பெண் ஒருவர் பணத்திற்காக 15 வயது சிறுமியை 57 வயது நபருக்கு திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 57 வயது நபரொருவர் சட்டவிரோதமாக 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு தலைமறைவாக உள்ள அந்த 57 வயது நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சில கடன்களை செலுத்த வேண்டியிருந்த அந்த சிறுமியின் அத்தை சமீபத்தில் அந்த 57 வயது நபரிடம் […]
Tag: ஹைதராபாத்
அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலையின் குறுக்கே சென்ற காரின் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் அருகே கார் ஒன்று சிக்னலின் போது சாலையை கடக்க முயன்று உள்ளது . அப்பொழுது அங்கு வந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று அங்குள்ள சந்திப்பில் ரெட் சிக்னல் […]
150 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக சட்டசபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சயான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் […]
பாஜக இளம் வாக்காளர்கள் கவரக்கூடிய வகையில் ஒரு வித்தியாசமான வாக்குறுதியை அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என்று இளம் வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் பாஜக வித்தியாசமான வாக்குறுதியை அறிவித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசும் பொருளாக […]
வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]
பெங்களூரு – ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இதில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. […]
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஜானி பாஸ்டோ, டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் என வலுவான பேட்டிங் வரிசையும் ரஷீத் காந்த், நடராஜன் உள்ளிட்ட திறமையான பவுலர்களையும் கொண்டுள்ளது ஹைதராபாத் […]
ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆந்திர மாநில வனத்துறை ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள வனத்துறையில் 59 வயதுடைய ரமணா மூர்த்தி என்பவரை ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.அவர் ஹைதராபாத் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென அந்த குடியிருப்பு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து ஐபிஎஸ் அதிகாரி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனை கூலிப்படை வைத்து ஆணவக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹேமன் என்பவர் அவந்தி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூன் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத் நகரில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் […]
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பவுலிங்கில் பலம் வாய்ந்த 3 அணிகளை பற்றி பார்ப்போம்.. ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.. இதற்காக அனைத்து அணிகளும் மிக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பதால் பந்துவீச்சில் எந்த அணி பலமாக இருக்கிறதோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆகவே பந்துவீச்சில் பலமாக உள்ள […]
ஹைதராபாத் நகரத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நகரம் என அங்கீகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட மொஸம்ஜாஹி சந்தையை நேற்று தெலங்கானா நகராட்சி நிர்வாக மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி. ராமராவ் திறந்து வைத்தார். மொஸம்ஜாஹி சந்தை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மஹ்மூத் அலி, தலசனி சீனிவாஸ் யாதவ், சபிதா இந்திரா ரெட்டி, வி. ஸ்ரீனிவாஸ் கவுடா, மக்களவை உறுப்பினர் கே. கேசவ ராவ், அசாவுதீன் ஓவைசி, […]
ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம், வாகனங்கள், புதிய வகை போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஏழு பேர்களில் முகமது அப்சார், மிர்சா அஸ்வக், முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் என்ற ஐந்து பேரும் சேர்ந்து ஐதராபாத்தில் ரியல்எஸ்டேட் உரிமையாளரான அகமது என்பவரின் வீட்டில் இருந்து ரூபாய் 2.5 கோடி பணத்த கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப் போல் […]
பதவிப்பிரமாணத்தை பிரதமர் மோடி மீறிவிட்டார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இது பற்றி ஓவைசி கூறியதாவது: “மதச்சார்பின்மை கொண்ட நாடான இந்தியாவில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார். ராமர் மீது கொண்ட […]
ஹைதராபாத்தில் 130 கிலோ எடை கொண்ட ஆடு பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிக்காக பலி கொடுக்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பால், பழம், தானியங்கள் கொடுத்து வளர்க்கப்பட்ட 130 கிலோ எடையுள்ள ஆடு ஒன்றினை பக்ரீத் பண்டிகைக்கு குர்பானிக்காக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பலி கொடுக்க இருக்கின்றனர். இதுபற்றி அந்த ஆட்டின் உரிமையாளர் முகமது சர்வார் கூறுகையில், “வருடம் தோறும் பக்ரீத் பண்டிகை அன்று ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையுடன் இருக்கக்கூடிய விலங்குகளை கடவுளுக்கு படைப்பது வழக்கம். அவ்வாறு செய்வதனை பல […]
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு அவருடைய புதிய “பவர் ஸ்டார்” படத்தின் போஸ்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ‘பவர் ஸ்டார்’ எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை இவர் தனது இணைய வழி திரையரங்கில் விரைவில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படத்தின் போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. சுவரொட்டிகளை அரசாங்க சொத்துக்கள் மீது ஒட்டியதற்காக ஹைதராபாத் பெருநகராட்சி ராம்கோபால் வர்மாக்கு 4 ஆயிரம் ரூபாயை அபராதம் விதித்துள்ளது.
ஹைதராபாத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் நடிகை நயன்தாரா உட்பட பலருக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழும் இந்த நில மோசடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. ஒரு சில ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் சாமானியர்கள் பாதிக்கப்படும் செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம் இப்போதோ பிரபலங்கள் பலர் ரியல் எஸ்டேட் […]
கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த தாயால் தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவி விடும் என்று கூறி வீட்டினுள் அனுமதிக்காத சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம் நகரைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயால், தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் […]
கொரோனாவால் இறந்த இளைஞரின் சடலத்தை, மயானத்திற்கு ஜேசிபியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டத்தில் ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் கடந்த மாதம் திருப்பதிக்கு சென்று வந்தார்.. கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதும் இல்லாததால், பரிசோதனை செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தான் அந்த இளைஞருக்கு திடீரென்று நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் […]
கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கி சேவை செய்து வருகின்றனர் ஹைதராபாத் இளைஞர்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ சிகிச்சை பெறுவது மிக அவசியம். அவ்வாறு சிகிச்சை பெறும் பொழுது அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கதி என்னவாகும் என்று யோசித்து உள்ளனர் ஹைதராபாத் இளைஞர்கள். இதனால் கவனிப்பு இல்லாமல் இருக்கும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.விலங்குகள் உரிமை ஆர்வலர் பன்னீரு தேஜா தான் […]