமைத்துள்ளனர். […]
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியதாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். சீனா நாட்டில் ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜி ஜின்பிங் கூறியதாவது “சீனா நாட்டுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் […]
பிரபலமான உணவகம் கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் கடந்த 44 வருடமாக ஜம்போ மிதவை உணவகம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த உணவகம் ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாகவும் மிதவை உணவகம் மூடப்பட்டது. இந்த உணவகம் மூடப்பட்டு இருந்தாலும் அதை அடிக்கடி பராமரித்து வந்தனர். ஆனால் பராமரிப்பு செலவு அதிகமானதால் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
ஹாங்காங்கின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜம்போ கப்பல் உணவகம். 1976-ம் வருடம் சேவை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்த்து வந்தது. ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
ஹாங்காங்கின் புது தலைவராக ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் ஹாங்காங் இங்கிலாந்தின் காலனியாக செயல்பட்டு வந்தது. எனினும் கடந்த 1997ஆம் வருடம் ஹாங் காங்கை சீனாவிடம், இங்கிலாந்து ஒப்படைத்து விட்டது. இதையடுத்து ஹாங்காங், சீனாவின் இருசிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இதற்கிடையில் மற்றொன்று மக்காவ் ஆகும். ஹாங்காங்கை சீனாவிடம் இங்கிலாந்து ஒப்படைத்த போது விதிக்கப்பட்ட முக்கியமான நிபந்தனை, அங்கு சுந்திரம் இருக்க வேண்டும், பேச்சு சுதந்திரம் ஆகிய உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே ஆகும். […]
பெரும்பாலான மக்கள் பேருந்தில் நீண்ட நேரம் பயணம் செய்யும் போது அசந்து தூங்கி விடுவார்கள். சிலர் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி இடத்தை பிடித்து தூங்கிவிடுவார்கள். இப்படி பலரும் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்து செல்லும்போது தன்னை அறியாமலேயே தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி தூங்குவதற்காகவே ஒரு பஸ் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை… ஹாங்காங் நாட்டில் தூக்கம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்த டபுள் […]
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு இரண்டு வார கால தடை விதிக்கப்பட்டது. உலக நாடுகளில் ஏற்பட்ட தொற்று காரணமாக இந்த தடை அமலுக்கு வந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து மற்றும் […]
ஹாங்காங் நகரில் வருகின்ற மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று அதன் தலைவர் கூறியுள்ளார். சீனாவின் ஆளுகையிலிருக்கும் ஹாங்காங் நகரின் தலைவராக கேரி லாம் உள்ளார். இந்த நகரிலுள்ள பொதுமக்களை நாடுகடத்த அனுமதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து ஒருகட்டத்தில் அனைவரும் லாம் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ஹாங்காங் நகரில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற […]
ஹாங்காங் நாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு விதிக்க பட்டிருந்த தடைய நீக்குவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஹாங்காங் நாட்டிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என்று ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஹாங்காங் தலைவர் கேரி லாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 9 நாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள […]
அமெரிக்கா, ஹாங்காங்கில் பெற்றோரிடமிருந்து, பிள்ளைகள் பிரிக்கப்படும் நிலை இருப்பதால் அங்கு பயணிக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்கில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் அங்கு பல மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அங்கு […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காக்கில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 6,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்திய சீனா, இம்முறை அதிக பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் 12,000 நபர்களுக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே, ஹாங்காங் அரசு அறிகுறி இல்லாமல் லேசான பாதிப்பு உடைய நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையான குளிரில் வெளியில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் இந்த மாத தொடக்கத்தில் தினசரி உறுதி செய்யப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்காக உயர்ந்து, நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குவது தான் முக்கிய காரணம் […]
ஹாங்காங் அரசு கொரோனா பரவல் காரணமாக வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கிறது. செல்லப்பிராணிகளை விற்கும் ஒரு கடையில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே அரசு, வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைகளில் இருக்கும் வெள்ளெலிகள் அனைத்தையும் கொல்ல உத்தரவிட்டது. மேலும், கடந்த மாதம் 22ஆம் தேதிக்கு பிறகு வெள்ளெலிகளை வாங்கிய உரிமையாளர்கள் விலங்கு நல மையங்களில் அவற்றை ஒப்படைத்து விடுமாறு அறிவிக்கப்பட்டது. அங்கு அவற்றை கொன்று விட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனவே, அங்கு உரிமையாளர்களிடமிருந்து விலங்கு நல ஆர்வலர்கள் […]
