நடிகர் விஜய் வாரிசு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஹெச்.ராஜாவை தாக்கி பேசியுள்ளார். ஒருமுறை பாஜகவின் ஹெச்.ராஜா போட்ட டிவீட் சர்ச்சையான நிலையில் ‘எனது அட்மின்தான் அப்படி ட்வீட் செய்தார்’ என்று கோர்ட்டில் சொல்லி தப்பித்துக் கொண்டார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24 ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது நடிகர் விஜய் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை பாடினார். பின்னர் பேசிய அவர், ஹெச்.ராஜாவின் ட்வீட்டை கேலி […]
Tag: ஹெச் ராஜா
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த 7 தமிழர்களும் விடுதலை ஆகியுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவாகரத்தில் காங்கிரஸ் பக்கம் நின்று பாஜகவும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் ஹெச்.ராஜா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணியை விட்டு […]
பழனி இடும்பன் குளத்தில் நடைபெற இருக்கும் மகா சங்கமம் ஆரத்தி நிகழ்ச்சிக்கு எச் ராஜாவுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை .இந்த நிலையில் தடையை மீறி செல்வதாகக் கூறிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எச். ராஜா உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் […]
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காட்டைச் சேர்ந்த முகமது அலி வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற இடத்தில் மசூதி தோற்றமுடைய கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனக்கூறி மனு அளிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுமாறும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு நீதிமன்ற தீர்ப்பு அறிவித்து 4 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அந்த கட்டிடத்தை அகற்றவில்லை. இதனால் உடனே அந்த கட்டிடத்தை அகற்றக்கோரி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் […]
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜ.க இந்த 4 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “நாடு முழுவதும் பாஜக அலை அடிக்கிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்பித்துக் கொள்ள முடியாது. முத்தலாக் தடை சட்டம் கொண்டு […]
கிறிஸ்தவ பள்ளிகள், பள்ளிகள் போல் அல்லாமல் மதமாற்றும் கேந்திரங்கள் போல் செயல்படுவதாக எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை திநகரில் உள்ள கமலாலயத்தில் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு சிறுவர்கள் ருத்ராட்சம், திருநீர் அறிந்திருந்த காரணத்தினால் ரவுடி போல இருப்பதாக கூறி ஆசிரியர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அரியலூர் மாணவி உயிரோடு இருந்திருப்பார். அரியலூர் மாணவியை […]
கோவையில் கோவில் கும்பாபிஷேக விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் ரூ.2500 ரொக்க தொகை வழங்கப்பட்டது. அப்போது தற்போதைய முதல்வர் மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க கோரினார். ஆனால் அவருடைய ஆட்சியில் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி ஏழை மக்களை ஏமாற்றிவிட்டார். மேலும் மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் மளிகை பொருட்கள் கலப்படம் மற்றும் […]
பாஜக அறிவித்துள்ள போராட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஹெச். ராஜா இடம்பெறாமல் இருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது . கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காமல் உள்ளதால் […]
கோவில்களில் இருப்பதையெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபும் கோணிச் சாக்கை போட்டுக்கொண்டு கஜினிமுகமது போல் சென்றதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கோணிச்சாக்கை தோளில் போட்டுகொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனார்கள் இந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினும், சேகர்பாபுவும். வேறு ஏதும் செய்யல. எப்படியாவது கோவிலை அழிச்சுடனும், கோவிலில் இருப்பதையெல்லாம் எடுத்துவிடனும் என கோணிச்சாக்கை போட்டுக்கிட்டு, கஜினி முகமது போல போனாங்க. […]
தமிழக அரசு ஒரு ஹிந்து விரோத அரசு எனவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைத்து கோவில்கள் முன்பும் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்து பேசியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஹெச். ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறும் ஓநாய் கூட்டத்தை ஊராட்சி […]
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் […]
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் பாஜக சார்பாக டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜ அவர்களை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் […]
அனைத்து நாட்களிலும் கோவில்களில் வழிபாடு செய்யலாம் என்ற அறிவிப்பை வெளிவந்ததை தொடர்ந்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது குடும்பத்தினர் மற்றும் பாஜக தொண்டர்களுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள கொப்புடை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அவர் , “கோவில்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் வழிபாட்டுத்தலங்கள் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, அனைத்து நாட்களும் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று பாஜக போராட்டம் மற்றும் மாநில பாஜக தலைவர் உறுதியான நிலைப்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது. பாஜகவின் கோரிக்கையை ஏற்று […]
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமவள கொள்கையை எதிர்த்து கண்டன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை தவறாகப் பேசியதால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைக் சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்தது காங்கிரஸ் கட்சியினர் இடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது சுற்றுப்பயணமாக பல்வேறு மாவட்டங்களை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் குறிப்பாக ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்தார். இதனையடுத்து இவரின் இந்த செயலானது சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் […]
