கண்டமங்கலம் அருகில் கணவன் மனைவியை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் பூஞ்சோலை குப்பம் கிராமம் ஸ்ரீராம் நகர் நகரில் வசித்து வருபவர் ராஜாராம்(53). இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாராம் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாராம் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலையில் யாரோ […]
Tag: 10 பவுன் நகை திருட்டு
10 பவுன் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூசனூர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து குருலட்சுமி […]
லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் மீனாட்சி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் மீனாட்சி முத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து பீரோவில் இருந்த 10 பவுன் […]
வீடு புகுந்து 10 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஊராட்சி பகுதியில் கடம்பர வாழ்க்கை நடுத்தெருவை சேர்ந்த அயில்தாஸ் என்பவரின் மனைவி பத்மாவதி .இவரும் இவருடைய மருமகள் ரஞ்சிதாவும் சம்பவ தினத்தன்று வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர் .அப்போது நள்ளிரவு 1 மணியளவில் மாமியார் பத்மாவதி எழுந்து பார்த்த போது அவர் கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை […]