வட அமெரிக்காவின் கரீபியன் தீவுநாடான ஹைதி பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வட அமெரிக்காவின் தீவுநாடான ஹைதி நாட்டில் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் கலவர பூமியாக மாறி இருக்கிறது. அந்நாட்டின் அதிபரான ஜோவினெலை படுகொலை செய்யப்பட்டது முதல் பல இடங்களில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விலைவாசிஉயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. 2 மாதத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 […]
Tag: ஹைதி
பகாமஸ் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஹைதி நாட்டைச் சேர்ந்த 17 அகதிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் 60 பேர் ஒரு படகில் சென்றுள்ளனர். அந்த படகு பகாமஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் சென்ற போது திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த பகாமஸ் ராயல் காவல் படை மற்றும் ராயல் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். அதில் தற்போது வரை […]
ஹைதி நாட்டை சேர்ந்த சுமார் 300 அகதிகளோடு அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி என்ற கரீபியன் தீவு நாட்டில் கடந்த வருடத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிபர் ஜோவினல் மொசி, கூலி படைகளால் கொல்லப்பட்டார். எனவே, அந்நாட்டிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், ஹைதியை சேர்ந்த சுமார் 300 க்கும் அதிகமான மக்கள் ஒரு படகில் அமெரிக்காவை நோக்கி பயணித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள புளோரிடா […]
ஹைதி நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் சூப்பை மனிதகுல கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்து ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. பூசணிக்காயை பிரதானமாகக் கொண்டு காய்கறிகள், இறைச்சி, பாஸ்தா மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், அடிமைத்தனம், காலனித்துவம், இனவெறியில் இருந்து தங்களை விடுவித்த சுதந்திரத்திற்கான அடையாளம் என்று ஹைதி தூதர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் மற்றும் சூப்பின் உரிமையை பெற்றது எங்களுடைய கௌரவம் மற்றும் கண்ணியத்தை குறிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 60க்கும் மேலானோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு போன்றவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் வடக்கில் உள்ள கேப்-ஹைடியனில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓன்று விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிலிருந்து வெளியேறிய பெட்ரோலை பாத்திரங்களில் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தீயினால் லாரி வெடித்து சிதறியுள்ளது. அதில் 60 பேர் […]
அதிபரை கொலை செய்தவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹைதி நாட்டின் அதிபராக இருந்த ஜோவேனல் மொய்ஸ் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரின் மனைவியும் சில காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 18 […]
அமெரிக்க அரசு சிறப்பு குழு ஒன்றை ஹைதியில் கடத்தப்பட்ட அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேரை பாதுகாப்பாக மீட்பதற்காக ஹைதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்டோ பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த கிறிஸ்தவ ஊழியர்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தங்கள் குடும்பத்தினரோடு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனத்தை மர்ம கும்பல் ஒன்று தடுத்து […]
கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் முயற்சியால் கடந்த சில வருடங்களாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தது. இந்த நிலையில் அண்மையில் அந்நாட்டின் அதிபரான ஜோவனல் மோயிஸ் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின் கடத்தல் கும்பல்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது. ஹைதியின் தலைநகர் போர்ட் […]
ஹைதி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,300 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவான ஹைதியில் கடந்த சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனிடையே அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கமானது ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் போட்டாஸ் பிரின்ஸ் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், […]
ஹைதி நாட்டில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1.297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என […]
ஹைதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒரு பெண்ணும் குழந்தையும் மாட்டிக்கொண்ட வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதியில், நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவானது. ஹைதியின் தலைநகரான Port-au-Prince-க்கு மேற்கில் 7.5 மைல் தூரத்திலும், Petit Trou de என்ற நகரத்திலிருந்து, 5 மைல் தூரத்திலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவானதாக புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. Rescuers dig out a woman and child […]
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் […]
ஹைதி நாட்டு அதிபரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட 24 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கரீபியன் தீவிலுள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள செய்தியை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ” ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனால் மாய்சே படுகொலையில் ஜூன் லகுவேல் சிவிலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தலைமை […]
ஹைதி அதிபரின் இறுதிசடங்கில் ஏற்பட்ட கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கூலிப்படை ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் மனைவி படுகாயமடைந்தார். இதனை அடுத்துஅவர் அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் திரும்பியுள்ளார். இந்த நிலையில் ஜோவெனால் மாய்சே இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த இறுதிச்சடங்கில் அதிபரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் தனது மூன்று பிள்ளைகளுடன் கலந்து […]
ஹைதி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு குறித்த செய்திகளை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்ச்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா குடியுரிமையுள்ளவர்கள் இருவர், கொலம்பியா நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ஜோல் […]
ஹைதி நாட்டில் அதிபர் கொலை செய்யப்பட்டதால், வன்முறை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மாய்சேவை, மர்ம கும்பல் அவரின் இல்லத்தில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் அவரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அதிபரின் கொலைக்கு காரணமான, வெளிநாட்டு கூலிப்படையினர் 28 பேரை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்வதற்காக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டபோது கூலிப்படையை சேர்ந்த மூவரை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். மேலும் 17 பேர் […]
ஹைதி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய காரணமாக இருந்த அமெரிக்க மருத்துவர் கைதாகியுள்ளார். கரீபியன் தீவில் அமைந்திருக்கும் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ்(53), கடந்த 7-ந்தேதி அன்று போர்ட் அவ் பிரின்சில் இருக்கும் அவரின் வீட்டில் வைத்து ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்தது. இதில், அதிபர் ஜோவனல் மோயிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இக்கொடூர சம்பவத்தில், அவரின் மனைவி மார்ட்டின் மோயிஸ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் […]
ஹைதி நாடானது வறுமையில் தவிக்கும் போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரின் மனைவிக்கு விலையுயர்ந்த பங்களா ஒன்றை வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹைதி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோனி செலஷ்டினாவால் மீண்டும் கவனம் ஈர்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவிக்கு கனடாவில் பங்களா ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த மாளிகையின் விலையானது 3.4 […]
ஹைதி அதிபர் ஜோவெனால் மாய்சே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற கொலம்பிய ராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் 2 அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் […]
ஹைதி நாட்டு அதிபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கரீபியன் கடலில் பல்வேறு தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. அந்த நாட்டில் இருக்கும் போர்ட்டோ பிரின்ஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று மர்ம கும்பல் ஒன்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இக்கோரச் சம்பவத்தில் அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவும் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் […]