Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜனவரி 1 முதல் அமல்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஊழியர்களுக்கு 214 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் வருகைப்பதிவை டிஜிட்டல் மயமாக்கும் பணி கடந்த ஆண்டு மே மாதம் […]

Categories
மாநில செய்திகள்

“100 நாள் வேலை திட்டம்” திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு…..? திடீர் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வழங்கவில்லை. இதை கண்டித்து தான் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலபாரதி தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளேவிவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்குங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில்…. இதையும் செய்ய கோரிக்கை…. விரைவில் வெளியாகும் முடிவு….!!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்க்காக அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அடிப்படையில் 2006 ஆம் வருடம் மத்திய அரசு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்கும் திட்டமான, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் புது குளங்கள் வெட்டுவது, குளம், குட்டை, ஊரணிகளை தூர்வாருவது, கரைகளை பலப்படுத்துவது, சாலை அமைப்பது ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்….!! 100 நாள் வேலை திட்டம்…. சென்னை மேயர் அறிக்கை….!!!

மேயர் பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி 2022 – 2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மேயர் பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி 2022 – 2023 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான நிதி மற்றும் செயல்திட்டங்கள் போன்ற அறிவிப்புகள் பின்வருமாறு: “ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக் காலங்களில், சென்னையில் வெள்ளம் மற்றும் மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது. பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.949 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!

கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகாத்மா காந்தி தேசிய […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. ரூ.1178 கோடி சம்பள நிலுவை… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதை எடுத்துக் கூறி உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கிராமபுறங்களில் உள்ள குடும்பத்திற்கு ஒரு நிதியாண்டில் உத்தரவாதமளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடல் உழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் ஒன்றாகும். 2021-2022 ஆம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லாரும் 100 ரூபாய் கொடுங்க… அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்… சாலைமறியலால் ஏற்பட்ட பரபரப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் பணம் கேட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள எல்லைமேடு, மங்கலமேடு, இந்திராநகர், கூடுதுறை, கட்டமராபாளையம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் திசையை ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணித்தள பொறுப்பாளராக வேலைபார்த்து வரும் கோகிலா […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேதனை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை அளித்து வந்தாலும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து, உண்ண உணவின்றி தவித்து வரும் நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு வேலை கிடைத்துள்ளதால், அவர்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்டம்…. தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு – நிதியமைச்சர் அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.61,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என கூறியுள்ளார். சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டம்: ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.20 உயர்த்த மத்திய அரசு உத்தரவு!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை ரூ.20 உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியம் உயர்த்தப்படுகிறது: தமிழக அரசு..!

100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]

Categories

Tech |