Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு…. அவலாஞ்சியில் பதிவாகிய வெப்பநிலை….!!

அவலாஞ்சியில் -1 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளது. இதனால் தென்மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியான அவலாஞ்சியில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்று அவலாஞ்சியில் -1 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Categories

Tech |