கடந்த சில நாட்களில் நடந்த அக்னிபத் போராட்டங்களில் ரெயில் எரிப்பு மற்றும் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களால் ரெயில்வே துறைக்கு சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tag: 000 கோடி
அபுதாபியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஜேஎஸ்சி அதானி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் மீது இரண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டில் 15 ஆயிரத்து 185 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின்படி அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களில் தலா 3830 கோடி ரூபாயும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது 7700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில் 1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]