Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் தொடர்மழைக்கு இதுவரை 251 பேர் பலி…. 100 பேர் மாயம்…..!!!!!

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் தொடர்ந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களால் இதுவரை 251 பேர் மகாராஷ்டிராவில் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் மாயமாகியுள்ளனர்.25,500 -க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளன. அங்கு 259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

Categories

Tech |