பாகிஸ்தான் நாட்டில் சுமார் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவிற்கு எதிரான தேசிய செயல்பாட்டு குழுவின் தலைவர் மற்றும் திட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஆசாத் உமர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் மொத்தமாக சுமார் 10 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இதில், சுமார் 75 லட்சம் மக்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் எடுத்திருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்” இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Tag: 10 கோடி மக்கள்
உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், உலகவங்கி, கடந்த 2020-ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியளிக்கும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அங்கு தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. அதிபர் ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]