Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… மணிக்கு 75 கிலோமீட்டரா?… துபாயை கலக்கப்போகும் பறக்கும் படகு…!!!

துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய பறக்கும் படகானது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. துபாய் அரசு, சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரகத்தின் நிறுவனத்துடன் சேர்ந்து தி ஜெட் என்னும் பறக்கும் படகை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சொகுசு படகாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 8 லிருந்து 12 நபர்கள் இதில் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹைட்ரஜன் எரிசக்தி கொண்டு இயங்கக் கூடிய இந்த படகின் சோதனை விரைவில் துபாயில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஓட்டுநர் இல்லாமல்….. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ‘மினி பஸ்’….!!!!!

எஸ்டோனியா நாட்டில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாமல் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் மினிபஸ் அறிமுகமாகியுள்ளது. இந்த வாகனம் ஹைட்ரஜன் மூலம் இயங்குவதால் காற்று மாசுபடாது. ஒருமுறை இதில் ஹைட்ரஜன் புல் டேங்க் செலுத்திவிட்டால் சுமார் 7 மணி நேரங்களுக்கு தடையில்லாமல் பயணிக்கலாம். இந்த மினி பஸ்சில் ஒரே நேரத்தில் ஆறு பேர் பயணிக்கலாம். காற்று மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளிலும் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |