மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி இடி மின்னலுடன் மிக கனமழை பெய்தது. இந்த மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் […]
Tag: 1000
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு இலவச பேருந்து பயணம், ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இலவச பேருந்து பயண திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றினார். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு இதுவரையிலும் 1,000 ரூபாய் வழங்கும் […]
தமிழகத்தில் கடந்த முறை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, நாங்க ஆட்சி பொறுப்பேற்றால் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1,000 உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசு இதுவரையிலும் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆளுங்கட்சி மீது எதிர்கட்சி தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறது. அதாவது பொய் வாக்குறுதிகளை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் […]
கோவாவில் 40 ஆண்டுகள் காணாத மழை பொழிவு காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக சுமார் 1000 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது: கோவாவில் வெள்ளத்தால் சத்தாரி, பிச்சோலிம், பாண்டா, தர்பந்தோரா, பார்டெஸ் மற்றும் பெர்னெம் ஆகிய தாலுகாக்களை மோசமாக தாக்கியுள்ளது. மற்ற பகுதிகளும் சேதமடைந்தன. மேலும் […]
தமிழகத்திலேயே முதல் கட்டமாக திண்டுக்கல்லில் ரூபாய் 20 கோடி செலவில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஆயிரம் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் குறைகளை முதலில் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஸ்தான் முகாம்களில் இலங்கைவாழ் தமிழர்கள் விடுத்த […]
அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கியுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பல மாவட்டங்களில் 2021- 22 ஆம் கல்வியாண்டுக்கான […]
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று 800க்கும் மேல் பதிவான பாதிப்பு இன்று ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி இன்று ஒரே நாளில் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 8 லட்சத்து 64 ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 8,45,178 பேர் குணமடைந்துள்ளனர். […]
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]