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு கருத்துக்களை வெளியிட்டு வந்த ஸ்டாண்ட் நியூஸ் எனப்படும் இணையதளம் முடக்கப்பட்டது. ஹாங்காங்கின் ஸ்டாண்ட் நியூஸ் இணையதளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனியும் இதனை நடத்த முடியாது எனவும், நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விரைவில் பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளது. முன்னதாக இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள் 6 பேர் திடீரென கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனநாயக கருத்துக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டு வந்த ஆப்பிள் டெய்லி […]
ஹாங்காங் சட்டப்பேரவைத் தேர்தலில் மிதவாதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு எதிராக சீன ஆதரவு வேட்பாளர்கள் ஏராளமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதனிடையில் ஹாங்காங் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் திங்கட்கிழமை வெளியான நிலையில் சீன ஆதரவு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதுதொடர்பாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியபோது “தேர்தலில் 30.2 சதவீத வாக்குகளே பதிவான […]
ஹாங்காங்கில் குதிரை பந்தயத்தில் கலந்து கொண்ட 2 குதிரைகள் பலத்த காயங்களுடன் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் உள்ள ஷா டின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச குதிரை பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தின் போது தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வீராங்கனையான லைல் ஹெவிட்சன் ஓட்டி சென்ற குதிரை எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று குதிரைகள் விழுந்து கிடந்த குதிரையின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தன. இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் மைதானத்தில் […]
ஹாங்காங்கில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங் நகரில் இருக்கும் ஹாஸ்வே பே என்னும் பகுதியில் 38 மாடிகள் உடைய மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. அங்கு, உணவகங்கள், உலக வர்த்தக மையத்தின் கிளை போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கட்டிடத்தின் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதன்பின்பு, தீ வேகமாக கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. […]
தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் இவற்றைத் தாண்டி ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒமைக்ரான் தொற்று பரவி வர ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஹாங்காங்கில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த ஒரு ஹோட்டலில் இரு வேறு அறைகளில் எந்தவித தொடர்பு இல்லாமல் இருந்த இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்திய இருவருக்கு இடையில் ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது ஆய்வாளர்களை திகைக்க வைத்துள்ளது. இரண்டு பேரும் 24 மணிநேர சிசிடிவி கண்காணிப்பில் […]
நிம்மதியாக உறங்க 5 மணிநேரம் போகக்கூடிய பயணத்திற்கு டூர் ஏஜென்சி ஒரு டபுள்-டெக்கர் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் ஒரு உள்ளூர் டூர் ஏஜன்சி எந்த தொல்லையும் இன்றி அமைதியாக உறங்குவதற்கு தனிப்பட்ட ஒரு பேருந்து சர்வீசைத் தொடங்கியுள்ளது. இதில் 52 மைல் வரை செல்லும் இந்த பயணம் ஹாங்காங் மக்கள் நிம்மதியாக எந்த தொந்தரவும் இன்றி உறங்க உதவியாக இருக்கிறது. இதனிடையில் மக்கள் நீண்ட நேரம் செல்லும்போது சிறிது நேரம் நம்மை அறியாமலேயே உறங்குவது வழக்கமாக இருக்கிறது. […]
ஹாங்காங்கில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வந்ததால், அதிகாரிகள் ஏழு பன்றிகளை விஷ ஊசி செலுத்தி கொன்றுள்ளனர். ஹாங்காங்கில், மக்கள் காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள். இதனால், நகரப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த வாரத்தில், காவல்துறை அதிகாரி ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியுள்ளது. எனவே, காட்டு பன்றிகளுக்கு உணவு கொடுத்தால் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதிகாரிகள் விஷ ஊசி செலுத்தி 7 பன்றிகளை கொன்றதற்கு, விலங்கு […]
ஸ்கூபா டைவிங் வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக நீச்சல் குளம் ஒன்றை ஹாங்காங் அரசு வடிவமைத்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள மக்கள் ஸ்கூபா டைவிங்கிற்காக தைவான் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தைவான் அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் மக்கள் ஹாங்காங்கிலேயே முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஸ்கூபா டைவிங் வீரர்களை உற்சாகமூட்டும் வகையில் ஹாங்காங் அரசு 82 அடி நீள நீச்சல் குளத்தை வடிவமைத்துள்ளது. […]
ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் அதிகமாக பெட்ரோல் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 200 ரூபாய். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான விலை சுமார் 110 ரூபாக்கும் மேல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும், ஈரான், அல்ஜீரியா, குவைத் மற்றும் சிரியா உட்பட ஒரு சில நாடுகளில் தற்போதும் ஒற்றை இலக்கத்திலான விலையில் தான் பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெனிசுலா நாட்டில், 1 […]
சர்வதேச அளவில் தேடப்படும் நபருக்கு உதவியதற்காக அகதிகள் மற்றும் வழக்கறிஞர் ஒருவரை அதிகாரிகள் அடித்து துன்புறுத்தினர். அமெரிக்காவை சேர்ந்த Edward Snowden என்பவர் அந்நாட்டு உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்டதால் சர்வதேச அளவில் தேடப்படுகிறார். இவருக்கு மனித உரிமைகள் வழக்கறிஞர் Robert அடைக்கலம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால், அது ஹாங்காங்கில் அமைந்துள்ள அகதிகள் வாழும் பகுதி, அங்குதான் பிலிப்பைன்சை சேர்ந்த அகதி குடும்பம் ஒன்றும் இலங்கை அகதிகள் சிலரும் வசிக்கின்றனர். அங்குள்ள அகதிகளின் உதவியை Robert நாடியபோது, […]
ஹாங்காங்கில், சீனாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனநாயக ஆர்வலருக்கு 9 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, ஹாங்காங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், கடந்த வருடம் அங்கு சர்ச்சையான தேசிய பாதுகாப்பு சட்டத்தினை நடைமுறைப்படுத்தியது. இச்சட்டம் ஹாங்காங்கினுடைய ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இச்சட்டம், கடந்த வருடம் ஜூலை மாதத்தில் டாங் யிங் கிட் என்ற 24 வயதுடைய ஜனநாயக ஆர்வலர் மீது பாய்ந்திருக்கிறது. இவர் […]
ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங் செல்பி எடுக்கும் பொழுது மலை அருவியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் சோபியா சியுங். இவர் தனது நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை, மலையேறுபவர்கள் இடையே பிரபலமான ஹா பாக் லாய் என்ற பூங்காவிற்கு மலை பயணம் சென்றுள்ளார். அங்கு பூங்காவின் அன்னாசி மலை தளத்தில் உள்ள ஒரு அருவியின் விளிம்பில் நின்று சோபியா சியுங் செல்பி எடுத்துள்ளார். […]
ஹாங்காங்கில் தீவிரவாதத்தில் ஈடுபட முயற்சித்த பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஹாங்காங்கில் தீவிர போராட்டங்கள் நடந்துள்ளது. இதையடுத்து சீனா கடந்த வருடம் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தினை போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் விடுதி ஒன்றில் வெடிகுண்டுகளை தயார் செய்ய முயற்சித்த ஆறு மாணவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். […]
டெட்டா வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . இங்கிலாந்து நாட்டின் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் கடந்த சில நாட்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது .மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் விமானங்கள் ஹாங்காங்கிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது . இந்த பயணிகள் விமானங்களுக்கான தடை வரும் […]
ஹாங்காங்கின் தினசரி பத்திரிக்கை நிறுவனமானது, அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் தன் பதிப்பை நிறுத்தியதற்கு, தைவான் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் ஹாங்காங் உள்ளது. எனவே சீன அரசு, ஹாங்காங்கில் ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்கின் தினசரி பத்திரிகை நிறுவனம் அரசிற்கு எதிரான கருத்தை வெளியிட்டதால், அதன் பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தைவான் அதிபர், இந்த செயலுக்கு தான் வருத்தம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஹாங்காங்கின், சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தைவான் உதவி […]
ஹாங்காங்கில் பிரபல கோடீஸ்வரியை அமலாக்க துறை அதிகாரி போல பேசி கோடி கணக்கில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் ஹாங்காங்கை சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரி ஆன 90 வயதான பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை ஒரு அமலாக்கத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். இதன்பின் சீனாவின் கடுமையான கிரிமினல் வழக்கில் உங்கள் அடையாளம் இருப்பதாகவும், உங்களிடம் […]
இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுவதால் ஹாங்காங் அரசு விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் 2-ம் அலை காட்டுத்தீ போல் பரவி கொண்டு வருகிறது. ஆகையால் பல நாடுகள் இந்தியாவுடன் கூடிய விமான சேவையை ரத்து […]
இந்தியாவுடனான விமான போக்குவரத்து சேவையை துண்டித்துக் கொள்வதாக ஹாங்காங் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்து சேவையை ஹாங்காங் அரசு நாளை முதல் […]
சீனாவில் ஹாங்காங் நாட்டு தேர்தலுக்கான புதிய திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஹாங்காங் நாட்டிற்கான தேர்தல் சீர்திருத்தத்திற்கான வரைவு திட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்தது. இதனால் ஹாங்காங்கில் நடைபெறும் தேர்தலில் சீன நாட்டினர் மட்டுமே போட்டியிட முடியும் என தெரிகின்றது.மேலும் அந்த கூட்டத்தில், ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் குழுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் […]
