தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு செயல்படுத்தப் படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் TNPSC, TRB உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Tag: 10% இடஒதுக்கீடு
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்., விசிக. மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாது என்பது உறுதியாகியுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் தீர்ப்பு அளித்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப் போவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தத் தீர்ப்பு […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தற்பொழுது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசு வழக்கறிஞ்சர் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோபர் மூத்த வழக்கறிஞர்- இவர் ராஜ்யசபா எம்.பிஆகவும் இருக்கிறார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோரெல்லாம் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் […]
மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது கடந்த மூன்று முறை நான் நீட் தேர்வில் கலந்துகொண்டு 565 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசாணை மூலம் தனது வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதாகவும், 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட இடம் அளிக்கப்பட்டு இருப்பதால் அரசு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதுகுறித்து இன்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும், இந்த ஆண்டே இதனை செயல்படுத்த முடிவு செய்யப்படும் தெரிவித்திருக்கின்றார். நீட் தேர்வை பொருத்தவரை […]