ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]
Tag: #108
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் 4 மாவட்டங்களில் 4 தேதிகளில் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த முகாம்களின் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர் ஆகிய பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி மோகன் வெளியிட்ட அறிக்கையில் தற்போது […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் இருந்து இரண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கம் அருகிலுள்ள தானகவுண்டன்புதூர் அருகில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த ஓடையில் இறங்கியது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஓடை தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். இந்த […]
தமிழகத்தில் முதன்முறையாக ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரியும் பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சலித்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உலகில் ஆண்கள் செய்யக் கூடிய அனைத்து விஷயங்களையும் பெண்கள் தயக்கமின்றி செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் ஓட்டுனராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வீரலட்சுமி என்ற அந்தப் பெண், இதற்கு முன்பாக சென்னை பகுதியில் கால் […]
ஆம்புலன்ஸ் வருகையை அறிய விரைவில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் பல இடங்களில் ஆம்புலன்ஸ் விரைவில் வருவதில்லை என்று தொடர்ச்சியாகப் பல புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது தி.மு.க. உறுப்பினர் சண்முகையா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் […]
சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூலூர் அருகே பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்து அப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதே பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ பின்னால் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 3 […]