சீனாவில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் சீனாவுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டத்தை அதிகரித்துக் கொண்டு வருகின்றனர். கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங்கை தனிநாடாக செயல்பட பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது. அன்றுமுதல் ஹாங்காங் சீனாவின் பகுதியாக கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் மூலமாக ஹாங்காங்கில் சீன கம்யூனிச அரசு முழுவதுமாக கையகப்படுத்த முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹாங்காங் மக்களை பிரிட்டனில் குடியேற விசா கட்டுபாடுகளை பிரிட்டன் பிரதமர் […]
சீன கம்யூனிச அரசாங்கத்தின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி ஹாங் ஹாங் நாட்டு பொதுமக்கள் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 1997ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் ஹாங்காங் இருந்தது. அதற்கு பின்பு ஹாங்காங் தனி நாடாக செயல்படுவதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சீனகம்யூனிச அரசு தனது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹாங்காங்கை முழுவதுமாக தன்வசப்படுத்த முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பிரிட்டன் பிரதமர் […]
ஹாங்காங் மக்கள் பிரிட்டனில் வாழ புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் எதிரொலியாக சீனா கடந்த ஆண்டு புதிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு BNO பாஸ்போர்ட் பயண ஆவணமாக செல்லுபடி ஆகாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பிரிட்டனில் இன்று பிற்பகல் முதல் பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யவும் வசிக்கவும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BNO பாஸ்போர்ட் […]
ஹாங்காங்கில் 36 வயது நபர் ஒருவர் செக்ஸ் பொம்மையை நிச்சயதார்த்தம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது கட்டாயம் ஒரு சமயத்தில் நடக்கும். ஆனால் சிலர் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சில பரிகாரம் செய்வது வழக்கம். அதன்படி சில விலங்குகளுக்கு.தாலி கட்டி பரிகாரம் செய்து கொள்வர் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால் ஹாங்காங்கை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஹாங்காங்கை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் செக்ஸ் […]
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க ஹாங்காங் நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்த பட்டிருப்பதால், வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். அந்தந்த நாடுகளில் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இந்த விமானங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் ஹாங்காங்கில் […]
ஹாங்காங்கில் பத்திரிக்கை சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் அனைவரும் செய்தித்தாள்களை வாங்கி குவித்து வருகின்றனர். ஹாங்காங்கின் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பில் டெய்லி என்ற தினசரி செய்தித்தாள் மிகவும் பிரபலமாகி வருகிறது.இந்தச் செய்தி தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டும் என்ற கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கை நிறுவனரான ஜிம்மி வாய்(72) மற்றும் […]
அரசிற்கு எதிராக ஆன்லைனில் பதிவு வெளியிட்ட நான்கு நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சீனா அரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 1996 ஆம் ஆண்டு வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரு விதிமுறைகள் என்ற அடிப்படையில் மூலம் தன்னாட்சி பிராந்தியமாக ஹாங்காங் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் தனது பிடியை நெருக்கும் […]
ஹாங்காங்கில் இருக்கும் விமான நிலையத்தில் 40 வினாடிகளில் கொரோனா தொற்றை கொல்லும் அறை ஒன்றை வடிவமைத்துள்ளனர். ஹாங்காங் விமான நிலையத்தில் சோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட இந்த அறையின் உள்ளே பூசப்பட்டுள்ள கிருமிநாசினி மனிதர்கள் மீது இருக்கும் கொரோனா தொற்று வைரஸ் உட்பட அனைத்து கிருமிகளையும் கொள்ளக்கூடியது. ஒருவர் அறைக்குள் சென்ற 40 வினாடிகளில் அனைத்து கிருமிகளும் உயிரிழந்து விடும். https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/01/334036610190652087/636x382_MP4_334036610190652087.mp4 உலகிலேயே முதன்முறையாக CLeanTech sanitation pods எனப்படும் இந்த அறைகளை பயன்படுத்துவது ஹாங்காங் விமான […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கிருமிநாசினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹாங்காங் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அங்கு தொற்றின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் தோற்று பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்ள பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது அந்நாட்டு அரசு. அதன் ஒரு முயற்சியாக விமான நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]