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுயதற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தது. இதனையடுத்து தான் பயன்படுத்திய வார்த்தையில் எந்த தவறும் இல்லை என்றும், அதற்கான விளக்கம் விக்கிபீடியாவில் இருக்கிறது என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், பத்திரிகையாளர்களிடம் ஹெச்.ராஜா உபயோகித்த வார்த்தைகளுக்கும் எனக்கு தெரிந்த அளவிற்கு ஆங்கில அகராதியில் எந்த அர்த்தமும் கிடையாது. அது விமர்சனத்திற்கு உருவாக்கப்படும் ஒரு கொச்சையான வார்த்தை. பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் அப்படியான […]
பாஜக முன்னாள் தலைவர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்கள் முன்னிலையிலே ஊடகங்களை இழிவாகப் பேசி உள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களை சமாதானப்படுத்தும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “பாரதிய ஜனதா கட்சி அனைத்தும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூணாக உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்தின் மீது பெரிய மரியாதையை வைத்துள்ளது. பத்திரிகையாளர்களின் பங்கானது தமிழக பாரதிய ஜனதா […]
தமிழக அரசானது பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “பாஜகவினர் தொடர்ச்சியாக, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத் துறையை இழிவாக பேசுவது மற்றும் அவமரியாதை செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது கருத்தை […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் 64வது பிறந்தநாள் விழா தனியார் மண்டபம் ஒன்றில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதிப் பிரச்சனையாக உருவாகி கலவரத்தை உண்டாக்குகின்றனர். இதற்காகவே சில அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக தமிழக அரசு ரவுடிகளை கைது செய்து வருகிறது. தமிழகத்தில் பூங்காக்கள், தியேட்டர், மால்கள், பள்ளிகள் திறந்துள்ளன. ஆனால் […]
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஊடகங்கள் குறித்தும், செய்தியாளர்கள் குறித்தும் தவறான வார்த்தை கூறியதையடுத்து பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்யும் படியும் கண்டனம் வலுத்து வந்தது. இந்நிலையில் காரைக்குடியில் ஹெச்.ராஜாவின் 64வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், ருத்ரதாண்டவம் திரைப்படமானது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம். இதில் யார் மீதும் மத ரீதியான தாக்குதல் கிடையாது. ஒருவர் மதம் மாறிவிட்டால் பட்டியலின மக்கள் பெரும் […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டத்தில் சீமான் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “அமெரிக்காவைப் பார்த்து ரொம்ப நாள் கடந்து விட்டதால் தற்பொழுது பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி பலநாடுகளை சுற்றியதால் ஏதேனும் பயன் உள்ளதா? மாற்றம் ஏதும் நிகழ்ந்து உள்ளதா? இந்தியாவை ஆண்ட வெள்ளைக்காரர்களை துரத்திவிட்டு தற்பொழுது இங்க வர்த்தகம் செய்ய வருமாறு விமானம் மூலம் […]
பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருகிறார். எந்த ஒரு கருத்துக்கும் எதிர்வினையாற்றுபவர்களை தேசவிரோதிகள் என்று சொல்லும் அவர் ஊடகங்களை பலமுறை தரக்குறைவாக சாடியுள்ளார். அதன்படி பாலியல் தொழிலாளர்களை குறிக்குதும் கொச்சையான ஆங்கிலச் சொல்லை வைத்து பத்திரிக்கையாளர்களை இணைத்து வைத்து பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது ருத்ரதாண்டவம் படம் குறித்து பேசிய போது பத்திரிக்கையாளர்களை மீண்டும் அவர் தரக்குறைவாக பேசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
சீமான் யாரு ? சீமான் அம்மா முதலில் தமிழச்சியா ? அந்த அம்மா தமிழா ? என்ன பீகாரி என்கின்றான் ஒரு முட்டாள் , நான் பச்சை தஞ்சாவூரான் என ஹெச்.ராஜா ஆவேசமாக பேசினார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழ் பேசத் தெரியாத சில பேர் தமிழன் என சொல்லிட்டு இருக்கீங்க. ஹிந்துவும் தமிழும் வெவ்வேறு என்று சொன்னது யாரு? ஹிந்து இல்லன்னா தமிழ் எங்க வந்தது ? தமிழ் […]
அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்படும் கல்லூரியில் மாற்று மத ஆசிரியர்களை போடுவீர்களா ? என ஹெச்.ராஜா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், மானிய கோரிக்கையின் போது அறிவித்த எல்லா அறிவிப்பும் அவருடைய அதிகாரத்துக்கு மீறியது. காரணம் இப்போ என்ன சொல்கிறார்கள்… நாங்கள் இத்தனை கல்லூரி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள். இரண்டு நாட்கள் கழித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நான் கல்லூரி ஆரம்பிக்கப் […]
அறநிலையத்துறையை கண்டித்து நீதிமன்றம் சொன்ன தீர்ப்பை காட்டி ஹெச்.ராஜா பேசினார். செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கோவில் நகை எல்லாம் உருக்கப்போகிறார்களாம் . அதில் இருக்கிற வைரம், வைடூரியம் இதெல்லாம் என்ன பண்ண போகிறார்கள். அதெல்லாம் கொள்ளையடிப்பதற்க்கா ? இந்து கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது திராவிட இயக்கத்தவர்களால்.. பொங்கலூர் பழனிச்சாமி கலைஞர் கருணாநிதியின் இன்ஜினியரிங் கல்லூரியில் சிதம்பரம் நடராஜருக்கும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்ருக்கும் வில்வ பூஜைக்காக எழுதிவைத்த அறக்கட்டளை நிலம் இருக்கா ? இல்லையா ? […]
பிரதமர் மோடி பிறந்த செப்டம்பர் 17ம் தேதிதான் சமூகநீதி நாள் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.. தமிழக அரசு விநாயகர் சிலையை மக்கள் அனைவரும் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றும், பொது வெளியில் வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும் தெரிவித்தது.. ஆனால் நேற்று தமிழக அரசின் உத்தரவை மீறி தஞ்சாவூர், ஈரோடு உட்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முற்பட்டனர்.. இதனால் போலீசார் சிலையை பறிமுதல் […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய […]