ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]
Tag: 10 பேர் பலி
ஈகுவேடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் கலவரம் வெடித்து 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகுவேடார் என்ற தென் அமெரிக்கா நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் சமீப நாட்களில் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டு பெரும் வன்முறையாக மாறி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, அரசு இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு சிறையில் குழு தலைவர்களாக இருக்கும் நபர்களை பிற சிறைகளுக்கு மாற்ற தீர்மானித்தது. அந்த வகையில் […]
மாலத்தீவின் தலைநகரில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மோடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில் 10 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் தலைநகரான மாலேவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வாகனங்களை நிறுத்தக்கக்கூடிய இடத்தில் தீ பற்றி எரிந்து, குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதில் இந்தியாவை சேர்ந்த 9 நபர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருக்கும் […]
கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத […]
வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் […]
இந்தோனேசியாவில் பேருந்து நிலையத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் பள்ளி குழந்தைகள் உட்பட 10 நபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருக்கும் பிகசி நகரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியை சேர்ந்த சிறுவர்கள், நேற்று வகுப்பு முடிந்த பின் வீட்டிற்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக கார்த்திருந்துள்ளார்கள். அந்த சமயத்தில் திடீரென்று லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதிவேகத்தில் வந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. […]
மேற்குவங்க மாநிலம் கூச் பிகார் பகுதியில் வேன் ஒன்றில் கன்வர் யாத்திரை சென்ற 27 பக்தர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது இருந்த DJ சிஸ்டத்தில் இருந்த வயர் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு தான் முழுவதும் மின்சாரம் தாக்கியுள்ளது. அதில் வேனில் இருந்த பத்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . பலர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் […]
கொட்டி தீர்க்கும் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவ மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 […]
உருளை கீழே விழுந்து மஞ்சள் நிற விஷவாயு கசிந்ததால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜோர்டான் நாட்டில் அகுவாபா என்ற துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் ஒன்றில் கிரேன் உதவியுடன் பெரிய அளவிலான உருளை ஒன்று இறக்கப்பட்டுள்ளது. இந்த உருளை திடீரென கிரேனிலிருந்து நழுவி கப்பலில் விழுந்தது. இந்த உருளை விழுந்ததில் மஞ்சள் நிற விஷவாயு பெருமளவில் பரவி அந்த பகுதியை சுற்றிலும் சூழ்ந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த பகுதியிலிருந்த துறைமுக பணியாளர்கள் தப்பியோடினர். […]
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் நியூயார்க் மாகாணத்தின் ஒரு பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த 18 வயதுடைய ஒரு இளைஞர், திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு இருந்ததால் தகுந்த நேரத்தில் தடுத்து அதிக உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு […]
சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் […]
சோமாலியா நாட்டில் கண்ணிவெடி குண்டில் பேருந்து மாட்டி 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரத்திற்கு பயணிகளுடன் ஒரு பேருந்து புறப்பட்டிருக்கிறது. அப்போது ஜுபாலேண்ட் என்ற மாகாணத்தில் அரச படையினருக்கும், அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு சண்டை நடந்திருக்கிறது. இந்நிலையில், அந்த பேருந்தானது கண்ணிவெடியில் மாட்டியது. இதனால், பதறிய பயணிகள் மரண ஓலமிட்டனர். இக்கொடூர சம்பவத்தில் 10 பயணிகள் பலியாகினர். […]
மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் இருக்கும் செலாங்கோர் மாகாணத்தில் நேற்று இரவு சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் மற்றும் லாரி, ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் குழந்தைகள் 8 பேர் உட்பட 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேருக்கு காயம் […]
நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள நைஜீரியாவில் ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று கொலை, கொள்ளை உட்பட பணத்திற்காக பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கால்நடை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் சிறுவர்கள் ஏழு பேர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 நபர்கள் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியான சம்பவத்தில் அதிபர் ஜோ பைடன் இழப்பீடு அளிக்க தீர்மானித்திருக்கிறார். அமெரிக்க இராணுவத்தின் கவனக்குறைவால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒரு பணியாளரும் 7 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்பது நபர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வாகனம் […]
அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கிளாடிட் புயல் பாதிப்பால் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் கைவிடப்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காப்பகத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியுள்ளனர் . அதில் 4 முதல் […]
ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர். எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் […]
நைஜீரியாவில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் விமான விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா விமானப்படைக்கு சொந்தமான விமானம் அபுஜாவிலிருந்து கடுனாவுக்கு புறப்பட்ட போது கடுனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக நைஜீரிய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமான குழுவினர், நைஜீரிய ராணுவ தளபதி இப்ராஹிம் அட்டத்திரு உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் நைஜீரிய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. ஆனால் அந்த விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணம் எதுவும் தெரியாததால் ராணுவம் தரப்பில் […]
இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் ரம்ஜான் பெருநாள் அன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பண்டிகை கொண்டாடி கொண்டிருந்த ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர தாக்குதலில் அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் குடும்ப தலைவர் […]
ஆந்திராவில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் நடைபெற்ற விபத்தில் 10 பேர்களின் உடல் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமில்லபள்ளி என்னும் கிராமத்தில் உரிமம் பெற்ற சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இந்நிலையில் நேற்று பாறைக்கு வெடி வைப்பதற்காக பட்வெல் நகரத்தில் இருந்து வாகனத்தில் ஜெலட்டின் குச்சிகள் சுண்ணாம்பு குவாரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனத்திலிருந்து குச்சிகளை அங்கிருந்த தொழிலாளர்கள் இறக்கி வைத்து கொண்டிருக்கும் போது திடீரென அந்த ஜெலட்டின் […]
தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு வீட்டின் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. தெலுங்கானாவில் மட்டும் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் நேற்று கனமழை கொட்டி […]
ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு, இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமன்றி இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் […]
சோமாலியாவில் உள்ள சொகுசு ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷாபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி […]